0,00 INR

No products in the cart.

ஒரு பளார் ! இரண்டு பார்வைகள்

முகநூல் பக்கங்களிலிருந்து…

 

அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், ஆஸ்கரின் விருது பெரும் சிறந்த ஆவணப் படம் ஒன்றை அறிமுகம் செய்யும்போது,
சிறந்த நடிகருக்கான விருதை பெரும்,வில் ஸ்மித்தின்
மனைவி ஜடா பிங்கெட்-டின் முடியில்லாத தலையைப் பற்றி கேலி செய்து பேச, அதனால் வெகுண்ட நடிகர் வில் ஸ்மித் எழுந்து சென்று
க்ரிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இது சரியா என்பது குறித்து இரண்டு பார்வைகள்…

கன்னத்தில் அறைவது வன்முறை!

ஶ்ரீதர் சுப்ரமணியன்:

ஆஸ்கார் விருதுகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அங்கே இருக்கும் எல்லாரையும் கண்டமேனிக்கு கலாய்ப்பார்கள். அவற்றில் சகட்டுமேனிக்கு கிண்டல்கள் வரும். பல விவரணைகள் நமக்கு அதிர்ச்சிகரமாகவே கூட இருக்கும். அவை எல்லாமே சரியானவைதானா, என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாறாக அமெரிக்காவின் கருத்து சுதந்திரப் பாரம்பரியத்தின்படி பார்த்தால் அவை சரிதான். ஆஸ்காரின் பாரம்பரியத்தின்படி பார்த்தால் அவை சரிதான்.

அந்த சூழ்நிலையில் அப்படிப்பட்ட சில கமெண்ட்கள் கேட்பவருக்கு எல்லை மீறிப் போனதாக இருக்கும். அப்படி ஏதாவது கமெண்ட் உணர்வு ரீதியாக பாதித்திருந்தால் சம்பந்தப்பட்டவர் தனது எதிர்ப்பை பல்வேறு வகைகளில் பதிவு செய்திருக்கலாம். தனது முறை வரும்போது மேடை ஏறி நிகழ்ச்சித் தொகுப்பாளரை கண்டித்திருக்கலாம். அல்லது அதுவரை பொறுத்திருக்க இயலாவிடில் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கலாம். வெளியே வந்ததும் காத்திருக்கும் நிரூபர்களிடம் எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். ஒரு ட்வீட், ஒரு முகநூல் பதிவு கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்திருக்கும்.

இன்னும் சீரியசாக கோபத்தைக் காட்ட வேண்டுமெனில் தனக்கு வழங்கப்பட்ட ஆஸ்காரை மறுத்திருக்கலாம். அல்லது “தன் மனைவியை நக்கல் அடித்தவர் மன்னிப்பு கேட்கும் வரை ஆஸ்கார் விருதைப் பெற மாட்டேன்” என்று சொல்லி இருக்கலாம். அல்லது “ஆஸ்காரை எதற்கு விடுவானேன் என்றால் அதை வாங்கிக் கொண்டு நன்றியுரையில் தொகுப்பாளரை ஒரு பிடி பிடித்திருக்கலாம்.”

மாறாக, கன்னத்தில் அறைவது crazy அல்ல; அது violence.

 

ஆஸ்கரில் விழுந்த அறை,
இங்கும் விழ வேண்டும்!

காலசக்கரம் நரசிம்மா:

இங்கும் மைக் பிடித்தால் தாங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். Compering செய்தால், நகைச்சுவை என்கிற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், விவாதங்களின் நெறியாளர்கள் என்கிற போர்வையில் தாங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்டு மற்றவர்கள் மனதை புண்படுத்தலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

லக்ஷ்மண ரேகா ராமனின் மனைவிக்கு மட்டும் போடப்படவில்லை. அனைவரின் மனைவிக்கும் சேர்த்துதான் போடப்பட்டது. அது மனைவிகளுக்கு போடப்பட்ட ரேகை அல்ல, பிற ஆண்கள் அந்த எல்லையை கடந்து வரக்கூடாது என்பதற்காக போடப்பட்ட கோடு!

இங்கும் உருவ கேலியை வைத்துதான் எல்லாமே நடக்கிறது. நல்ல நேரம் திரைப்பட விமர்சனத்தில், எம்.ஜி.ஆர். ஐந்து யானைகளுடன், ஆறாவதாக கே.ஆர். விஜயாவுடன் நடித்தார், என்று கீழ்த்தரமாக ஒரு பத்திரிகை விமர்சித்தது. சோவின் மொட்டைத்தலை பற்றி கேலி செய்யாத தலைவர்கள் உண்டா ?தமிழிசையின் தலை ஸ்டைலை பற்றி கேலி செய்தவர்கள் எத்தனை பேர்?

”எனது மனைவியை பற்றி பேசாதே” என்று மூன்று முறை கூக்குரலிட்டார்.  பின்னர் அவர் க்ரிஸ்சிடம் மன்னிப்பு கேட்டாலும், அவர் அப்படி  மன்னிப்பு கேட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. உலகமே வில் ஸ்மித், க்ரிஸ் ராக்கை அறைந்தது தவறு என்று கூறினாலும், அவரது மனைவியின் கண்களில் அவர் ஹீரோதான்.

இப்படி, கன்னத்தில் அப்போதைக்கு அப்போதே கொடுத்து விட்டால், சமுதாயத்தில், சர்ச்சைகள் குறையும். பயில்வான் தனது கன்னங்களை insure செய்து கொள்வது நல்லது.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...