0,00 INR

No products in the cart.

திருப்புமுனை மனிதர்

அஞ்சலி

ன்றைக்கு நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னரே நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தன்னுடைய செம்மையான நிர்வாகத்தால் லாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாற்றி காட்டிய மனிதர் வி. கிருஷ்ணமூர்த்தி.

‘திருப்புமுனை மனிதர்’ என தொழிற்துறையினரிடையே புகழ்பெற்ற வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது 97வது வயதில் சென்னையில் காலமானார்.

பெல், மாருதி உத்யோக் மற்றும் SAIL ஆகிய நிறுவனங்களின் முன்னாள் தலைவர் வி. கிருஷ்ணமூர்த்தி. இவர் அந்நிறுவனங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

திருப்புமுனை மனிதர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘திருப்புமுனை மனிதர்’ வி. கிருஷ்ணமூர்த்தி இரண்டாம் உலகப்போரின்போது விமான நிலையங்களில் தொழில்நுட்ப வல்லுனராக தனது பணியை தொடங்கினார். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த இவர், சென்னை மின்சார வாரியத்தின் முக்கிய பதவியில் இருந்தார் என்பதும், மின்சார வாரியம் மிகப்பெரிய அளவில் வளர்வதற்கு அவர் காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1954 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவருடைய திறமையை மதித்து மின் திட்டங்களுக்கு பொறுப்பான திட்ட கமிஷனுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர், பெல் நிறுவனம் மிகப் பெரிய நஷ்டத்தில் இருந்த நிலையில் ‘அந்த நிறுவனத்தை காப்பாற்ற முடியாது’ என பலரும் முடிவு செய்திருந்தபோது, அந்த நிறுவனத்தை காப்பாற்ற தன்னுடைய முயற்சியை எடுத்து, அதன்பின் அந்த நிறுவனத்தை லாபகரமாக மாற்றினார்.

மாருதி நிறுவனத்தின் தலைவராக பதவியேற்ற வி. கிருஷ்ணமூர்த்தி, இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் நவீன சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார். மாருதி 800 மாடலை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தினார்.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் “தேசிய உற்பத்தித் திறன் கவுன்சிலின் தலைவராக பதவியேற்ற வி. கிருஷ்ணமூர்த்தி, மேலும் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.”

வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி கடந்த 1973ஆம் ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருதும், 1986 ஆம் ஆண்டு ‘பத்ம பூஷன்’ விருதும், 2007ஆம் ஆண்டு ‘பத்ம விபூஷன்’ விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜப்பானின் உயரிய சிவிலியன் விருதான ‘தி கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெல்லியில் குடும்பத்துடன் கழித்த
வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது இறுதி காலத்தை சென்னையில் கழித்தார். தனது குடும்ப நிறுவனமான UCAL ஃப்யூயல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்தார்.

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

 

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...