0,00 INR

No products in the cart.

ஆரம்பமே அசத்தலாகயிருக்கிறது.

 

உங்கள் குரல்

 

த்திய அமைச்சரவை சார்ந்த இலாகாவில் பல லட்சம் இந்திய இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் இருந்தும் அவைகள் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் மூலம் பலன் தரும் விஷயமாகவும் அமைத்து விட்டு, அக்னி பாத் சர்ச்சைகள் தேசத்தின் பாதுகாப்பு பாதுகாக்கப்படாமல், அவை ராணுவத்தில் பொழுதுபோக்குபோல அமைந்து விடாமல் இருந்தால் போதும்.

மோடியின் எட்டு ஆண்டுகள் அமைச்சரவை “அமித்ஷா வருகைக்கு முன் – பின்” என கட்டாயமாக பிரித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் ஷா அமைச்சரவையில் இடம் பெற்ற பின் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு தானா இந்தியா என்பது உலக நாடுகளில் விவாதப் பொருளாக மாறியது என்பது உண்மை.
– சி. கார்த்திகேயன், சாத்தூர் 

குமுதம் வார இதழ் ஆசிரியர் திரு. க. ராமச்சந்திரன் என்ற பிரியா கல்யாணராமன் தனது ஐம்பத்தி ஐந்தாவது வயதில் காலமானதை, அவரது நினைவுகளுடன் பாரதி பாலன் அஞ்சலி செலுத்தியதுடன் நாங்களும்  இனைந்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
– நா. குழந்தைவேலு, சென்னை -600129

கேஸ்பர், டயான் 43 ஆண்டுகளுக்குமுன் பிரிந்த உடன்பிறப்புகளின் சந்திப்பு நெகிழ்ச்சி மட்டுமல்ல மகிழ்ச்சியுடன் அறிவியலின் வளர்ச்சி என்பதை நிரூபித்தது.
வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்

ந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் நாட்டு மக்கள் யாருமே மகிழ்ச்சியாக வாழ்ந்தது போல் தெரியவில்லையே    மக்களின் வாழ்க்கையே பெரும் போராட்டம் ஆகிவிட்டது.
– வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில்

“வேண்டவே வேண்டாம் அக்னி பரிட்சை” என்ற “கல்கி” இதழின் “தலையங்கம்” நெத்தியடி. “இளைஞர்களின் நம்பிக்கையை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அரசு” என்று தெளிவாக எடுத்துரைக்கிறார் கல்கி.
– ராதிகா, மதுரை

ல்கி இதழில் வரும் சினிமா விமர்சனங்கள் மிகவும் அருமை. இந்த வாரம் வந்த O2 என்ற திரைக்கதைக்கு மிக அழகான விமர்சனம் நகைச்சுவை இல்லாமல் வித்தியாசமாக யோசித்து கதை செய்திருக்கும் விக்னேஷுக்கு பாராட்டு.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

ராசாரின் பதில்கள் விஞ்ஞானப்பூர்வமான, அறிவுசார்ந்த, சிந்தனையைத் தூண்டும்,  நக்கலும் சேர்ந்த கலவையாகும்.

‘மிருகங்களுக்கு தும்மல்’ குறித்த கேள்விக்கு தராசாரின் அறிவியல் விளக்கம் அருமை.

‘அக்னிபாத்’ யாருக்கு பயன்தரும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

பிராமணர்கள் குறித்த கேள்விக்கு தராசார் விளக்கம் ‘குன்றின் மேலிட்ட  விளக்காகும்’.

தி.மு.க.வினர்  நாத்திகவாதிகள் என்று கூறிய அர்ஜூன் சம்பத் ‘தி.மு.க.வில் மதவாதிகள் ஆதிக்கம் அதிகமாகி விட்டது’ என்று தற்போது கூறுவதற்கு ‘பெருமைப்பட்டுக் கொள்ளாலாம்’ என்று தராசார் தந்துள்ள பதில் சிந்தனைக்குரியதா? நக்கலுக்குரியா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். தராசாருக்கு நிகர் தராசாரே.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

வித்தியா சுப்ரமணியன் கதை ஆரம்பமே அசத்தலாகயிருக்கிறது. தொடர்ந்து படிக்கும் ஆவலைத்துண்டுகிறது.
– சாவித்திரி கணேஷ், பெங்களூரு

‘ஒரு நிபரின் டைரி தொடர்’ அருமை. ஒவ்வொரு வாரமும் நமது நிருபர்  ஒரு பிரபலத்தைப் பற்றி பேசும்படி அமைத்திருப்பது சிறப்பு. பல புதிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது.
மகேஸ்வரன், நாகர்கோவில்

தித்தியாவின் “மோடியின் 8 ஆண்டுகள்” ஒரு சிறந்த அலசல்.  செய்யப்பட்டிருக்கும் நல்ல விஷயங்கள் பற்றியும் குறைப்பிடப்பட்டிருப்பதை பாராட்டவேண்டும்.
– சந்திரமோகன், இராஜபாளையம்

1 COMMENT

  1. “ஒரு நிருபரின் டைரி” தொடரில் இந்த வாரம் வெளியான செளகார் ஜானகி பற்றிய கட்டுரை அவரைப் போலவே யதார்ததமாக இருந்தது. அற்புதமான நடிகையை நினைவுபடுத்தியமைக்கு கல்கிக்கும்,நிருபருக்கும் நன்றி.குறிப்பாக காவியத்தலைவி, இருகோடுகள்…இன்னும் பல அவர் நடிப்பை பறை சாற்றும் படங்கள்.அவர் நூறு வருடம் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...