0,00 INR

No products in the cart.

தாக்குப்பிடிக்கமுடியாமல் தடுமாறிய தாக்ரே

எஸ். சந்திரமௌலி

 

ந்திய அரசியல் சரித்திரத்தில் அவ்வப்போது அரங்கேற்றப்படும் எம்.எல்.ஏ.க்கள் சுற்றுலா  அத்தியாயம் மீண்டும் ஒரு தடவை அரங்கேறி இருக்கிறது. ஒரே ஒரு சின்ன வித்தியாசம். பொதுவாக மற்ற கட்சிகளின் வலைவீச்சுக்கு பலியாவதைத் தடுக்க எம்.எல்.ஏ.க்களை டூர் அழைத்துக் கொண்டு போவார்கள். இந்த முறை ஒரே கட்சிக்குளே இருந்து ஒரு பிரிவினரைப் பிரித்து, டூர் அழைத்துக் கோண்டு போய் இருக்கிறார்கள்.

இந்த தடவை  இப்படி  சிக்கலுக்கு உள்ளாகி இருப்பது சிவசேனை. மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, எப்படி சிக்கலைத் கையாளப் போகிறார் என உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது  ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசிய வாதக் காங்கிரஸ் கட்சியும், வெளியிலிருந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும்.  ஆனாலும், கட்சிக்குள்ளே அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள் என்பதும்,  அவர்களின் மனக்குமுறல் இந்த அளவுக்குப் போகும் என்பதையும் மாநில போலிசின் நுண்ணறிவுப் பிரிவு கூட மோப்பம் பிடித்து முதலமைச்சரை எச்சரிக்கவில்லை என்பது பரிதாபத்துக்குரியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.  என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்? வாருங்கள் மும்பை, குஜராத், அஸ்ஸாம் என ஒரு ரவுண்டு போய் பார்த்துவிட்டு வரலாம்.

இப்போது ஏற்பட்டிருக்கும் மொத்த சிக்கலுக்கும் முக்கியமான காரணம் சிவ சேனாவின் நெம்பர் 2 ஆக இருந்த ஏக்நாத் ஷிண்டே என்பவர்தான். 2019 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பா.ஜ.க – சிவசேனா கூட்டணியில் முறிவு ஏற்பட்டபோது, ஷிண்டே, உத்தவ் தாக்கரேவிடம், தேசியவாதக் காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அவரது கருத்து புறக்கணிக்கப்பட்டு, “மகாராஷ்டிர விகாஸ் அகாடி”  அதாவது,  “மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி” என்ற பெயரில் கூட்டணி அமைத்து  முதலமைச்சர் ஆனார் உத்தவ் தாக்கரே. அடுத்த கட்ட நடவடிக்கையாக உத்தவ் தாக்கரே தன் மகன் ஆதித்யா தாக்கரேவை  அமைச்சராக்கியதும், மகாராஷ்டிரா அரசியலில் புதிய பவர் சென்டர் ஒன்று உருவானது. அமைச்சரவையில் ஷிண்டேவுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டாலும், மொத்தத்தில் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

அண்மையில் நடந்து முடிந்த ராஜ்யசபை எம்.பி. தேர்தலிலும் சரி,  மகா. சட்டமன்ற மேலவைக்கான தேர்தலிலும் சரி, பா.ஜ.க.வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி சுயேச்சை எம்.எல்.ஏ. க்களின் ஆதரவை மட்டுமின்றி  எதிரணியைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஒரு சிலரையும் அணி மாறி வாக்களிக்கச் செய்து பா.ஜ.க சார்பில் கூடுதலாக ஒவ்வொரு வேட்பாளர் வெற்றிபெற வழி செய்துவிட்டார். அதாவது சட்டமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தாலும், பா.ஜ.க. ராஜ்யசபைத் தேர்தலில் 123 வாக்குகளும், மேலவைத் தேர்தலில் 134 வாக்குகளும் பெற்று ஆளும் தரப்பை ஸ்தம்பிக்க வைத்தது. இது மகா. அரசியலில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது.

மேலவைத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு கடந்த ஜூன் 20 ஆம் தேதி ஷிண்டே தன் அதிகார ஏரியாவான மும்பையின் புறநகரான தானேவில் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களைக் கூட்டினார். அவர்கள் எல்லோரும் தங்கள் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு,  ஏழு சொகுசுக் கார்களில்  பா.ஜ.க. ஆளும் அண்டை மாநிலமான குஜராத்துக்குப் புறப்பட்டனர். அந்தக்கார்கள் குஜராத் எல்லையை அடைந்தபோது, குஜராத் போலிஸ் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. அதிகாலையில் சூரத் சென்றடைந்த அவர்கள் நட்சத்திர ஓட்டலான லா மெரிடியனில் தங்கினார்கள். அங்கே அவர்களுக்காக 30 அறைகள் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தன.

எம்.எல்.ஏ.க்கள் சூரத் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில், அந்த சூழ்ச்சி ஏதும் தெரியாமலேயே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மேலவைத் தேர்தலில் அணிமாறி ஓட்டுப் போட்டது பற்றி விரிவாக ஆலோசனை செய்ய நள்ளிரவில் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினார். அதில் கலந்துகொண்ட தேசியவாதக் காங்கிரஸ் தலைவர்கள், “உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலருடன்  தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. ஏதோ பிரச்னை இருக்கிறது! நீங்கள் அவர்களோடு பேச  முயற்சி செய்யுங்கள்!” என எச்சரிக்கை செய்தனர். சிறிது நேரத்தில், மூன்று அமைச்சர்கள் உட்பட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலர் சூரத்தில் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அவர்கள் எத்தனைபேர் என்பது இவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை.

உத்தவ் தரப்பிலிருந்து இரு மந்திரிகள், சூரத் வந்து ஷிண்டேவிடம் பேசிப்பார்த்தார்கள். ஒன்றும் பலன் இல்லை. சூரத்தில் இருந்து புறப்பட்டு, அஸ்ஸாம் போய் சேர்ந்தது ஷிண்டே குழு. அங்கே தன்னுடன்  46 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக மீடியாவிடம் கூறினார் ஷிண்டே. தானும், தன்னுடன் இருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கும் என்னதான் சொல்கிறார்கள்?

மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணியில், காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கிறது. கூட்டு அமைச்சரவையில் சிவசேனா மீது அதிகாரத்தை செலுத்துகிறது தேசியவாதக் காங்கிரஸ். அவர்கள் தயவில் நாங்கள் இருப்பது போல, அவர்களுக்கு பணிந்து போக வேண்டி இருக்கிறது. துணை முதல்வரான அஜித் பவாருக்கு உள்ள அதிகாரம், வியப்பூட்டுகிறது.  கூட்டணி   அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தேசியவாதக் காங்கிரஸ், வேட்பாளர்களை தோற்கடித்த சிவசேனை எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் கூட எம்.எல்.ஏ.க்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள்.  இது குறித்து உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசவே வாய்ப்பு கிடைப்பதில்லை”.

இந்த உணர்வுகள்  வளர்ந்து  எதிர்ப்பலையாக எழுந்தது. ஒரு கட்டத்தில் வரப்போகும் ஆபத்தை உணர்ந்த உத்தவ் தன் ஆதரவாளர்களை அழைத்துப்பேச பெரும் முயற்சிகள் செய்தார், தன் மனைவி மூலம் கூட அந்த எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முயன்றார்.  ஆனால்,  வெள்ளம் கரையை உடைத்துக்கொண்டு ஓட ஆரம்பித்துவிட்டது.  எதிககட்சி வேண்டுகோளுக்குகிணங்க மாநில கவர்னர்  ஆளும் கூட்டணி அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றம் இந்த ஓட்டெடுப்புக்கு தடை கோரிய உத்தவ் தாக்ரேயின் மனுவை ஏற்கவில்லை.  ஓட்டெடுப்பில்  தன் அணிக்கு வெற்றி வாய்ப்பில்லை என்ற நிலையில்  தாக்குப்பிடிக்க முடியாமல்  தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் உத்தவ் தாக்ரே.

 

 

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...