0,00 INR

No products in the cart.

காட்சி மனதைவிட்டு அகலாது பல மணி நேரங்களுக்கு நீடிக்கிறது.

 

சேத்துமான் – சினிமா விமர்சனம்

– இராமானுஜம்

 

ழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ என்ற சிறுகதையே ‘சேத்துமான்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் இருந்து சினிமா திரைக்கதை என்பது அவ்வப்போது தமிழ் சினிமாவில் அபூர்வமாக நடக்கும்.

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தது தொடரவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது எளிய மக்களின் வாழ்க்கை பற்றி வெளியான சிறுகதை, நாவல்கள் படமாக்கப்படுகின்றன. அந்த வரிசையில் சேத்துமான் இணைந்திருக்கிறது.

தலித்தியம், தலித் உரிமைகளை முன்னிறுத்தி செயல்படுபவராகக் கூறப்படும் இயக்குநர் பா.ரஞ்சித் இதுபோன்ற முயற்சிகளுக்கு முதலீடு செய்வது தமிழ் சினிமாவுக்கான வரம் என்றே கூறலாம். வழக்கமான வணிக சினிமா அதற்கான திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் வரைமுறைகளை மீறியிருக்கிறது சேத்துமான் திரைப்படம்.

தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டு கதை நிகழ்கிறது. சேத்துமான் என்பது பன்றியைக் குறிப்பது. ‘மாட்டுக்கறி உண்ணாதே’ என்று சொல்லும் அரசியலுக்கு எதிராகப் பேசினால் ‘நீங்கள் பன்றிக்கறி பற்றிப் பேசுவீர்களா?’ என்று எதிர்க்கேள்வி வரும், அதையும் பேசுவோம் திரைப்படம் மூலமாக என களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் தமிழ்.

படத்தில் எந்தவொரு இடத்திலும் நாங்கள் இதைப் பேசுகிறோம் என்று சொல்லிப் பேசவில்லை, கதாபாத்திரங்கள் பேசுகின்றன. படத்தில் தாத்தாவாக வாழ்ந்திருக்கும் மாணிக்கம், பேரனாக வரும் சிறுவன் அஸ்வின், பண்ணாடி எனும் ஆதிக்கச் சாதிக்காரராக வரும் பிரசன்னா, பன்றி வளர்க்கும் குமார், பண்ணாடியின் மனைவி சாவித்திரி உள்ளிட்ட எல்லா கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் வட்டார வழக்குகளில் ஒன்றான கொங்குத் தமிழ் என்றால், ஏனுங்க என்னங்க என்பது மட்டுமே என்கிற இதுவரையிலான நடைமுறையை மாற்றி எதார்த்தத் தமிழை படமெங்கும் பேச வைத்திருக்கிறார் வசனகர்த்தா பெருமாள் முருகன்.

தாத்தாவும் பேரனும் நடந்து வரும் முதல் காட்சியில் தொடங்கி கடைசி வரை இயக்குநருக்கு இணையாகக் காட்சிகளில் கதை சொல்லிச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா. பண்ணாடி வீட்டில் இருக்கும் சிறுவர்கள் ஓட்டும் மிதிவண்டி முதல் பந்துகள் வரை அனைத்தையும் அஸ்வின் சலனமின்றிப் பார்க்கும் காட்சியின் தாக்கம் பார்வையாளன் மனதைவிட்டு அகலாது பல மணி நேரங்களுக்கு நீடிக்கிறது.

பிந்துமாலினியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது. இந்திய நாட்டின் குடியரசு தலைவராக தலித் ஒருவர் வர முடியும், அதே வேளையில் தலித் ஒருவர் சாதியின் பெயரால் கொடுமைப்படுத்தப்படுவதை ஒரு காட்சிக்குள்ளேயே கொண்டுவந்து எல்லோர் முகத்திலும் அறைந்திருக்கிறார் இயக்குநர் தமிழ்.

சேத்துமான் திரைப்படம் மே 27 அன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.

நன்றி: மின்னம்பலம்

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...