0,00 INR

No products in the cart.

கருகிய மொட்டுக்கள்

ஆதித்யா

 

சில செய்திகள் படித்த அல்லது பார்த்தவுடன் எந்தவித தாக்கமும் ஏற்படுத்தாமல்  நம்மை கடந்து போகும். சில மனம் வலிக்க பதிந்துவிடும். அண்மையில்  படித்த இந்தச் செய்தி தந்த மனஅழுத்தத்திலிருந்து இன்னும் விடுபட முடியவில்லை.

அமெரிக்காவின் தொடக்கப்பள்ளியில் நிகழ்ந்துள்ள துப்பாக்கி சூடு
ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரம். ஒன்று முதல் நான்கு நிலை வரை படிக்கும் சிறார் பள்ளிக்குள் நுழைந்து 19 குழந்தைகள் 2 ஆசிரியர்களை சுட்டுக் கொன்றிருக்கிறான் 18 வயது சல்வடார் ரமோஸ். இறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவில் ஒவ்வொரு தனி மனிதனும் துப்பாக்கி வைத்து கொள்வது என்பது அடிப்படை சுதந்திரமாகவும், உரிமையாகவும் இருக்கிறது. காலங்கள் மாற, மாற தனி மனித ஒழுக்கமும் மாறி, தற்போது இந்த துப்பாக்கி கலாச்சாரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்க பள்ளிகளில் இதுவரை, 8 முறை மிக பயங்கரமான துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இதில் 140 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தனி மனித பாதுகாப்பு என்ற அடிப்படையில், அமெரிக்காவில் பெரும்பாலான வீடுகளில் துப்பாக்கிகள் வாங்கி வைத்துள்ளனர். இவை, சிறுவர்களால்கூட எளிதாக எடுத்து கையாளப்படுகிறது.

அமெரிக்காவில் இந்த துப்பாக்கிச் சமாசாரம் மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ் வருகிறது.  வைத்திருக்க அனுமதிப்பது,  வாங்குவது,  விற்பது பயன்படுத்தும் முறை எல்லாம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். சில மாநிலங்களில் வைத்திருக்க எவருக்குமே  அனுமதியில்லை.சில மாநிலங்களில் அதற்காக பட்டியல் உண்டு, சில மாநிலங்களில்18 வயதுக்கு மேல் எவரும் எளிதாக வாங்கலாம். விழாக் காலங்களில் சலுகைவிலைகள் கூட அறிவிக்கப்படும்.

இந்த கொடிய செயலைச் செய்திருக்கும் ரமோஸ்.18 வயதாகும் வரை காத்திருந்து, பிறந்த நாள் அன்றே இத்துப்பாக்கிகளை வாங்கியுள்ளான்.

சில நாட்கள் முன் அவனது சகோதரியிடம் (21 வயது)  ஆன்லயனில் ஆர்டர் செய்து வாங்கித்தரும்படி கேட்டிருக்கிறான். அவர் மறுத்திருக்கிறான்.  தன் 18 வது பிறந்த நாளுக்காக காத்திருந்து அன்றே உள்ளூர் கடையில் ஆர்டர் செய்து மறுநாள் வாங்கியிருக்கிறான், இந்தக் கொடூரத்தை நிகழ்த்தும் முன் துப்பாக்கிகளுடன் ஒரு செல்பியை இன்ஸ்டாவில் பதிவு செய்துவிட்டு நண்பருக்கும் மெசேஜ் செய்திருக்கிறான் ரமோஸ்.

அவன் வாங்கியிருக்கும் துப்பாகி லேட்ஸ்ட் மாடல்.தானியங்கி ரைபிள் ( AR-15). அதை பயன்படுத்த  பாதுகாப்புக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அதையெல்லாம்  வாங்கி   முறையாக அணிந்து கொண்டு வீட்டிலிருந்து கிளம்பும்போது  துப்பாக்கி எடுத்துக்கொண்டு எங்கே போகிறாய் என்று கேட்ட பாட்டியைச்  சுட்டு விட்டு, காரை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த பள்ளிக்குள் சென்று சுட்டிருக்கிறான்.

பள்ளிக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், ரோந்து பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு வீரர், Back up படைக்காக காத்திருக்காமல் உள்ளே நுழைந்து ரமோஸை சுட்டுக் கொன்றிருக்கிறார். இல்லையெனில்   குழந்தைகளின் இறப்பு இன்னும் அதிகமாகியிருக்கும் (துப்பாக்கியில் 50 குண்டுகள் போடலாம்).

விபத்து குறித்து  மாநிலத்தின் தலைமை போலீஸ் அதிகாரி  மக்களை சந்திக்கும்  காட்சியை டி.வி.யில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விபத்து நடந்த இடத்துக்கு  குழந்தைகளின் பெற்றோர்களைக்கூட  உடனே அனுமதிக்காத போலீஸ் மீது  மக்கள் கோபமாக குற்றம் சாட்டினர். அதற்காக மன்னிப்பு கேட்டார் அவர். ஒரு கட்டத்தில் பேசமுடியாமல் அழுதேவிட்டார்.

கடந்த சில வருடங்களில் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு மரணங்கள் அதிகரித்திருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூடு  அமெரிக்காவில் இந்த வருடத்தின் 230வது  சம்பவம். இதில் 27 துப்பாக்கிச் சூடுகள் பள்ளிகளில் நடந்திருக்கிறது.

“மாதிரி துப்பாக்கி வைத்துக்கொள்வது குறித்து நாடு முழுவதற்குமான ஒரே சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று பல வருடங்களாகப் பேசப்பட்டு வந்தாலும் செயல்படுத்த முடியவில்லை. காரணம் அரசியல்.

இந்த உரிமையை பறித்து விடலாம் என நினைக்கும் ஆட்சியாளர்கள், அடுத்த முறை ஆட்சிக்கு வரமுடியாது. அந்தளவுக்கு அமெரிக்க மக்களின் மனதில் துப்பாக்கி மோகம் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தான், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க முடியாமல் அமெரிக்க அரசு தவிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு தேர்தலிலும் துப்பாக்கி கொள்கை என்பது முக்கிய பிரசாரமாகவே இருந்து வருகிறது.

2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் இதை முன்வைத்துதான் டொனால்ட் டிரம்ப் பிரசாரம் செய்து  தேர்தலில் வெற்றியும் பெற்றார். (கொரோனாவிற்காக மாஸ்க் அணிவதை சட்டப்பூர்வமாக்கியதைக் கூட எதிர்த்த புண்ணியவான்).  அந்த ஆண்டு நடத்திய சர்வேயில் 76 சதவீத அமெரிக்கர்கள் டிரம்பின் பேச்சை ஏற்று கொண்டதாகத் தெரிகிறது.

டெக்சாஸ் சம்பவத்தை தொடர்ந்து வழக்கம் போல் தற்போது துப்பாக்கி உரிமங்கள் வழங்குவது தொடர்பாக அந்த நாட்டில் கடுமையான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஜனநாயக கட்சியினர் துப்பாக்கி வைத்திருப்பதில் கட்டுபாடுகள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். கட்டுப்பாடுகள் அற்ற துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆளும் குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று டெக்சாஸ் சம்பவத்துக்குப் பிறகு, நடந்த அன்று வெள்ளை மாளிகையில் அவர் பேசும் போது இந்தச் சட்டத்தின் அவசியம் குறித்துப் பேசினார். அதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிஸும் பேசியிருக்கிறார்.

மாநில சுய ஆட்சி, தனிமனித சுதந்திரம் எல்லாவற்றையும் தாண்டி அமெரிக்க அரசுக்கு குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்திருக்கிறது.  அமெரிக்காவிற்கு தீவிரவாதிகள் எல்லாம் வெளியில் இல்லை. விபரீத எண்ணங்களுடன் வளரும் 15-18 வயது பையன்கள்,  துப்பாக்கிகள் விற்பனையில் கட்டுப்பாடுகள் இல்லாத சூழ்நிலை  எல்லாம்  உள்நாட்டிலேயே தீவரவாதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இறந்த குழந்தைகளின் ஆன்மா அமைதியடைவதற்காகவது உங்கள் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி  துப்பாக்கிகளை தடை செய்யுங்கள்  பைடன்.

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...