0,00 INR

No products in the cart.

தர்மத்தில் பேரம் பார்க்கக்கூடாது

முதலில் முகம் தெரியாதவர்களுக்கு  உதவுதல் கூடாது . எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் என்பதை கடைசிப் பக்கத்தில்  படித்து வாசகர்களாகிய நாங்கள் உஷாராக இருந்துக் கொள்கிறோம்.
– மதுரை குழந்தைவேலு, சென்னை – 600 129

‘வியாபார மொழி’ கதை காமெடியாக இருந்தாலும் ”மொழி”முக்கியம் என்ற கருத்தை உணர்த்தியது.
– ஜானகி பரந்தாமன், சென்னை

ல்கி குழும பத்திரிகைகள் மின்னிதழ் வடிவிலேயே பிச்சி உதறுகின்றன. அதுவும் ஆண்ட்ராய்டு ஃபோனில் படிக்க சவுகரியமாக இருக்கிறது.
இருந்தாலும் அச்சு வடிவில் வர சந்தர்ப்பம் உள்ளதா….
– வி.கே.லஷ்மி நாராயணன், திருச்சி

பேரத்தில் தர்மம் பார்க்கக்கூடாது, தர்மத்தில் பேரம் பார்க்க க்கூடாது என்பதை அழகாய் சுட்டிக்காட்டியது “பேரம்” சிறு(சிறந்த) கதை .

‘ஒரு தீர்ப்பும் இரண்டு கருத்துக்களும்’ கட்டுரை  நடுநிலையோடு அறவழியில் எழுதப்பட்டுள்ளது. விடுதலையான குற்றவாளியை ஹீரோவாக கருதுவதும், பல தலைவர்களுக்கு மனு கொடுத்தார் என்பதற்காக அவரது தாயாரை ‘தியாகத் தாயாக’ போற்றுவதும் வரும் தலைமுறைக்கு தவறான செய்தியை கொண்டு செல்லும் என்று ரமணன் அழுத்தமாக பதிவு செய்துள்ளது , இதுவரை  யாரும் சொல்லாதது.  பேரறிவாளனுக்கும் அது நல்லதல்ல என்று ரமணன் எழுதியுள்ளது தேசத்தின் குரல்.

‘தண்டனை போதும் ‘ என்று நீதிமன்றம்  வெளியே விட்டிருக்கும் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகள் கூறுவதும், ஆரத்தழுவதும் பெரும் அதிர்ச்சி தரும் எதிர்மறையான செயல் என்பதை ஆணித்தரமாக கட்டுரையில் வெளிப்படுத்திருக்கும் ரமணனை ராஜீவ் காந்தியோடு உயிரிழந்த அத்தனை ஆன்மாவும் உற்று நோக்குகின்றன.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

  “நெஞ்சுக்கு நீதி” – நம்பிப் பார்க்கலாம் என முடிந்திருந்தது “நறுக்”திரை விமர்சனம்.
– ஸ்ரீகாந்த், திருச்சி -621 216.

எஸ்.ராமன் எழுதிய, ‘ நினைவு நல்லது வேண்டும் ‘ சிறுகதையைப் படித்து முடித்ததும், சிலிர்ப்பும் சந்தோஷமும் பொங்கியது .மகாகவி பாரதியாரைப் போற்றும் விதமாக படைக்கப்பட்டிருந்தது சிறப்பு. பண்பட்ட இரு மனித உள்ளங்களை படம் பிடித்துக் காட்டியிருந்தது, இன்றைய இளைய தலைமுறைக்கு சரியான பாடம் என்று சொன்னால் மிகையாகாது.

சுஜாதா தேசிகனின் கடைசி பக்கக் கட்டுரை சுவாரஸ்யத்தில் மட்டுமல்ல, விழிப்புணர்விலும் உச்சம்.
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர் – 9791667528

ரு தீர்ப்பும் இரண்டு கருத்துக்களும் என்ற பக்கங்களைப் படித்து வந்ததும் பார்வையில் கண்ணீர் வர நெஞ்சம் வலித்தது. ஒரு நாட்டின் பிரதமருக்கு  தமிழகத்தில் மிகச் சரியான பாதுகாப்பு கொடுக்காமல் அவர் கொலை செய்யப்பட்டது எவ்வளவு சாபம் என்பதை  சொன்னதுடன்  கொலைகாரனை பாராட்டுவது  எவ்வளவு தவறானது என்பதை  படித்ததும் இதுதான் அரசியல் என்று எண்ண வைத்தது.
– ராதிகா, மதுரை

 “நாய் ஜென்மமா… மனித ஜென்மமா?” என்ற ஸ்ரீ சிங்கேரி சங்கராச்சார்யா அவர்களின் அருள்வாக்கு மிகவும் அருமை.    நல்ல காரியங்களைச் செய்து மனிதனாக வாழ்வதுதான் சிறந்ததே தவிர, உங்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு இருந்தால் பணக்கார வீட்டு நாய் போல தான் நம் வாழ்க்கை அமையும் என்று அருமையான தத்துவத்தை சொன்னது பாராட்டுக்குரியது.
– உஷாமுத்துராமன், கோவை

“இன்னும் எத்தனை காலம்தான்…” என்ற கடைசி பக்க சுஜாதா தேசிகன் அவர்களின் அனுபவம்  ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபுறம் அவருக்கு என்ன ஆயிற்றோ என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இதற்காகவே அவர் சீக்கிரம் நாவல் எழுத வேண்டும் என்று கடவுளிடம் வேண்ட வைத்தது. ரசித்து படிக்க வைத்த கடைசிப்பக்கம்.
– கிருஷ்ணன், மதுரை -6

ங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட ‘தேசத்துரோக’  சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது தலையத்தில் சொல்லியிருப்பது போல . .  மத்திய அரசே சட்ட நீக்கத்திற்காக முனைப்புகளை மேற்கொள்ளவேண்டும்.
– சந்தோஷ் குமாரி, மும்பை

 

 

2 COMMENTS

  1. என் கருத்தை தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் ..நன்றி . ஒரு சின்ன திருத்தம். ஜானகி பரந்தாமன் ___கோவை .மேலும் “பேரம்” சிறுகதையை பற்றிய கருத்துக்கு கீழே பெயர் அச்சிடப்படவில்லை .
    அதுவும் .நானே .என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  2. என் கருத்தை பிரசுரம் செய்ததற்கு நன்றி. ஆனால் என் பெயர் பக்கத்தில் சென்னை என்பதற்கு பதி
    லாக திருச்சி என அச்சாகியிருக்கு.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...