0,00 INR

No products in the cart.

வட்டத்துக்குள் சதுரம்

– செல்லம் சேகர்

 

இப்படியும் சேமிக்கலாம்…!

செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம்.

நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது … அது நம்மை வெற்று கௌரவத்திற்கு கொண்டு சல்வதை நம்மால் சில சமயம் உணர செய்தாலும் நாம் மதிப்பதில்லை .

எல்லோரும் சேமிப்பிற்கு உதாரணமாக எறும்பை சொல்கிறார்கள் …அது பாவம் மழைக்காலத்திற்கான உணவை மட்டுமே சேமிக்கிறது . நாம் நமக்கு அது போதுமா? கேள்விக்குறிதான்?

அதாவது, எதை செய்தாலும் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டும். ஒரு வரைமுறை இருந்தால் அதில் உள்ள சாதக பாதகம் நம்மை நமக்கு உணர்த்தி சேமிக்க வைக்கும் அதுவே பட்ஜெட் ….எப்படி சேமிக்கலாம் கட்டுப்பாட்டில் இருந்து?

காலை யோகா, தேக பயிற்சி ஆரோக்கிய சேமிப்பு… அதனால் உற்சாகமாக வேலை செய்து சம்பாதிக்கலாம்.

உணவு கட்டுப்பாடு மீண்டும் ஆரோக்கியம். அதனால் மருத்துவ செலவை தவிர்த்து பணம் மிச்சப்படுத்தலாம்…. இதுவும் ஒரு சேமிப்பு.

வாய் / நாக்கு கட்டுப்பாடு இனிய சொற்கள் மூலம் நல்ல உறவு , பணி செய்யும் இடத்தில அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்து நன்கு
செயல்பட்டு நிலைத்தன்மையை சேமிக்கலாம்.

சேமிப்பு என்பது பணம் மட்டுமே அல்ல …பணம் கிடைக்கும் வழி வகைகளை சேமித்தல் பணமும் சேமிக்க முடியும் ….கட்டுப்பாடுகள் பணம் சேமிக்க ஆதாரம் ஆகும்.

அதனால் இப்படி யோசிக்கிறேன் … அடிக்கடி நான் நினைக்கும் ஒரு வார்த்தை … வட்டத்திற்குள் சதுரம் போடுவது ?   சொல்கிறேன்.

இப்போது நாம் வட்டத்துக்குள் சதுரம் எப்படி என பார்ப்போம்.

தற்போதுள்ள ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் தவிர்ப்பது நமக்கு மிகப்பெரிய சேமிப்பாகும் . உதாரணத்திற்கு முன்பெல்லாம் shoerack  கான்செப்ட் கிடையாது. இப்போது யார் வீட்டில் இல்லை … செருப்பு பிய்ந்து போனால் தெச்சு போட்டு கொண்டதாக நம் அடுத்த தலைமுறையிடம் சொன்னால் ஜந்துவை பார்ப்பது போல் பார்ப்பார்கள் …ஏனெனில் தற்போது bag …. செப்பல் என மேட்சிங் …. ஸ்போர்ட்ஸ் SHOE … என குறைந்தது 3 – 4 செருப்பு … அதை கொஞ்சம் தவிர்க்கலாம் …ஆபீஸ்… வீடு என இரண்டு செட் …  சேமிக்க முடியும் .

அடுத்தது 4 பேர் இருக்கும் ஒரு வீட்டில் குறைந்தது 6 முதல் 8 மொபைல் உள்ளது தேவையோ தேவை இல்லையோ அனைத்துக்கும் நாம் காம்போவில்  RECHARGE  செய்கிறோம். அதில் சிறிது சிக்கனம் செய்யலாம் சேமிக்கலாம் … அதாவது எதை  வீட்டிலும் அதிகம் வெளியில் செல்லும்போதும் பயன் படுத்துகிறோமோ அதற்கு அதிக GB மற்றதற்கு மிக குறைந்த அளவில் recharge செய்து சேமிக்கலாம்

அடுத்ததாக நம் வார்டரோபில் மிக நிறைய டிரஸ் நாம் வாங்கி அடுக்கும் துணிகள் சிறிது குறைக்கலாமே…

OFFER போட்டால் போதும் … தேவை இல்லாமல் கூட வாங்கி அடுக்கும் மனோபாவம் மாறினால் அதுவும் சேமிப்பே .

ஆன்லைன் ஷாப்பிங் அளவில்லா ஷாப்பிங் ஆகிவிட்டது …

பெரியவர்கள் அந்த காலத்தில் சந்தை மற்றும் கண்காட்சிக்கு எல்லாம் அழைத்து செல்லும்போது அடிக்கடி ஒரு வார்த்தை சொல்ல கேட்டிருக்கிறேன் …அதாவது

” கண்களுக்கு கடிவாளம் இல்லை ஆனால் பர்ஸுக்கு உண்டு”

“NO RESTRICTION FOR THE EYS BUT FOR THE PURSE”

அதைப்போல அனைத்தும் பார்க்கலாம்… ஆனால், வாங்குவதற்கு யோசித்தால் …செலவு இல்லை சேமிப்பே !!

அது எவ்வளவு உண்மை .

தற்போதெல்லாம் விண்டோ ஷாப்பிங் என்று ஒரு பழக்கம் …அது நம் கண்களை கவரும் அனைத்தும் மனம் குறித்து கொள்ளும் …கையில் பணமாக இருக்கும் போது நம்மால் இருப்பை ( BALANCE ) பார்த்து அல்லது சிந்தித்து யோசித்து செலவு செய்ய முடியும் ஆனால் டிஜிட்டல் செலவில் …சில பல செலவுகள் நம் கண்ணை மறைக்கிறது.

அதனால் குறைந்த அளவு பணத்தை டிஜிட்டல் உபயோகத்துக்கு வைத்து கொள்வதன் மூலம் அத்யாவசிய செலவை மட்டும் செய்து சேமிப்பை உயர்த்தலாம் .

தற்போதைய நடைமுறைக்கு நாம் Cell Phone …SHOE …Dress என வாங்கத்தான் வேண்டும் என நினைத்தால் ஒரு வழி உண்டு.

அது வருமானத்தை பெருக்கலாம்…. பெரிய பணக்காரர்கள் primary பிசினஸ் அண்ட் secondary  பிசினஸ் என  இரண்டு வைத்திருப்பார்கள் …அதைபோல் நாமும் ஒரு வேலை குடும்பத்திற்கும் ஒரு உபரி வேலை வருமானம் பிறவற்றிற்கும் என வைத்து கொண்டால் மெயின் வேலை வருமானம் செலவிற்கும் உபரி வருமானம் சேமிப்பிற்கும் வைத்து கொண்டால் சிறிய தொகையாவது கட்டாய சேமிப்பாக இருக்கும் . நாம் எதிர்காலத்திற்கும் உதவும்.

வட்டத்தை பெரிதாக்குவோம் … சதுரத்திற்குள் அடக்கி சந்தோஷமாக இருப்போம்.

1 COMMENT

  1. உண்மையை உரத்த குரலில் கூறியதற்கு சல்யூட்.அந்த காலத்தில் பிள்ளைகள் அதிகம். சம்பாதிக்கும் நபர் ஒருவர்.இப்போது எல்லாமே தலைகீழ்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

0
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...