இன்றைய இளைஞர்களை சிந்திக்கவைக்கும்.

இன்றைய இளைஞர்களை சிந்திக்கவைக்கும்.
Published on

ருள்வாக்கில் கார்த்திகை மாதத்தின் சிறப்பினை விளக்கியது படிக்க படிக்க மனதிற்கு இதமாக இருந்தது. திருவண்ணாமலை மலை மேல் தீபம் ஏற்றி இறைவன் ஜோதி வடிவில் உள்ளதை உணர்த்துவது, கோயில்கள் தோறும் பழமை எல்லாவற்றை கழித்து , பாவங்களை பொசுக்கி , சொர்க்கத்திற்கு செல்லும் நிகழ்ச்சியாக சொக்கப்பனை கொழுத்துவது, நிலத்தில், நீரில், ஆகாயத்தில் வசிக்கும் அனைத்து ஜீவன்களும் நலம்  பெற சிவ பூஜை நடத்துவது என்ற எத்தனை எத்தனை அம்சங்கள். ஸ்நானம், பூஜை, பிரார்தனை, ஞானம் எல்லாம் உள்ள  கார்த்திகை மாதத்தில்  தீபம் ஏற்றி இறைவனை போற்றுவோம்.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

ம்பிக்கை -அருமையான கதை
– கவிதா  பால ஜெய்கணேஷ், தருமபுரி

வான்கோழிகளுக்கு மன்னிப்பு சுவையான் செய்தி.  இதைத்தான் கொன்ற பாவம்! தின்றால் போச்சு என்று சொல்லியிருக்கிறார்களோ?
– தமன்னா, சென்னை

வர் போல யாருள்ளார் இன்று!‌‌‌‌‌ஆயிரத்தில. ஒருவர் தமிழ் அருவி!
பணம் படைத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி உள்ளீர்கள் தமிழ் அருவி!
– திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு

ரபு மீறாமல் அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வைத்த விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்புகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். இந்த வெற்றியின் எதிராெலி எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் அம்பலமாகும் என்பதை "ஏன் இந்த மனமாற்றம் ?"
கவர் ஸ்டாேரி உறுதியாக்குகிறது.
– ஜோஷ், அயன்புரம்

மிழருவி மனியனின் பேட்டி அருமை. வாழ்வின் தன்மையை நல்நெறியுடன் அமைத்துள்ள தமிழருவி மணியனி்ன் பாதை இன்றைய இளைஞர்களை சிந்திக்கவைக்கும்.
– து. சேரன், ஆலங்குளம்

"இது என் குழந்தைகளுக்கான பரிசு" என்று ராணுவ அதிகாரியான அந்த தாய்  தன் பதவியைச்  சொன்னது மனதைத் தொட்டது.
– உஷா, திருநகர்

றையன்புவின்  'சத்சங்கத்தை' இந்துமதி அறிமுகம் செய்திருப்பது  அதை உடனே வாங்கிப்படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. உடனே ஆன்லையனில் ஆர்டர் கொடுத்துவிட்டேன். நன்றி கல்கி.
– கண்ணபிரான், நெல்லை

ந்து சிந்துவின் 'அதிகாலைச் சம்பவம்' கதை  சிந்திக்க வைத்த ஒரு நல்லகதை.
– மரகதம், வேலூர்

வாரா வாரம் பொலிட்டிக்ஸ் பிஸா  சுவையாக இருக்கிறது.  இன்னும் கொஞ்சம் போடுங்களேன்….
– தமிழரசி, சேலம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com