0,00 INR

No products in the cart.

மழை வெள்ளப் பகுதிகளில் முதல்வர் நடந்தார், நிர்வாகம் நடக்கவில்லையே! –

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

? ‘மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க., ஆட்சி நடப்பதால், உத்தரப்பிரதேசத்தில் இரட்டை என்ஜின் வேகத்தில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக ‘பிரதமர் மோடி பேசியுள்ளாரே?  அப்படியானால் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வளர்ச்சிப் பணி, இல்லை என்று சாடுகிறாரா அல்லது  வளர்ச்சிப் பணிகளுக்கு  வாய்ப்பில்லை என்று எச்சரிக்கிறாரா?
– நெல்லை குரலோன், ரோஸ்மியாபுரம்
! அந்த மாநிலங்களில் ஓடும் என்ஜின்களுக்கு போதிய எரிபொருள் கிடைக்காது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

? சென்னை ஐஐடியில்  நடைபெற்ற பட்டமளிப்புவிழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படாது குறித்து?
– சத்திய நாராயணன், வேலூர்
! தமிழக  அரசியல் கட்சிகள் கண்டனம் தெரித்திருக் கின்றன. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதைவிட ஐஐடி மெட்ராசில் வெறும் 5% மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறித்தோ, தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி கல்விக்கு ஒதுக்கப்படும் தொகை வருடத்திற்கு 10 ஆயிரம் கோடிகள். இவ்வளவு செலவு செய்தும் ஒரே ஒரு மாணவரை கூட அரசு பள்ளியில் இருந்து ஐஐடி மெட்ராஸ்க்கு அனுப்ப முடியவில்லை என்பது குறித்தோ அளும் கட்சி உட்பட நமது அரசியல் கட்சிகள் வருந்தாதது தான் வருத்தமான உண்மை.

? உண்மையிலேயே பா.ஜ.க. இந்திய வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்கிறார்களா?
– லஷ்மி கண்ணன், திருச்சி
! அண்மையில்  லக்னோவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அந்த மாநில முதல்வர் யோகி அதித்யநாத், அலெக்சாண்டரை சந்திரகுப்த மௌரியர் தோக்கடித்துவிட்டார் என்றும், வரலாற்று ஆய்வாளர்கள் இந்த உண்மையை மறைத்து அலெக்சாண்டர் வென்றதாகப் பொய்யான தகவலைப் பதிந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அலெக்சாண்டர் தி கிரேட் என்று சொல்கிறார்கள். உண்மையில், அலெக்சாண்டரை வென்ற சந்திரகுப்த மௌரியரைத்தான் ‘தி கிரேட்’ என்று சொல்ல வேண்டும் எனப் பேசியிருக்கிறார். இதற்கு என்னபொருள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

? தமிழ் சினிமா எப்படியிருக்கிறது?
– ஹாகுல் அமீது, வேலூர்
! இந்த இரண்டு வருட முடக்க காலத்தில் ஒரு ’ஆண்பாவம்’ போலவோ அல்லது ’கரகாட்டக்காரன்’ போலவோ, ஏன் ஒரு கலகலப்பான மனம் விட்டுச் சிரித்து மகிழும் சினிமா வரவில்லை?
ஒரே மன அழுத்தம், திகில், படீர் தரும் வன்முறையையும் கொலைகளையும் நியாப்படுத்தும்  படங்களாகக் குவிகிறது
தமிழ் சினிமாவில்  இப்போது ஆகப் பெரிய நகைச்சுவை காட்சி கிளைமாக்ஸில் கதாநாயகன் வில்லனின்  ஆட்கள் ஒவ்வொருவரையும் அடித்துப் பறக்கவிட்டுக்கொண்டிருப்பதுதான்.

? RAIN க்கும் TRAIN க்கும் என்ன வித்யாசம்?
– ஜெ. முரளிதரன் பங்களூரு.
! ‘T’ தான் வித்தியாசம்; RAIN க்கு முன்பதிவு தேவையில்லை;
RAIN ரோடில் ஓடும்.  TRAIN  தண்டவாளத்தில் மட்டுமே ஓடும்.
TRAIN  வீட்டுக்குள் வராது, RAIN விட்டுக்குள் வரும்.

? மற்ற மாநிலங்களில் கால் பதிக்கும் முயற்சியில் திரிணமுல் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறதே? சோபிக்குமா?
– மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! தேசிய கட்சியாக  அரசியலில் இடம் பிடிக்க அண்ணி போட்டிருக்கும் திட்டத்தின் முதல் படி இது. அண்மையில்  மேகாலயாவில், 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர்கள் திரிணமுல் காங்கிரசில் இணைந்திருப்பதைத் தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸிலிருந்தும் வெளியேறி இணைந்திருக்கிறார்கள்.

? பா.ம.க. தலைவர் மருத்துவர்
ராம்தாஸ்  –  “கட்சி நிர்வாகிகள் பணிகளை சரிவரச் செய்யாவிட்டால்  பதவிகளை மாடு மேய்ப்பவர்களிடம் கொடுத்துவிடுவேன்” என்று சொல்லியிருக்கிறாரே?
– சம்பத்குமாரி, புதுக்கோட்டை
! அவரது கட்சியின் கூட்டத்தில்  பேசியபோது கோபத்தில் வெடித்த  இந்த வார்த்தைகள் அவர்களுடைய  உட்கட்சி விவகாரம். ஆனால், செய்தி பொதுவெளியில் வந்திருப்பதனால் விவாதிக்கப்படுகிறது. அவரது அரசியல் அனுபவத்திற்கும் முதிர்ச்சிக்கும்  ஏற்புடைய வார்த்தைகள் இல்லை.

? மழை – வெள்ளப் பகுதிகளில் முதல்வர் நடந்தார், நிர்வாகம் நடக்கவில்லையே! – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
– தங்க வேலு,  ஶ்ரீவில்லிப்புத்தூர்
! இவர்கள் ஆட்சிக் காலத்தில் முதல்வர்  மழையில் நடக்கக்கூட வில்லையே. 

? நம் நாடு பன்முகத்தனமை கொண்ட நாடு என்பது இன்றும்  உண்மையா?
– ரவிச்சந்திரன், ஆவுடையாபுரம்
! இன்று மாநிலங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகள் அதிகரிப்பதானால் இப்படி கேட்கிறீர்கள்.  இன்றல்ல  நீண்ட காலமாக  நாம் பன்முகத்தன்மை கொண்ட நாடாகத்தான்  நாம்  வளர்ந்திருக்கிறோம்.
அண்மையில் உஸ்தாத் அப்துல் கரீம்கான் (1872-1937) என்ற இசைக்கலைஞனின் குரலில் ஒரு பாடலைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. கரஹரப்ரியா ராகத்தில் அமைந்த தியாகையரின் தெலுங்குப்பாடல். இதைக்கேட்டவுடன் நம் நாட்டின் பெருமிதத்தை உணர்ந்தேன்.
பல, கர்னாடக சங்கீதக் கீர்த்தனையை இந்துஸ்தானி இசைக் கலைஞர் பாடியிருக்கிறார், ‘ராமா உனக்கு சமமானவர் யார்?’ என்ற பொருள்படும் இந்தக் கீர்த்தனையைப் பாடியவர் ஓர் இஸ்லாமியர் திருவாரூரில்  பிறந்த தியாகையரின் கீர்த்தனையை உத்தர பிரதேசத்தின் கைரானா கிராமத்தில் பிறந்த அப்துல் கரீம் கானின்  இனிய குரலில்  அந்தராகத்தின் சாயல் மாறாமல் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக பாடியிருக்கிறார்.  இந்த தேசம்  பன்முகதோடு இருப்பதில் என்ன சந்தேகம்.

?அடுத்து எந்த முன்னாள்  அமைச்சர்  வீட்டில்  ரெய்ட் நடக்கும்?
– யாழினி பர்வதம், சென்னை
! தராசு ஜோஸியம் சொல்லுவதில்லை.

? “நகராட்சி தேர்தல்களில்  கொங்கு மாவட்டத்தில் தி.மு.க. தோற்றுவிடும்”  என்ற   பயத்தினால்தான் என்னை கைது  செய்யத் துடிக்கிறார்கள் என்கிறாரே வேலுமணி?
– சண்முக நாதன், விழுப்புரம்
! கொங்கு மண்டலத்தில் ஊராட்சித் தேர்தல்கள் நடந்த போது இவர் எங்கிருந்தார்?  எத்தனை ஊராட்சிகளில் அவர் கட்சி வென்றது?

? அமைச்சர்  நேரு,  மதுரை எம்.பி வெங்கடேசனை ஒருமையில் அழைத்திருக்கிறாரே?
– ஶ்ரீதேவி,  மதுரை
! மிகவும் கண்டிக்கத் தக்கது. கலைஞரிடம் அரசியல் கற்றவர்கள்  அவரிடமிருந்து  அரசியல் நாகரிகத்தைக் கற்கவில்லை.

 

2 COMMENTS

 1. தராசாரின் தனித்துவம் மிக்க பதில்கள் சமூக நலனை நோக்கமாக கொண்டு படைக்கப் படுவதால்
  அக்மார்க் தரத்தக்கும் மேலே மதிக்கப் படுகின்றன.போற்றப்படுகின்றன. உண்மை இது…வெறும் புகழ்ச்சி இல்லை.
  நெல்லை குரலோன்
  பொட்டல்புதூர்

 2. தராசுவின் பதில்களில் உண்மை ,நேர்மை மற்றும்
  உலகியல் நடப்புகளை தெரிவதற்கு நல்ல தாெ ரு வாய்ப்பாகவும் உள்ளது.
  து.சேரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் எப்படி?  

2
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா எப்படி? - எம்.சண்முகம், எடப்பாடி ! ஒரு விளையாட்டுப் போட்டியின் உள்ளடக்கத்தை உள்வாங்கிப் பெரும் நிகழ்வாக்கிக் காட்டுவது எப்படி என்பதை  தொடக்க நிகழ்வுகள்...

ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும் ?

1
? ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும்? - மதி மாறன், சேலம் ! ஓர் எழுத்தாளன் தம் வாசகர்களுக்கு நெருக்கமான, தம்மைப் போன்ற ஒரு மனிதனாக, தாம் எளிதில் அணுகி உரையாடக்கூடிய ஒருவனாக,  தமக்குப் பிடிக்கக்கூடிய...

கண்ணியத்தை காக்காததற்கு கட்சி அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? சென்னை செஸ் ஒலிம்பியாட்  பற்றி... -நெல்லை குரலோன், பொட்டல்புதூர் முன்னேற்பாடுகள் கச்சிதமாக செய்யப்பட்டுக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், வெளியான விளம்பர படத்தில்  உலகம் அறிந்த விஸ்வநாத் ஆனந்தோ, அல்லது பிரஞ்யாவோ...

இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம் என்கிறாரே கமல்?

0
  “இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம்” என்கிறாரே கமல்? - மாடக்கண்ணு, நெல்லை ! அவர் ஏற்றுகொள்ள மாட்டார். இந்திய ஜனாதிபதி பணம் ஈட்டும் எந்தப் பணியையும் செய்ய முடியாது.  ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் செய்யலாம். அவர் இசைஞானிதானே...

ஆன்லைன் ரம்மி என்பது ஒரு வகை எலெக்ட்ரானிக் போதை

0
    ? ஆன்லைன் ரம்மிக்கு தேசிய அளவில் தடை கொண்டு வரத் தடையாக இருப்பது எது? - நெல்லை குரலோன், பொட்டல்புதூர் நமது சட்டத்திலுள்ள ஓட்டைகள். நீதிபதிகளின் கருணைப்பார்வை, அரசியல் பின்புலமுள்ள லாபிக்கள்.  இந்தியாவில் ஆன்லைன் ரம்மியை வரைமுறைப்...