120 சேனல்களில் ஒரு கோடி நேயர்கள் பார்த்த ஷோ

120 சேனல்களில் ஒரு கோடி நேயர்கள் பார்த்த ஷோ

Published on

முகநூல்பக்கம்

ந்த ஒப்பிலா 'ஒபரா வின்ஃப்ரே(Oprah Winfrey) ஷோ'வுக்கு அனைவரும் ஃபேன்ஸ் என்றால் தப்பிலா உண்மை.

120 சேனல்களில்  ஒரு கோடி நேயர்கள் பார்த்து முதல் வருஷமே 90 கோடி ஈட்டிய ஷோ. 25 வருஷம் ஓடிய அதில் அவர் ஒரே ஒரு நாள்கூட திரையில் தோன்றாமலிருந்ததில்லை. தானே சொந்தமாக டாக் ஷோ தயாரித்த முதல் பெண்மணியாயிற்றே?

ஆறு வயதாயிற்றாம் முதல் செருப்பை அணிய! பின்னால் கோடிகள் தேடி வந்தன இந்த 'மீடியாவின் அரசி'யை. 2007 இல் உலகின் மிக அதிக செல்வாக்குள்ள பெண்ணாகச் சொல்லப்பட்டார் இந்த இடக்கை பழக்கக்காரர்.

இவர் ஆரம்பித்த 'ஒபரா புக் கிளப்' அபார பிரசித்தம். புத்தக வாசிப்புக்கு புதுத் தளம். நம்ம 'அலெக்ஸா'வின் முதல் பிரபல குரல் இவருடையது. கடைசி ஷோக்களில், அதுவரை தான் அறியாதிருந்த தன் சகோதரி பற்றி சொல்ல டி.ஆர்.பி. பிய்த்துக் கொண்டு போனது.

ரெண்டரை வயசிலேயே எழுதப் படிக்க ஆரம்பித்து, கிண்டர்கார்டனில் சேரும் வயதில் தன்னை ஒன்றாம் கிளாசில் சேர்க்கச் சொல்லி டீச்சருக்கு எழுதி, சேர்த்துக் கொள்ளப்பட்டு அடுத்த வருஷமே மூன்றாம் வகுப்புக்கும் போன கதை இவருடையது.

தன்னம்பிக்கையின் சின்னம். 'ஏகப்பட்ட வாய்ப்புக்களைக் கொண்டு வருகிறது ஒவ்வொரு நாளும்… இன்னும் முழுமையாக வாழ, இன்னும் ஆழமாக நேசிக்க, புதிதாய் ஏதேனும் கற்றுக்கொள்ளுங்கள். 'உங்கள் காயங்களை விவேகமாக உருமாற்றிக் கொள்ளுங்கள். என்கிறார்.

 KB கேபி ஜனார்த்தனன் முக நூல பக்கத்திலிருந்து
Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com