0,00 INR

No products in the cart.

120 சேனல்களில் ஒரு கோடி நேயர்கள் பார்த்த ஷோ

முகநூல்பக்கம்

 

ந்த ஒப்பிலா ‘ஒபரா வின்ஃப்ரே(Oprah Winfrey) ஷோ’வுக்கு அனைவரும் ஃபேன்ஸ் என்றால் தப்பிலா உண்மை.

120 சேனல்களில்  ஒரு கோடி நேயர்கள் பார்த்து முதல் வருஷமே 90 கோடி ஈட்டிய ஷோ. 25 வருஷம் ஓடிய அதில் அவர் ஒரே ஒரு நாள்கூட திரையில் தோன்றாமலிருந்ததில்லை. தானே சொந்தமாக டாக் ஷோ தயாரித்த முதல் பெண்மணியாயிற்றே?

ஆறு வயதாயிற்றாம் முதல் செருப்பை அணிய! பின்னால் கோடிகள் தேடி வந்தன இந்த ‘மீடியாவின் அரசி’யை. 2007 இல் உலகின் மிக அதிக செல்வாக்குள்ள பெண்ணாகச் சொல்லப்பட்டார் இந்த இடக்கை பழக்கக்காரர்.

இவர் ஆரம்பித்த ’ஒபரா புக் கிளப்’ அபார பிரசித்தம். புத்தக வாசிப்புக்கு புதுத் தளம். நம்ம ‘அலெக்ஸா’வின் முதல் பிரபல குரல் இவருடையது. கடைசி ஷோக்களில், அதுவரை தான் அறியாதிருந்த தன் சகோதரி பற்றி சொல்ல டி.ஆர்.பி. பிய்த்துக் கொண்டு போனது.

ரெண்டரை வயசிலேயே எழுதப் படிக்க ஆரம்பித்து, கிண்டர்கார்டனில் சேரும் வயதில் தன்னை ஒன்றாம் கிளாசில் சேர்க்கச் சொல்லி டீச்சருக்கு எழுதி, சேர்த்துக் கொள்ளப்பட்டு அடுத்த வருஷமே மூன்றாம் வகுப்புக்கும் போன கதை இவருடையது.

தன்னம்பிக்கையின் சின்னம். ‘ஏகப்பட்ட வாய்ப்புக்களைக் கொண்டு வருகிறது ஒவ்வொரு நாளும்… இன்னும் முழுமையாக வாழ, இன்னும் ஆழமாக நேசிக்க, புதிதாய் ஏதேனும் கற்றுக்கொள்ளுங்கள். ‘உங்கள் காயங்களை விவேகமாக உருமாற்றிக் கொள்ளுங்கள். என்கிறார்.

 KB கேபி ஜனார்த்தனன் முக நூல பக்கத்திலிருந்து

2 COMMENTS

  1. ஓவ்வொரு நாளும் முழுமையாக வாழ,
    ஆழமாக நேசிக்க புதிதாய் ஏதேனும் கற்று
    கொள்வது சால சிறந்தது.

  2. முற்றிலும் சரியான அறிவுரை ஏதோ ஒரு திறமை எல்லார்க்கும் இருக்கும்.அதை
    கண்டறிந்து நேரத்தை செலவிட வேண்டும்
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

தமிழ்த் தாத்தா சேர்த்து வைத்த சொத்தில் வாழும் பேரன்கள் நாம்.

0
  உ.வே.சவின் "என் சரித்திரம்"   150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர். 3000க்கும்...

எப்படி மரியா இதெல்லாம் சாத்தியமாயிற்று?

0
முகநூல்  பக்கம்   உள்ளத்தில் உறுதியாக ஒன்றை நினைத்து விட்டால் அந்த உள்ளம் எப்பாடுபட்டாவது அதனை முடித்துக் கொடுத்து விடும். டாக்டர் மரியா விஜி. கேரளத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண். சக்கர நாற்காலி இல்லாமல் எங்கேயும்  போக...

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா ??

0
முகநூல் பக்கம்   கண்முன்னால் நேர்ந்த நிகழ்வில் நெகிழ்ந்து எழுதுகிறேன். நிறைகளைச் சத்தமாய்ச் சொல்ல வேண்டும் தானே ? எங்கள் ஸ்டாஃப் ப்ரீத்தி (Woman Health volunteer )சமீபத்தில்தான் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்'கீழ்  பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்....

என் சொந்த வீடே… எனக்கு அனாதை இல்லமாகிப் போனது…

0
முகநூல் பக்கம்   முதுமை + தனிமை= கொடுமை ! பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...இங்கு... 70...

“என் உயிரைக் குடுத்தாவது நமக்கு பொறக்கப் போற கொழந்தைய நான் நல்லா படிக்க வெப்பேன்!”

0
முகநூல் பக்கம் அண்மைக்காலமாக, பொதிகை தொலைகாட்சியில்  ஒளிபரப்பாகும்  “மங்கையர் சோலை” நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  எளிய மற்றும் மீடியா வெளிச்சம் விழாத சாதனைப் பெண்களைத் தேடிப்பிடித்து நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்துப் பாராட்டுகிறார்கள்.  எதிர்வரும் 14.04.2022...