கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

வாசகர் ஜோக்ஸ்                                                         ஓவியம் : ரஜினி

"தேர்தல் வெற்றிக்காக  நான் பாடுபட்டதைப் பாராட்டி தலைவர்,  தான் போட்டிருந்த  செயினையே கழட்டி எனக்கு கொடுத்துட்டார்!"

"கழுத்துல போட்டிருந்த மைனர் செயினையா?"

"இல்லஇடுப்புல கட்டியிருந்த சைக்கிள் செயினை!"

– வி. ரேவதி, தஞ்சை

"உங்க உடம்பு இளைக்கணும்னா இனிமே நீங்க மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்கணும்!"

"சாப்பாட்டுக்கு முன்னாலயா? சாப்பிட்டுக்குப் பின்னாலயா டாக்டர்?"

– சி.ஆர்.ஹரிஹரன்,  கேரளா

"என்னய்யா கட்சி ஆபிஸ் வெளியே கூட்டமா இருக்கு?"

"யாரோ, உங்க வீட்ல வருமான வரித்துறை ரெய்டு நடக்குது, மதியம் சாப்பாடு போடறதா வதந்தி பரப்பிவிட்டிருக்காங்க தலைவரே!"

– சி.கார்த்திகேயன், சாத்தூர்

"கஜானா காலி என்பதற்காக இப்படியா?"

"என்னாச்சு?"

"மன்னர், புலவரைப் புகழ்ந்து பாடுகிறாரே!"

– சி.ஆர்.ஹரிஹரன், கேரளா

"என்னயா… சண்டையில என்னோட வாள் ஒருத்தரையும் வெட்டவே மாட்டேங்குது?"

"வரும் வழியெல்லாம், வாளால் இளநீரை வெட்டிக் குடிக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே மன்னா!"

 – திருப்பூர் சாரதி

"தலைவருக்கு நகைக்கடை திறப்பு விழாவுக்குப் போறது பிடிக்காதா?"

"அது பிடிக்கும், அங்கே கண்காணிப்பு கேமரா வச்சிருக்கிறதுதான் பிடிக்காது!"

– சி.ஆர்.ஹரிஹரன், கேரளா

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com