
"தேர்தல் வெற்றிக்காக நான் பாடுபட்டதைப் பாராட்டி தலைவர், தான் போட்டிருந்த செயினையே கழட்டி எனக்கு கொடுத்துட்டார்!"
"கழுத்துல போட்டிருந்த மைனர் செயினையா?"
"இல்ல… இடுப்புல கட்டியிருந்த சைக்கிள் செயினை!"
– வி. ரேவதி, தஞ்சை
"உங்க உடம்பு இளைக்கணும்னா இனிமே நீங்க மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்கணும்!"
"சாப்பாட்டுக்கு முன்னாலயா? சாப்பிட்டுக்குப் பின்னாலயா டாக்டர்?"
– சி.ஆர்.ஹரிஹரன், கேரளா
"என்னய்யா கட்சி ஆபிஸ் வெளியே கூட்டமா இருக்கு?"
"யாரோ, உங்க வீட்ல வருமான வரித்துறை ரெய்டு நடக்குது, மதியம் சாப்பாடு போடறதா வதந்தி பரப்பிவிட்டிருக்காங்க தலைவரே!"
– சி.கார்த்திகேயன், சாத்தூர்
"கஜானா காலி என்பதற்காக இப்படியா?"
"என்னாச்சு?"
"மன்னர், புலவரைப் புகழ்ந்து பாடுகிறாரே!"
– சி.ஆர்.ஹரிஹரன், கேரளா
"என்னயா… சண்டையில என்னோட வாள் ஒருத்தரையும் வெட்டவே மாட்டேங்குது?"
"வரும் வழியெல்லாம், வாளால் இளநீரை வெட்டிக் குடிக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே மன்னா!"
– திருப்பூர் சாரதி
"தலைவருக்கு நகைக்கடை திறப்பு விழாவுக்குப் போறது பிடிக்காதா?"
"அது பிடிக்கும், அங்கே கண்காணிப்பு கேமரா வச்சிருக்கிறதுதான் பிடிக்காது!"
– சி.ஆர்.ஹரிஹரன், கேரளா