0,00 INR

No products in the cart.

ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்த அமெரிக்க அதிபர் !

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

? பெகாசஸ் விவகாரம் மீண்டும் எழுந்திருக்கிறதே?
– நரசிம்மன், ஶ்ரீரங்கம்

! உலகப் புகழ்பெற்ற ’நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் அண்மையில்  உலகின் மிக சக்தி வாய்ந்த இணைய ஆயுதற்கான போர்  என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதில் உளவு பார்ப்பதற்கான இந்த மென்பொருளை இஸ்ரேலிடமிருந்து இந்தியா 15000 கோடிக்கு வாங்கியிருப்பதாகச் சொல்லுகிறது. இந்திய அரசு நாடாளுமன்றத்தில்  மறுக்கப்பட்ட விஷயம் இது.  இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்  கண்டனக்குரல் எழுப்பி  வெளிநடப்புச் செய்ய எதிர்கட்சிகளுக்கும், பட்ஜெட்டை  அதிக விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்ற  ஆளும் கட்சிக்கும் கிடைத்திருக்கும் நல்  வாய்ப்பு இது.

? சமூக ஆர்வலர்கள் போன்ற நபர்கள் கவர்னர் பதவியில் நியமனம் செய்யப்பட்டால் தேவை இல்லாத பிரச்னை உருவாக்க முடியாதுதானே?
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

! நமது அரசியலமைப்பில் “ஆளுநர்”  என்ற பதவி மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இணைப்புப் பாலமாகவும், அரசியல் நெருக்கடி நேரும் காலங்களில் நிர்வாகத்தை மேற்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் அதிகாரம்  ஒன்றிய அரசின் கையிலிருப்பதால் ஆளும் கட்சி தங்கள் கட்சி சார்பு நிலையிலிருப்பவர் களையே நியமிக்கிறது.  அதனால் நீங்கள் சொல்லுவது போன்ற நபர்களை நியமிக்க வாய்ப்பில்லை. சில நேரங்களில் சில விஷயங்களை மட்டும் சில மாநில ஆளுநர்கள் தீவிரமாகச் செய்வதையும், மாற்றுக் கட்சி ஆளும் மாநிலங்களில்  சில விஷயங்களை மட்டும்  கிடப்பில் போடுவதைக் கவனித்திருப்பீர்களே.

? ஆட்சியைப் பிடித்து எட்டு மாதத்தில் அதிருப்தி பெற்ற கட்சி என்றால் அது தி.மு.க.தான் என விமர்சிக் கிறாரே  ஜெயக்குமார்?
– ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி

! அவரது  கட்சி 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தும் ஏன் மக்களுக்குத் திருப்தியை அளிக்க முடியவில்லை என்பதையும் அவர் சொல்லியிருக்க வேண்டும்.

? அன்று வாரப் பத்திரிகைகளில் தொடர் நாவல் படித்தது, இன்று டிவியில் தொடர்ந்து சீரியல் பார்ப்பது. ஒப்பிடுக…!
– வாசுதேவன், பெங்களூரு

! அன்றைய நாவல்கள் பெண்களை அவமதித்த தில்லை. வன்முறை எண்ணங்களை விதைத்ததில்லை. ஒரு வாரம் தவறினாலும்  அதைத் தேடிப் படிக்கும்படி அமைந்திருந்தது அன்றைய நாவல்கள். இன்றைய சீரியல்களை  நடுவில் பல எபிஸோடுகளை பார்க்காமல்   எப்போது பார்த்தாலும் கதையைப் புரிந்து கொள்ள முடியும்.

? நம் பிரதமர் மோடி உடைகள் அணிவதில்  தனிக்கவனம் செலுத்துகிறாரே?                    – தியாகராஜன், சென்னை

! உலகத்தவர் களிலேயே  அணியும் உடைவிஷயத்தில் அதிக அக்கரை காட்டுபவர்  நம் பிரதமர். காசி விஸ்வநாதர் கோவில் விழாவில் ஒவ்வொரு வாயில் வழியே வரும் போதும் வெவ்வேறு உடையில் வந்தார்,   அண்மையில் குடியரசு தின   விழாவில்  ஜார்கண்ட் மாநில தொப்பி, மணிப்பூர்  பழங்குடிகள் அணியும், நீண்ட துண்டு, என்.சி.சி மாணவர்களைச் சந்திக்கும் போது சர்தார்ஜிகளின்  தலைப்பாகை அணிந்ததெல்லாம் அந்த மாநிலங்களில் நடக்கப் போகும்தேர்தல்களுக்காக என்று நீங்கள்  எண்ணிக்கொள்ளக்கூடாது.

? நேதாஜிக்கு இப்போது கொண்டாடப்படுவது 126வது பிறந்த நாளா? 125ஆவதா?
– ரேவதி, திருப்பூர்

! பலருக்கு எழுந்த சந்தேகம் இது. நேதாஜி பிறந்தது ஜனவரி 23,  1897. அதன்படி 125 ஆண்டுகள்  முடிந்து 126 வது பிறந்தநாள் தொடங்குகிறது.
ஆண்டுதோறும்
அரசு விழாவாகக் கொண்டாடும் தமிழக அரசு இந்த ஆண்டு ’126 வது பிறந்த நாள்’ என்றுதான் முதலில் அறிவித்திருந்தது.  இந்த ஆண்டு முதல் ’நேதாஜியின் பிறந்த நாள்  அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’ என்று  ஒன்றிய அரசு அறிவித்த போது  125 வது என்று அறிவித்திருந்தது.  தமிழக அரசும்  விளம்பரங்களை 125 ஆவது என்று விளம்பரங்களில்   மாற்றியது. நேதாஜியின் மரணத்தில்தான் மர்மங்களும் சர்ச்சைகளும் இருந்தது.  ஒன்றிய அரசு இப்போது பிறந்தநாளையும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

? ’தமிழகச் சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அ.தி.மு.க. எம்.எல். ஏ., ஒருவரைக்கூடப் பார்க்க முடியவில்லை’ என்கிறாரே நயினார் நாகேந்திரன்?
– ஜோஷ், அயன்புரம்

! இதே வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்லி  கண்டனத்துக்குள்ளான பா.ஜ.க. சார்புள்ள பத்திரிகையாசிரியர்  நினைவுக்கு வருகிறார். அ.தி.மு.க. காரர்களுக்கு  இவர் சொல்வது  இருக்கிறதோ இல்லையோ…  தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் தாங்கள் சார்ந்திருக்கும்  கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை  அவமதிக்கும் வகையில் பேசி காரியத்தைக் கெடுத்துக்கொண்ட  திறமைசாலிகள்  தமிழக பா.ஜ.க.வின் தலைமையிலிருக்கிறார்கள்.

? சென்னையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்திருக்கிறார்களே?
– பாபுராஜ், ராணிப்பேட்டை

! வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது  எழுந்து நிற்காமலிருந்ததோடு “அவசியமில்லை” என்று வாதாடியுமிருக்கிறார்கள் என்பது மிக வருத்தத்துக்குரிய செயல். ஒரு சிலரின் தவற்றால் வங்கியின் உயர் அதிகாரி தமிழக நிதியமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்க நேர்ந்திருக்கிறது.

? ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்துக்குக் குறைந்த விலைக்குக் கொடுத்ததின்  மூலம்
மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட  மதிப்பு மிக்க ஒரு  சொத்தை அரசு இழந்துவிட்டதல்லவா
?   
– அசோக், விழுப்புரம்

! இல்லை.  அந்த சொத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட விலை 18000 கோடி. அதில் 2700 கோடி ரொக்கமாகக் கொடுத்தபின்  நிலுவையிலுள்ள ஏர் இந்தியாவின் கடன் 15300  கடனை ஏற்றிருக்கிறது.  தங்கள் செயலாற்றறிலும் நிர்வாகத் திறமையிலும்  நம்பிக்கை கொண்ட  ஒரு இந்திய நிறுவனம் துணிவுடன், இப்படி ஏற்றிருப்பதை உலகின் பல முக்கிய விமான நிறுவனங்கள் ஆச்சரியத்துடன் பாராட்டுகின்றன.  கடன் சுமையால் சிக்கித் தவித்த ஏர் இந்தியாவின் கெளரவத்தைக் காப்பாற்றி  மீட்டெடுத்ததற்காக  டாடா நிறுவனத்தினர்  பாராட்டப்படவேண்டியவர்கள்.

? இன்றை உலகத் தலைவர்களில்  அதிக பந்தா காட்டாதவர்  யார்?
– கிருஷ்ண குமாரி, திருமங்கலம்

! “வெள்ளை மாளிகையிருந்தாலும் வாஷிங்டன் அருகிலிருக்கும்  அவரது சொந்த ஊருக்கு  வார இறுதிகளில் வருவதும் அங்கு சைக்கிளில் செல்வதையும் காணும்போது, இவரைவிட எளிமையான அமெரிக்க அதிபரைப் பார்க்க முடியுமா?”  என்ற பிரமிப்பை ஏற்படுத்துபவர் பைடன்.  அண்மையில் வாஷிங்டன்  நகரில் சென்று கொண்டிருந்த பைடன் காரை நிறுத்தச்சொல்லி  அருகிலுள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்து  அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தார். தனக்குப்பிடித்த ஒரு ஐஸ்கிரீம் இரண்டு ஸ்கூப் தரச்சொல்லி பணம் கொடுத்து வாங்கி  சாப்பிட்டிருக்கிறார் இந்த ஐஸ்கிரீம் பிரியர்.

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

தொலை நோக்கி கொண்டு தேடினாலும் கிடைக்கமாட்டார்.

1
  ?  "தொலைநோக்கியில் தேடினாலும் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார்" என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தக் கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? - இரா. அருண்குமார், புதுச்சேரி – 605001 !...

கலைஞர் நினைவிடத்தில் கோபுரச்சின்னம்

0
  கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்ற அலங்காரம் வைத்து மரியாதை செலுத்திய இந்துசமய அறநிலையத்துறையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? - இரா. அமிர்தவர்ஷினி,  புதுச்சேரி - 605001 ! இந்து மத எண்டோன்மெட்...

என் புகழ் பாட அனுமதியில்லை

1
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? “சட்டமன்றத்தில் என் புகழ் பாட அனுமதியில்லை. அப்படி யாராவது செய்தால் கண்டிக்கப்படுவர்” என்று முதல்வர்  ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே? - வெற்றி செல்வி திருமாறன், திருச்சி ! சட்டமன்றத்தின் முதல்...

விலங்குகளுக்கு தனி மொழி இருக்கிறதா?

2
? விளையாட்டு நகரம் உருவாகப் போவதாக அறிவித்திருக்கிறார்களே ? - சண்முக சுந்தரம், ஈரோடு ! ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடுவதற்காக உலகத்தரத்திலான கட்டமைப்புகளுடன் சென்னை அருகே பிரமாண்டமான...

நமக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான உறவு அவரது இசை மட்டும்தான்.

2
? இளையராஜா,  அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகிறாரே ? - ஜெயராமன், தூத்துக்குடி ! மோடி புகழ் பாடும் ஒரு புத்தகத்துக்கு இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடும் பகுதிகள்...