0,00 INR

No products in the cart.

தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்

ஸ்ரீரமணர் அமுதமொழி

 

நீ எந்த அளவிற்கு அடங்கிப் பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது. வாழ்வில் உனக்குக் கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளையைத் தவிர, மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே. தவிர, உன் வேலைகளை எல்லாம் நீயே செய்துகொள்.

எண்ணங்கள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி தன்னுள் செலுத்தி தயங்காமல், ‘நான் யார்?’ என்ற விசாரணை செய்ய வேண்டும். மனதை நீ வெளி விஷயங்களிலும் எண்ணங்களிலும் திசை திருப்பக்கூடாது. விருப்பும் வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை. மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்நிலையிலும் இருக்கலாம். மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது. அதுதான் தவம்.

கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால் கடவுளை எளிதில் காணலாம். கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வரும்.

தீமைகளைச் செய்யாதீர்கள். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள். ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்துகொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பதுதானேயன்றி வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று. விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா, விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொரு வழி.

‘நான் யார்?’ என்ற எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை, ஞானம், மோட்சம் ஆகும். எனவே ‘நான் யார்’ என்று எண்ணங்கள் இல்லாமல் இருத்தலே பரிபூரண நிலையாகும்.

‘உன்னைக் கண்டுபிடித்து அறிந்துவிட்டால் அனைத்தையும் கண்டுபிடித்தவன் ஆவாய்’.

2 COMMENTS

  1. ஶ்ரீரமணர் அமுதமொழி படித்தது மனதிற்கு இதமாக இருந்தது.வாழ்க்கை என்னும் சுகத்தையோ,சுமையையோ கடவுளிடம்
    சரணாகதி அடைந்து விட்டு சிவனே என்று
    இருந்து விடவேண்டியதுதான்.

  2. ரமணரின் அமுதமொழி வாழ்வின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது. படிக்க படிக்க பேரின்பம் தருகிறது. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காமல் நமது வேலைகளை எல்லாம் நாமே செய்துகொள்வதே சிறப்பு. கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால் கடவுளை எளிதில் காணலாம். கர்த்தா ஒருவனே , அவனை நம்முடைய இதயத்தில் தேடலாம் என்பது நமது இதயத்தை பரிசுத்தமான கோயிலாக வைத்திருக்க ரமணர் கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறது. கடவுளின் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே நான் என்பதை உணருகிறபோது பணிவு வருகிறது. தீமைகளைச் செய்யாது, தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து மகிழ்ச்சி, மன நிறைவு பெறுவோம். அமுதமொழி உயிர்மொழி.

    ஆ. மாடக்கண்ணு
    பாப்பான்குளம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...