0,00 INR

No products in the cart.

  போரும் அமைதியும்

சிறப்புக் கட்டுரை

– ரமணன்

 

ஏன் இந்தப் போர் ?

மூன்றாவது உலகப்போராகிவிடுமோ? என்ற அச்சத்தை உலக நாடுகளுக்கு ஒரே இரவில் உருவாக்கிய  ரஷ்யா- உக்ரைன் போர் வெறும் இரு நாட்டு பிரச்னை இல்லை. இந்தப் போர்ச் சூழல் உருவானதற்கு காரணம், அவசியம் குறித்து சற்று உற்று நோக்கினால் தான் இதற்கு பின்னாலுள்ள  உலக அரசியலும், பொருளாதார தேவைக்காகவும், அதிகாரப் பசிக்காகவும் உலக யுத்தத்தை நடத்த  இரு வல்லரசுகள் தயாராகி வருகின்றன. என்பதும் புரியும்.

ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்த, முன்பிருந்த சோவியத் யூனியனைவிட வலுவான நாடாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள ரஷ்யா தொடங்கியிருக்கும் ஆட்டம்தான் இந்தப் போர் சங்கிலியின் முதல் கண்ணி.  ஆட்டத்தை தொடங்கிய ரஷ்யாவை, உக்ரைன் என்னும் துருப்பு சீட்டை கொண்டு வெட்டித் தள்ள அமெரிக்கா துடித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அடங்கிய நேட்டோ படையில் அண்டை நாடான உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, அந்நாட்டை தங்கள் ராணுவ பலத்தை கொண்டு கைப்பற்ற திட்டமிட்ட விவகாரம் கடந்த சில நாட்களாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ’உக்ரைன் ஏன் நேட்டோவில் இணைய விரும்புகிறது’ என்பது தனி அரசியல் அத்தியாயம்.

தனது அண்டை நாட்டில் நேட்டோ படைகள் மூலமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு ராணுவங்கள் முகாமிடுவதை ரஷ்யா விரும்பவில்லை. ஆனால், சோவியத் யூனியனில் ஒரே நாடாக இருந்த உக்ரைன், தனி நாடான பின்னர்  ரஷ்யாவை மீறி, ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கம் காட்டுகிறது. ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதால், இந்த விவகாரம் 3ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் அளவுக்கு சிக்கலாகி உள்ளது.

உக்ரைன் நேட்டோவில் சேர்வது மட்டும் இப்பிரச்னைக்கு காரணமா?

நிச்சயமாக இல்லை. இதன் பின்னணியில் உலக ஆதிக்க சக்திகளின் பயங்கரமான அரசியல் பின்னிப் பிணைந்துள்ளது. இயற்கை எரிவாயு வளமிக்க நாடு ரஷ்யா. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை அதிகளவில் பூர்த்தி செய்வதும் இதுதான். அந்த இடத்தை பிடிக்க அமெரிக்கா பல ஆண்டாக தீவிரமாகப் போராடி வருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், ரஷ்யாவில் இருந்து ஜெர்மனி வரை பால்டிக் கடலுக்கு அடியில் 1,222 கி.மீ. தொலைவுக்கு எரிவாயு குழாய் அமைக்கும், ‘நார்டு ஸ்ட்ரீம்-2’  என்ற விரிவாக்க திட்டத்தை ரஷ்ய அரசு திட்டமிட்டது. இந்த திட்டத்தின் மூலம் பின்லாந்து, ஸ்வீடன், போலந்து ஆகிய நாடுகள் வழியாக ஜெர்மனியை எரிவாயு குழாய் சென்றடையும். இதன் மூலம், ரஷ்யா நேரடியாக ஜெர்மனிக்கு எரிவாயு சப்ளை செய்ய முடியும். ஜெர்மனி மூலமாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு மலிவான விலையில் எரிவாயு வழங்க முடியும். இதை வைத்து ரஷ்யா, ஜெர்மனியின் பொருளாதாரம் மேம்படுவதோடு, ஐரோப்பிய கண்டத்தில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்ட முடியும்.

பிரச்னையின் ஆணி வேர்

ரஷ்யா இந்தப் போரில் பெறும் வெற்றிகளினால்  ஐரோப்பாவுக்கு அமெரிக்காவின் தேவையே இல்லாமல் செய்ய முடியும். பொருளாதார ரீதியாக அமெரிக்க டாலரைவிட ஐரோப்பாவின் யூரோ மதிப்பை அதிகரித்து உலக வர்த்தக கரன்சியாக மாற்ற முடியும். இதுதான் பிரச்னையின் ஆணி வேர்.

ஆனால், ஐரோப்பா மீதான தனது பிடி எந்த விதத்திலும் தளர்த்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதனால்தான், அமெரிக்காவின் ஒபாமா, டிரம்ப், பைடன் என சமீபத்திய அதிபர்கள் அனைவருமே இந்த எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த திட்டம் நிறைவு பெற்ற போதிலும் ஜெர்மனி தரப்பில் இன்னமும்  அனுமதி தரப்படவில்லை. அமெரிக்காவின் ஒரே குறி ’நார்டு ஸ்ட்ரீம் (குழாய்கள் மூலம் எரி வாயு சப்ளை) திட்டத்தை தகர்த்துவிட வேண்டும்’ என்பது மட்டுமே. அதே சமயம், ரஷ்யாவும், ஜெர்மனியும் பழைய நண்பர்கள். இவர்கள் மீண்டும் நெருக்கமாவது ஐரோப்பிய யூனியனுக்கு நல்லதல்ல என ஐரோப்பிய உறுப்புகள் நாடுகள் சில கவலைப்படுகின்றன.இதன் காரணமாக, இவை  அமெரிக்காவுடன் இணைந்து எரிவாயு குழாய் திட்டத்தை தரைமட்டமாக்க முழு ஆதரவு தருகின்றன.

இங்கு அமெரிக்காவின் வியாபார மூளையில்  ஒரு தந்திரமும் ஒளிந்திருக்கிறது  2019ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஐரோப்பிய யூனியனின் எரிவாயு தேவையில் 5 சதவீதத்துக்கும் குறைவாக அமெரிக்கா பூர்த்தி செய்து வந்தது. முக்கிய சப்ளையர்களாக ரஷ்யா (41%), நார்வே (16%), அல்ஜீரியா (7.6%), கத்தார் (5.2%) ஆகியவை உள்ளன. கடந்த ஆண்டில் இந்த சப்ளையில் முன்னேற்றம் அடைந்த அமெரிக்கா, ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதியை தற்போது 23 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இதை இன்னும் அதிகரித்து முழு ஐரோப்பிய  எரிவாயு மார்க்கெட்டையும் அமெரிக்கா கைப்பற்ற  திட்டமிடுகிறது. இதற்கு இந்தப் போரைப் பயன்படுத்தி ரஷ்யாவின் எரிவாயுக் குழாய்களை நாசப்படுத்திவிட திட்டமிடுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் உக்ரைனை போரில் பலி கொடுத்து தன் எரிவாயு வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ளத்  திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக பயன்படுத்தப்படும் துருப்பு சீட்டுதான் உக்ரைன். உக்ரைனை பொறுத்த வரையில், அந்நாட்டின் வழியாக எரிவாயு குழாய் சென்றாலும், அதற்கான போக்குவரத்து கட்டணமாக பல லட்சம் கோடி ரூபாயை ரஷ்யா தர மறுக்கிறது. அதோடு, ’ஐரோப்பியா முழுவதற்கும் எரிவாயு சப்ளை செய்ய தொடங்கிவிட்டால் தங்கள் நாட்டிற்கான எரிவாயு சப்ளையை ரஷ்யா தன்னிச்சையாக நிறுத்திவிடும்’ என உக்ரைன் அஞ்சுகிறது. இதுவே ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தால், ரஷ்யாவின் மிரட்டல்களில் இருந்து விடுபடலாம் என நினைக்கிறது. எனவே, உக்ரைனை பயன்படுத்தி ரஷ்யாவின் கனவை தகர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் களம் இறங்கி உள்ளன.

அண்மையில் ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ் உடனான சந்திப்புக்குப் பின், கூட்டாக பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் பைடன், ‘உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் எங்களின் முதல் குறி நார்டு ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களாகத்தான் இருக்கும். அதன் பின் அந்த குழாய்கள் இருக்கவே இருக்காது. அந்த திட்டத்தை நிறுத்தி விடுவோம்,’ என்றார்.

எல்லா வல்லரசு நாடுகளும் கடைப்பிடிக்கும் வழக்கமான பாணியில்தான் ரஷ்யாவும் இந்தப் போரின் ஆரம்ப கட்டத்தைத் தொடங்கியது. உக்ரைனின் ஒரு பகுதியில்  மொழியின் அடிப்படையில் ஒரு போராட்டக் குழு கிளர்ச்சிகளில் இறங்கியிருந்தது. கடந்த  சில ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டக்குழுவை ஆசிர்வதித்து அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருப்பது ரஷ்யா. இந்த கிளர்ச்சியாளர்கள் கிழக்கு உக்ரைனின் பல பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களுக்கான பொருளாதார தேவைகளை ரஷ்யாதான் பூர்த்தி செய்து வருகிறது.

ரஷ்யா கிளர்ச்சி படை மூலம்  தாக்குதல் எனத் துவக்கியிருக்கும்
ராஜ தந்திரத்தை உணர்ந்த  உக்ரையின் துணிவுடன் ’நேட்டோ நாடுகள்’ உதவும் என்ற நம்பிக்கையில் ரஷ்யாவை நேரடியாக போரில் சந்திக்கத் தயாரானது. ஆனால் ஆயுதங்களை அள்ளித்தர தயாராயிருக்கும் நேட்டோ நாடுகள் நேரடியாகப் போரில் இறங்க தயங்குகிறது. சரியாகச் சொல்வதானால் உக்ரைன்  இந்த நாடுகளால் ஏமாற்றப்பட்டுவிட்டது. இதை சரியாக முன்கூட்டியே கணித்த ரஷ்யா  உக்ரைனை கடுமையாகத் தாக்கி தலைநகர் கீவ்  உட்பட சில முக்கிய எல்லை நகரங்களை கைப்பற்றிவிட்டது. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போது போர் முழுவதுமாக முடிந்து ரஷ்யாவின் கை ஓங்கிய நிலையில் இருந்தாலும் ஆச்சரியமில்லை.

ஐ.நா. சபையின் தீர்மானங்கள், பொருளாதார தடைகள் பேச்சு வார்த்தைகள் போன்ற நாடகங்கள் ஆரம்பித்திருக்கின்றன.  எல்லாம் முடியும்போது  அமைதி திரும்பினாலும்  உக்ரைன் தனது நாட்டின் சில பகுதிகளை ரஷ்யாவிடம்  இழந்திருக்கும். அந்த நாட்டின் அரசு மறைமுகமாக ரஷ்யாவின் கட்டுபாட்டில் இயங்கும். இந்தப் போருக்கு எந்தவிதத்தில் சம்பந்தப்படாத  – இந்தியா உள்பட பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும்.

2 COMMENTS

 1. அருமையான ‌‌அலசல் பதிவு. பாராட்டுக்கள். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போகிறது உக்ரைன்
  ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கு எப்படி முட்டுக்கட்டை போட முடிகிறது என்பதை
  அமெரிக்க ‌‌அதிகாரப் பசி ஒரு எடுத்துக்காட்டு
  ரஷ்யாவின் கடலடி குழாய்களை தகர்க்க முனைந்தால் நிச்சயமாக எதிர்வினைகள் ‌நிகழும். சரித்திரம் திரும்பும்.
  இதில் தர்ம சங்கடம் இந்தியாவுக்கு தான்.‌ நடுநிலை நோக்கு பல்லிக்கும் ஈ கற்கும்
  இடையில் ‌‌நின்று வேடிக்கை பார்த்த கதைதான்
  திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

 2. போரும்,அமைதியும் கட்டுரையில் இருந்து
  அறியாமல் இருந்த பல உண்மைகளை
  அறிந்து கொண்டோம்.இதில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...