0,00 INR

No products in the cart.

முற்பாதியில் தருவது புதுமை; பிற்பாதியில் சோதிப்பது பொறுமை!

சினிமா விமர்சனம் 

– லதானந்த்

 

‘சாத்தானின் அடிமைகள்’  என்ற குழு ஹை டெக்காக போதைப் பொருள் கடத்துதல், செயின் பறிப்பு மற்றும் கொலைகளில் ஈடுபடுகிறது. அந்தக் குழுவைக் கண்டுபிடிக்க, கொஞ்ச நாள் ஏ.ஸி. யாகவும் பின்னர் பதவியிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்பெக்டராகவும் திகழும் சூப்பர் போலீஸ் – பீப்பிள்ஸ்’ காப் – அஜித் செய்யும் சாகசங்கள்தான் கதை.

இதைப் போன்றதொரு சேஸிங் காட்சிகள் இதுவரை தமிழ்ப் படங்களில் வந்ததில்லை என உறுதியாகச் சொல்லலாம். மேலை நாட்டுப் படங்களுக்கு இணையாகத் துரத்தல் காட்சிகளும் சண்டைகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு முதலில் ஒரு சபாஷ் சொல்லிவிடலாம்.

படத்தின் விறுவிறுப்பைப் பல மடங்கு அதிகரிக்கும் வண்ணம் பின்னணி இசை அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் ஒரு ஷொட்டு!

அஜித்தின் திட்டமிடல் திறமைகளை நாம் பாராட்டுகிறோமோ இல்லையோ… படத்தில் வரும் பாத்திரங்களே, “கில்லாடி சார் நீங்க” என்றும், “அவர் வேற மாதிரி” என்றும் பாராட்டித் தள்ளுகின்றன.

ஆரம்பித்து சுமார் 10 நிமிடம் கழித்துத்தான் படத்தில் அஜித் நுழைகிறார். அதன் பின்னர் ஃப்ரேம் டு ஃப்ரேம் அவர்தான்.

தமிழ்ப்பட சண்டைகளில் வில்லனின் ஆட்கள் அரிவாளால் வீசும்போது கதாநாயகன் பின் நோக்கிச் சாய்ந்து தப்புவாரில்லையா? இதில் ஒரு சண்டையின் பெரும் பகுதி நேரம் அடியாட்கள் தப்பாகவே அரிவாள் வீச, அஜித் சமர்த்தாகப் பின்னோக்கிச் சாய்ந்து சாய்ந்து தப்பித்துக்கொண்டேயிருக்கிறார்.

தன்னுடைய இருப்பிடத்துக்குக் கதாநாயகனை வரவழைக்க அவரது உறவினர்களைப் பயணக் கைதிகளாக வில்லன் தனது இடத்தில் பிடித்து வைத்துக்கொள்ளும் நியாண்டர்தால் கால டெக்னிக், இந்த ஹை டெக் படத்திலும் இருப்பதுதான் கொடுமை.

“தமிழ்நாட்டில் இருக்கும் பிச்சைக்காரர்களில் 410 பேர் இன்ஜினீயர்கள்”  என்பது போன்ற நையாண்டிகள் உண்டு.

சண்டைக் காட்சிகளைவிட மோட்டார் சைக்கிளில் சவாரி செய்துகொண்டே நிகழ்த்தும் சர்க்கஸ் காட்சிகள்தான் அதிகம்.

வழக்கமாக ஷேவ் செய்யாத முகத்துடன் பெப்பர் சால்ட் சிகையலங்காரத்துடன்  காட்சியளிக்கும் அஜித், இந்தப் படத்தில் மொழு மொழு முகத்துடன் தரிசனம் தருகிறார்.

நல்ல வேளை டூயட் பாடல்கள் இல்லை. அப்படியும் இதர சில பாடல்கள் படத்தின் வேகத்தை மட்டுப்படுத்திவிடுகின்றன.

ஒரு காட்சியில் 12 AM எனக் காட்டுகிறார்கள். 12 நள்ளிரவு என்பதே சரி. (12.01 என்பதை வேண்டுமானல் AM எனச் சொல்லலாம்.)

ஆரம்பத்தில் அஜித்தின் அண்ணனின் கையில் கட்டப்படும் ஜிபிஎஸ் கடிகாரத்துக்கு உள்ள முக்கியத்துவம் கடைசியில் விளங்குகிறது.

“வலிமை என்பது அடுத்தவரைக் காப்பது; அழிப்பது அல்ல” என்பது போன்ற ‘பஞ்ச்’களுக்குப் பஞ்சமேயில்லை.

“சிஸ்டம் சரியில்லைன்னு திட்டறோம்; நாம சரியா இருக்கோமான்னு பார்ப்பதில்லை. நாம சரியா இருந்தா சிஸ்டமும் சரியாகும்” என்ற வசனத்திலும், “எனக்கு எதிரியாக இருக்கணும்னு ட்ரை பண்ணாதே! அது ரொம்பக் கஷ்டம்” என்னும் வசனத்திலும்  ஏதேனும் உள்குத்து இருக்கிறதாவென்று தெரியவில்லை.

வலிமை – மொத்தத்தில்: முற்பாதியில் தருவது புதுமை;
பிற்பாதியில் சோதிப்பது பொறுமை!
 

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...