அண்டார்டிக்காவிலிருந்து 5000 கி.மீ., பறந்து வந்த பறவை

அண்டார்டிக்காவிலிருந்து 5000  கி.மீ., பறந்து வந்த பறவை
Published on

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் கடற்கரை பகுதிகளில் மாதந்தோறும் பறவைகள் கணக்கெடுக்க  ஆராய்ச்சி மாணவர்கள் செல்வது வழக்கம். அண்மையில் தங்கச்சி மடம் அந்தோணியார்புரம் மீன்பிடி இறங்குதளம் அருகே வனத்துறையைச் சேர்ந்தவர் மீனவருடன் இணைந்து சற்று மயங்கிய நிலையில் இருந்த ஒரு  பறவையை கண்டனர்.

அந்த பறவைக்கு தண்ணீர், முதலுதவி அளிக்கப்பட்டது உடனடியாக பறவை இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் கடற்கரை பகுதியில் இருந்து பறந்து சென்றது. கடற்கரை பகுதிகளில் இந்த பறவையை பார்க்காததால் அதை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் தேடிப் பார்த்த போது அது கடல் பறவையான அண்டரண்ட பறவை என தெரிய வந்தது.

வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்ட பறவை, கண்டம் விட்டு கண்டம் பறக்கும் அன்டார்டிகாவின் 'அல்பட்ரோசு' எனப்படும் அரிய வகை 'அண்டரண்ட' பறவை என தெரிய வந்துள்ளது.

உலக அளவில் சூழலியல் ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் 'ஜர்னல் ஆஃப் திரிட்டண்ட் டாக்ஸோ' என்ற ஆய்வு நிறுவனத்திற்கு அண்டரண்ட பறவை குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி ஆய்வு செய்யக்கோரினார்கள் ஆராய்ச்சி மாணவர்கள். அதன் அடிப்படையில் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னர் அவர்கள் சொன்னது  அது  அண்டார்டிக்காவிலிருந்து வந்திருக்கிறது. ஆசியாவிலேயே முதல் முறையாக தங்கச்சிமடத்தில் காணப்பட்டிருக்கிறது இந்த பறவை இறகை விரித்தால் அது 4.5 அடி வரை நீளும்.. அன்டார்டிகாவின் துருவப் பகுதிகளிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இந்த வகை பறவை அதிகமாக வசிக்கும். காற்றின் வேகம் மற்றும் காலநிலை மாற்றத்தால் 5,000 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து இந்த பறவை தங்கச்சி மடத்துக்கு வந்துள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com