0,00 INR

No products in the cart.

சினிமாவாகவும் வரப்போவதால் பொன்னியின் செல்வனுக்கு கிராக்கி

 

கா.சு.வேலாயுதன்

 

கோவை கொடீசியா புத்தகத்திருவிழா காட்சிகள்

 

ண்டுதோறும் நடக்கும் புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சிகள் தற்போது தமிழகம் முழுக்க  வியாபித்து வருகிறது. சிற்றூர்களிலும் பெரிதாக நடக்கிறது. அரசே புத்தகத் திருவிழாக்களை ஊக்குவித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு வழிகாட்டுகிறது. அதனால் சிறுநகரங்கள் கூட புத்தகத் திருவிழா எனப்படும் அறிவுவெளிச்சத்தில் ஜொலிக்கிறது.

அதில் சிகரம் தொட்டிருக்கிறது எனலாம் கோவை கொடீசியா புத்தகத்திருவிழா கடந்த 22-ந்தேதி மாலை. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைக்க ஆட்சியர் சமீரன்  முன்னிலை வகித்தார். இவர் மலையாள எழுத்தாளரும் கூட. தான் எழுதிய இரண்டு மலையாள நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பை இந்த கண்காட்சியில் வெளியிட்டிருக்கிறார். எழுத்தின் மகிமை எழுத்தாளனே அறிவான். அதை மெய்ப்பிப்பது போல பல நாட்கள், பல நேரங்கள் அவரை பல்வேறு புத்தக ஸ்டால்களில் காண முடிந்தது.

அநேகமாக தமிழத்தில் சர்வதேச தரத்திலான பெரிய ஆடிட்டோரியத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும். டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி என்றாலும் மருத்துவ உலகம் என்றாலும், அக்ரி இண்டெக் எனப்படும் விவசாய எக்ஸ்போ என்றாலும் நாடு முழுக்க இருந்து மட்டுமல்ல, உலகம் முழுக்க அத்துறை சார்ந்த வல்லுநர்கள் வந்து  ஆராய்ச்சி செய்து செல்லும் கொடீசியா வளாக ஹாலில் இத்திருவிழா நடக்கிறது என்றால் சும்மாவா?

பிரம்மாண்ட வளாகம், விஸ்தீரணமான பாதை. இரவிலும் பகல்போல் ஜொலிக்கும் விளக்குகள். பட்டுக்கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும் பச்சை, சிகப்பு கார்பெட் விரிப்புகள். அதில் நடந்து செல்லும் வாசகர்கள். வரிசையாய் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்த விதமே ஏதோ வெளிநாட்டில் பிரம்மாண்ட கண்காட்சிக்குள் புகுந்த பிரமையை ஏற்படுத்தி விடுகிறது.

200-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள். 280-க்கும் மேலான அரங்குகள். லட்சக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள். கொரோனாவிற்கு முன்பு 2019-இல் நடந்த புத்தகத் திருவிழாவில் சுமார் ரூ.4 கோடிக்கு புத்தகங்கள் வியாபாரம் நடந்தன.

இந்த ஆண்டு அது போல இரண்டு மடங்கு வியாபாரம் எட்டும் என்று கணக்குப் போட்டுள்ளார்கள் இந்தப் புத்தகக் கண்காட்சி நடத்தும் கொடீசியா மற்றும் பப்பாஸி நிர்வாகிகள்.

அப்படி சொல்ல வைத்தது கடந்த சனி, ஞாயிறன்று இங்கே திரண்ட கூட்டம். கடலை பொரி போல மக்கள் புத்தகங்களை அள்ளிச் சென்ற கோலம்.

அதிலும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி தொடங்கி, இரவு 8.30 மணி வரை உள்ளூர் மாரியம்மன் கோயில் திருவிழா தோற்றுவிடும் அளவுக்கு அப்படி ஒரு வாசகர்கள் மொய்ப்பு.

எந்த ஸ்டால்களுக்குள் சென்று திரும்பினாலும் மலிவு விலை பதிப்பு முதற்கொண்டு ஆர்ட் பேப்பரில் அச்சடிக்கப்பட்டது வரை கல்கியின் பொன்னியின் செல்வனைக் காண முடிந்தது. “வழக்கமாகவே அதிகம் விற்பனையாகும் பொ.செ., இந்த ஆண்டு சினிமாவாகவும் வந்து விட்டதால் இந்தக் கிராக்கி நிறைய” என்று சொன்னார் மீனாட்சி புத்தக நிலையம் விற்பனையாளர்.

பொதுவாகவே ஜெயகாந்தன் புத்தகம் வாங்கவே ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் தங்கள் தேடலை கடை, கடையாக நடத்துவார்கள். அந்த சிரமத்தை அகற்றியிருந்தார்கள் ஜெகேவின் நண்பர்கள் சிலர். “ஜெயகாந்தன் தோழர்கள்” என்ற பெயரில் ஜெகேவுடன் பழகின நண்பர்கள் கூடி ஒரு ஸ்டால் எடுத்திருந்தார்கள். அதை கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

அங்கே ஜெகேவின் புத்தகங்கள் மட்டும் 80 டைட்டிலுக்கும் மேல். அதில் சில நேரங்களில் சில மனிதர்களை ஒரே நாளில் இருந்த அத்தனையும் அள்ளிச் சென்று விட்டனர் வாசகர்கள் என்று தெரிவித்தார் இந்தக் குழுவில் ஒருவரான நடராஜன்.

இவர்கள் தம் ஸ்டாலுக்கு ஜெயகாந்தன் பெயருடன் வருபவர்கள் ஆதார் கார்டை காண்பித்து புத்தகப் பரிசுகள் பெறலாம் என்று அறிவித்திருந்தார்கள். அதேபோல கண்காட்சி தொடங்கிய மூன்றாவது நாள் ஒரு ஜெயகாந்தன் மனைவியுடன் வந்தார். பரிசு அறிவிப்பை மனைவிதான் பார்த்துச் சொல்ல வாட் எ சர்ப்ரைஸ் என்று பரிசை வாங்கிச் சென்றார். அவருக்கு மட்டுமல்ல, ஜெயகாந்தன் பெயரில் யார் வந்தாலும் பரிசு உண்டு என்று அறிவித்திருந்தார்கள் இந்த நண்பர்கள்.

ஓரிடத்தில் சக்தி ஸ்ரீதேவி என்ற பெயரில் பெரிய பேனர். அதிலிருந்து புகைப்படத்தில் சிரித்தபடி ஒரு சிறுமி. அதே சிறுமி நிஜத்தில் ஒரு டேபிளைப் போட்டு நிறைய டைட்டில்களில் நிறைய புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தார். அவர் வயது 16. ஈரோட்டுக்காரர் இதுவரை 16 நூல்களை எழுதி, தானே ஓவியம் தீட்டி, டிசைனிங் செய்து, பதிப்பித்து வெளியிட்டு, விற்பனையிலும் ஈடுபட்டிருக்கிறார் என்பது விசாரித்த பின்புதான் தெரிந்தது.

2-ம் வகுப்பு படிக்கும்போது டைரி எழுத ஆரம்பித்தாராம். தனக்கு ‘பாலே’ நடனம் பிடிக்கும் என்பதால் அதைப் பற்றியே எழுதி வந்திருக்கிறார். அதையே மூன்றாம் புத்தகமாக வெளியிட்டு விட்டாராம். இப்போது 16 புத்தகங்கள். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் வந்துள்ளது. எல்லாமே கவிதை, கதை, கட்டுரைகள். குறிப்பாக வேதா பற்றியும் எழுதியிருக்கிறார். சக்தி ஸ்ரீதேவி அழகாக கதையும் சொல்லுகிறார். அவரின் திறமை மட்டுமல்ல, பெற்றோர் ஊக்கம் பெருமைப்பட வேண்டியது என்று பலரும் வாழ்த்தி விட்டு செல்வதைக் காண முடிந்தது.

அதற்கு அடுத்தாற்போல் ஒரு ஸ்டால். அதில் மார்க்ஸ், பெரியார், அண்ணா, கலைஞர், கலாம், திருவள்ளுவர், புத்தர் என ஏகப்பட்ட சிலைகள். அதனுடன் செல்ஃபி எடுத்தவர்கள் எக்கச்சக்கம். அதிலும் வரும் எழுத்தாளர்கள், விவிஐபிக்கள் எல்லாம் கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.. ‘சிலை டாட்காம்’ என்ற கம்பெனி இப்படி சிலைகளை செய்து, அவர்களின் நூல்களை அதனருகே காட்சிப்படுத்தியிருந்தது. “உரிய விலை கொடுத்தால் புத்தகமும் கிடைக்கும். சிலையும் கிடைக்கும். ஆனால் ஆர்டர் செய்ய வேண்டும்” என்றார்கள்.

அதற்கு அடுத்து ஸீரோ டிகிரி பப்ளிக்கேஷன் ஸ்டால் புதிதாக இருந்தாலும் பிரம்மாண்டம். ந.பிச்சமூர்த்தி கதைகள் எல்லாம் அவ்வளவு பெரிய சைசில் சான்சே இல்லை என்று பெருமையாய் பலர் சொல்லிச் செல்வதை அந்த ஸ்டாலில் பார்க்க முடிந்தது.

நாம் நான்கு நாட்கள் இந்தப் புத்தகத்திருவிழாவிற்குள் சுற்றியதில் எப்படியும் ஏதவாது ஓர் இடத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மீதுதான் தடுக்கி விழா வேண்டியிருந்தது. சிற்பி பாலசுப்பிரமணியம். இசைக்கவி ரமணன், சோ. தர்மன். எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், மகுடேஸ்வரன் இப்படி எத்தனையோ பேர்.

பொதுவாக கொடீசியா சர்வதேச கண்காட்சி அரங்கு என்பதால் வாடகை மிகுதியாக இருக்கும். சமீபத்தில் நடந்த அக்ரி இண்டெக் கண்காட்சிக்கு ஒரு ஸ்டால் ரேட் ரூ. 50 ஆயிரம். அதுவே புத்தகக் கண்காட்சிக்காகவே அதில் நாலில் ஒரு பங்கு வாடகையே ஸ்டால்களுக்கு நிர்ணயித்திருக்கிறது. அந்த செலவு கூட சுயேச்சையாக புத்தகங்கள் வெளியிடும் எழுத்தாளர்கள் செய்ய முடியாதல்லவா? அப்படியானவர்களுக்கு தங்கள் புத்தகங்களை கடை விரிக்க குறைந்த செலவில் டேபிள்களை கொடுத்திருந்தது. அதில் பல குட்டிக்குட்டி எழுத்தாளர்கள் தம் புத்தகங்களை கடை விரித்திருந்ததை காண முடிந்தது.

“கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்ற நிலை முன்பு புத்தகங்களுக்கு இருந்தது. இப்போதெல்லாம் கடைவிரித்தால் போதும். அதைக் கொள்ளை கொள்ள நிறைய பேர் உண்டு என்பதை நிரூபித்துள்ளார்கள் கோவை மக்கள்.

 

1 COMMENT

 1. முக்கால உண்மைக்கு உதாரணம் என்ன என்பதற்கு….

  சூரியன் உதிப்பது கிழக்கு..
  கடல் அலைகள் ஓய்வதில்லை..
  என்ற வரிசையில்
  ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்திற்கு என்றும் கிராக்கி ! என்பதும் தான்..

  ஆ. மாடக்கண்ணு

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...