0,00 INR

No products in the cart.

சபாஷ்  தம்பி

தலையங்கம்

 

 95 ஆண்டுகளாக நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, இந்தியா இதுவரை ஒருமுறை கூட ஏற்று நடத்தியதில்லை. கொரோனா காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்ட 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இம்முறை ரஷ்யாவில் நடப்பதாக இருந்தது. உக்ரைனுடனான போர் காரணமாக அங்கு நடத்த முடியவில்லை. சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) வாய்ப்பை இந்தியாவிற்கு அளித்தாலும் , ஏற்று நடத்த எந்த மாநிலமும் தயாராக இல்லை. இந்தச் சூழலில்தான், ‘சென்னையில் அதற்கான வசதிகள் உள்ளன. ஏற்று நடத்த தயார்’ என முதல் கரம் நீட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சர்வதேச அளவில்  இந்தியாவின் ஓர் அங்கமாக தமிழகத்தின் புகழை மீண்டுமொரு அடையாளம் காட்ட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முனைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏற்பாடுகள் ஜெட் வேகத்தில் நடந்தன. இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகம் எங்கும் செஸ் விளையாட்டை உணரும்படியான ஏற்பாடுகள் குறிப்பாக மாணவர்களை ஊக்குவித்து போட்டிகள். அதன் வெற்றியாளர்களுக்கு விமானப்பயணம், சர்வதேச ஆட்டக்காரர்களின் விளையாட்டைப் பார்வையிடும் வாய்ப்பு  வழங்கப்பட்டது.

செஸ் காய்களில் ஒன்றான குதிரையை, ‘தம்பி’ எனப் பெயரிட்டு,  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிவித்து,  ‘வணக்கம் சென்னை… வணக்கம் செஸ்’ என்ற பெயரில் தமிழகம்  முழுவதும் கலை நிகழ்ச்சிகள், பேனர்கள், விளம்பரங்கள் செய்யப்பட்டன. பட்டிதொட்டியெங்கும் செஸ் ஒலிம்பியாட் பேசு பொருளாயிற்று. இதன் மூலம் ‘செஸ்’ என்ற விளையாட்டைப் பற்றி  அறியாத  தமிழக கிராமப்புற மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. சுமார் 2 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த சர்வதேச போட்டியின் தொடக்க விழாவை உலகெங்குமிருந்து பார்த்தவர்களின் மனதில் மகிழ்ச்சியும் நன்றியும்  ததும்ப  உடனடியாக பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

பன்னாட்டு அணிகளின் அணி வகுப்பு  அவர்களின் முன்னே நாடுகளின் பெயர்ப்பதாகையை தூக்கிவந்த அரசுப் பள்ளை மாணவச்செல்வங்கள், பலவகையான இந்திய நடனங்கள், ரகுமானின் வந்தே மாதரம் பிரமிக்க வைக்கும் டிஜிட்டில் முப்பரிமாண ஒளி ஓவியங்கள் எல்லாம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதன் பின் நுணுக்கமான திட்டமிடல், கூர்ந்த சிந்தனை சளைக்காத உழைப்பு இவை மட்டுமன்றிப் பெருங்கனவும் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாயிற்று. விழாவின் ஒவ்வொரு கணமும் தமிழரின் பெருமையை நாட்டின்  ஒற்றுமையை ஒலித்தன.

இந்தப் பெருமிதமான தருணத்துக்காக முதல்வர் ஸ்டாலின், அரசு அதிகாரிகள்  அல்லும் பகலும் உழைத்த பணியாளர்கள் அனைவருக்கும்  நம் நன்றியையும் வாழ்த்துகளையும் சொல்லுவோம்.

1 COMMENT

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...