
விஞ்ஞானம் என்பது பொருளை அடிப்படையாக வைத்து அமைந்தது. அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவன் பொருளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான். உணர்ச்சிகளுக்கோ, பிற மனிதப் பண்புகளுக்கோ அதில் இடம் இல்லை. ஆராய்ச்சி அடிப்படையில் பொருளைப் புரிந்துகொள்ளும் முயற்சியே அறிவுபூர்வமாக இருக்கிறது. வாழ்க்கை என்பது இதுமட்டும் அல்ல, மேலை நாட்டினர்கூட இதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் வாழும் கலை (Art of Living) என்ற பகுதியை வாழ்க்கையின் முக்கியமான அம்சமாகக் கருதுகிறார்கள்.
கற்பனையில் நூல்களைப் புனைவது, கவிதைகளை வடிப்பது,
இசை பாடுவது, சிற்பம் செதுக்குவது போன்ற நுண்கலைகள் அலங்காரமாக அமைந்து நம்முடைய வாழ்க்கைக்கு இனிமையையும் பொருளையும் தருகின்றன. இவற்றுக்கு முக்கியமானவை பொருள் அல்ல. அதை
அடிப்படையாக வைத்து ஏற்படுத்தும் ரசனையும் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடும்தான் முக்கியமானவை.
இந்துமதம் இதைத்தான் சொல்லுகிறது. எப்படி வாழ்வது, நமக்கு அமைதியையும் இனிமையையும் தரும் என்று சொல்லிக் கொடுக்கிறது. அதனால்தான் இந்த நுண்கலைகள் யாவுமே பக்திமார்க்கத்தில் பயன்படுத் தப்பட்டிருக்கின்றன. கதை சொல்வதும், பஜனை செய்வதும்,
கீர்த்தனைகளைப் பாடுவதும், விக்கிரகங்களை வைத்துக் கோயில்கள் அமைப்பதும் இவற்றை வளர்ப்பதற்காகவே. அதனாலேயே இந்தமதம் வாழும் வழியைக் காட்டும் சிறப்பைப் பெற்றிருக்கிறது.
இன்றைய நாகரிக வசதிகளை நாடும் நாம் மெல்ல மெல்ல இந்த உயரிய தத்துவத்தை மறந்து நம்முடைய வழியைவிட்டுப் போய்க்
கொண்டிருக்கிறோம். நம்முடைய மதம் கற்றுக்கொடுத்த வாழும் கலையைப் புரிந்து கொள்ளாமல், அதை நாடி வேறு எங்கேயோ
போய்க்கொண்டிருக்கிறோம்.
மனிதன்தான் எல்லாவற்றிலும் முக்கியமானவன் என்று மனு சாஸ்திரம் சொல்லுகிறது. அதையே வலியுறுத்தி மனிதனை உயர்த்த வழிகாட்டுகிறது நமது மதம்.
பொருளுக்கு முக்கியத்துவம் தருகிறது விஞ்ஞானம். அது தரும் வசதிகளை மட்டுமே முக்கியமாக நினைப்போமானால் வாழ்க்கையிலிருந்து மிகுந்த பயனை எப்படி அடைவது என்ற முக்கியமான நோக்கத்தை இழந்தவர்களாகிவிடுவோம்.