0,00 INR

No products in the cart.

லாஜிக் மீறலேதான் மொத்தப் படமுமே!

காத்துவாக்குல ரெண்டு காதல்  விமர்சனம்

லதானந்த்

 

ரண்டு காதலிகளுக்கிடையிடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ராம்போ என்னும் பாத்திரமேற்றிருக்கும் விஜய் சேதுபதி யாரைத் திருமணம் செய்துகொள்கிறார் – அல்லது யாரையாவது திருமணம் செய்துகொள்கிறாரா –  என்பதுதான் கதை.

ராம்போ என்னும் பெயருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ‘ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹோந்திரன்’  என்னும் முழுப் பெயரின் சுருக்கம்தான் ராம்போ!

ஏற்கெனவே இரு காதலிகள் / மனைவிகளுக்கிடையில் கதாநாயகன் அல்லாடும் இரு கோடுகள், ரெட்டை வால் குருவி மாதிரியான படங்களைப் பார்த்திருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. காதலிக்கும் இரு பெண்களுக்கும் காதலனின் இன்னொரு காதலும் தெரிந்தே இருக்கிறது என்பதுதான் அது.

சீரியஸ் படம் மாதிரி இருக்குமென்று நினைத்துவிடாதீர்கள். படம் நெடுகிலும் சின்னச் சின்னப் பாத்திரங்கள்கூட – டைமிங்காக – நகைச்சுவைப் பொடி தூவிச் செல்கிறார்கள்.

உதாரணத்துக்கு இதைப் பாருங்களேன்…

ஒரு காட்சியில் ரெடின் கிங்ஸ்லியின் உடல் முழுக்கப் பெட்ரோலை ஊற்றிவிட்டு, தீக்குச்சியையும் கொளுத்திவிட்டு, விஜய் சேதுபதி பற்றிய உண்மைகளை நயன்தாராவும் சமந்தாவும் விசாரிப்பார்கள். அப்போது கிங்க்ஸ்லி சொல்வார்: “பெட்ரோல் விக்கிற விலைக்கு அந்தக் காசை என்கிட்டக் கொடுத்துட்டு சும்மா விசாரிச்சிருந்தாலே சொல்லியிருப்பேனே.”

நயன்தாரா தங்கச் சிலை என்றால், சமந்தா தந்தச் சிலை. இருவரும் அவ்வளவு அழகு! நடிப்பிலும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.

‘இரு தாரத் தடைச் சட்டம் பாயுமே’ என்ற பிரச்னையை கிளைமேக்ஸில் லாவகமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள்!

நயனும் சம்ந்தாவும் பேசிக்கொள்ளும் பாதாம், பிஸ்தா இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுழிக்க வைக்கின்றன. நீக்கப்பட்டிருக்கலாம்.

விஜய் சேதுபதியின் துரதிர்ஷ்டம் தொடர்பான இளமைக் காட்சிகள் மூட நம்பிக்கையை வளர்ப்பதாகாதா மிஸ்டர் இயக்குநர்?  மேலும் விஜய் சேதுபதியின் குடும்பத்தில் அனைவருக்குமே ‘திருமணமாகாது’ என்ற சாபம் இருப்பதாகச் சொல்வதெல்லாம் டூ மச்!

“When it rains, it pours!” என்ற தாயின் ஆறுதல் வார்த்தைகள் படத்தின் இடையில் விஜய் சேதுபதிக்குப் பலிக்கிறது. ஆனால் இறுதியில் ‘சாபம் பலித்துவிட்டதோ’ என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

‘மெய்யா, பொய்யா?’  என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வி.சே.வுக்கு Dissociative identity disorder என்னும் மனச் சிதைவு இருப்பதாக நடிகர் பிரபு அடிக்கும் கூத்துகள் அமர்க்களம்.

ஆரம்பக் காட்சிகளில் இயற்கை எழில் சூழ்ந்த வயல், அருவி, ஆற்றங்கரை, பயிர் பச்சைக் காட்சிகள் வெகு நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கதாநாயகனின்  ‘மன வோட்கா’வை (மனப் பிராந்தி போல அது ஒரு வகை) நீக்க அல்லக் கைகள் செய்யும் காட்சிகள் நகைச்சுவைச் சரவெடி.

“ஆறிப்போன இட்லிக்கு எதுக்குடா ஹாட் பேக்?” என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே!

சத்யா படத்தில் கமல் – அமலா ’வளையோசை கலகல’ பஸ் படிக்கட்டுப் பாடல் காட்சி மற்றும் டைட்டானிக் காட்சிகளைப்போல இதிலும் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. சரியான குறும்பு!

படத்தின் பிற்பகுதி சூயிங்கம் இழுவை.

ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி தன்னையே விவரித்துக்கொள்வது ஜோர்!

சில படங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கும். இதில் லாஜிக் மீறலேதான் மொத்தப் படமுமே!

மொத்தத்தில் : படத்தில் அடிக்கடி மைனஸ் ப்ளஸ் என வசனங்கள் வருவதைப் போல, படத்தைப் பொருத்தவரையில்
நயன் மற்றும் சமந்தா = ப்ளஸ்;
நம்பமுடியாத கதை = மைனஸ்.

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...