0,00 INR

No products in the cart.

கனவில் கண்ட நீலக்குருவியைக் கையில் பிடித்தவர்

இந்த வாரம் இவர்

 

ப்போதும் கனவில் இருப்பவர் எலான் மஸ்க். கட்டாய இராணுவ சேவையைத் தவிர்க்க தென்னாப்பிரிக்காவில் இருந்து கனடா செல்கிறார். “சின்ன வயதில் என்னை வளர்த்தது புத்தகங்கள். அதன் பிறகுதான் பெற்றோர்கள்”  என்று சொல்லும் எலான் மஸ்க், கல்லூரியில் படித்தது என்னவோ இயற்பியல். ஆனால், காதலித்தது கணினியியல்தான். இணையம்தான் இனி எல்லாமே என நம்பி சகோதரனுடன் சேர்ந்து Zip2 என்று  இணையதளம் ஒன்றைத் தொடங்குகிறார். (இது யெல்லோ பேஜஸ் போல தகவல்கள் தரும் தளம்) அதன்  அலுவலக அறையிலே தங்கிக்கொள்கிறார். எளிய வாழ்க்கை . அந்த இணையதளம் நல்ல விலைக்குப் போகவே, கிடைத்த காசை அடுத்த கனவை நோக்கி நகர்ந்த போது எலானின் வயது 27.  அவர் உருவாக்கிய ஆன்லைன் இணைய சேவை X.com பெரியளவில் கைகொடுக்கிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என அவர் பயணம் தொடங்குகிறது.

முதலில் டெஸ்லா கார்கள்  தோல்விகளை சந்திக்கிறது. பின்னர் அபார விற்பனை. கார்களிலிருந்து  ராக்கெட் பிஸினஸுக்குப் பறக்கிறார். பைத்தியக்காரன் என்கின்றனர் பலர். ஒரே ராக்கெட்டையே பலமுறை  பயன்படுத்தும் வகையில் இவரது கண்டுபிடிப்பு உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.  மனிதனை விண்வெளிக்கு அனுப்புவேன் என்று 5 ஆண்டுகளுக்கு முன் இவர் சொன்ன போது சிரித்தவர்கள் வெற்றிகரமான முதல் பயணத்தைப் பார்த்த பின், தங்கள் வாய்ப்புக்காக வரிசையில் நிற்கிறார்கள்

இந்த மனிதர்தான் இப்போது  டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியிருக்கிறார். தன் பதிவு ஒன்றை டிவிட்டர் நீக்கியபோது இந்த நிறுவனத்தில் சுதந்திரம் இல்லை எனப் பதிவிட்டவர் இவர்.

டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை இவர் வாங்கி குவித்தபோது  இவருக்கு தங்கள் போர்டில் இயக்குனர் பதவியை அளிக்க முன்வந்தது டிவிட்டர். அப்போது இவர் சொன்ன பதில், “நான் உங்கள் நிறுவனத்தையே வாங்கப் போகிறேன்” என்பது.

“டிவிட்டரை நான் வாங்கப் போகிறேன்!” என எலான் மஸ்க் அறிவித்தபோது அதனை ஜோக்காக கருதி கிண்டல் செய்து டிவிட் செய்தவர்கள் தான் அதிகம். 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை கேஷாக தந்து  ட்விட்டரின் 100 சதவீத பங்குகளை எலான் வாங்கிவிட்டார். இனி அவரது பதிவுகளை நீக்க யாரும் இருக்க போவதில்லை என நெட்டிசன்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.

இதையெல்லாம் மாற்ற போறேன் என நீண்ட பட்டியலோடு டிவிட்டர் நீலப்  பறவையை கைகளில் ஏந்தி கொண்டுள்ளார் எலான் மஸ்க். வணிகச்செய்திகளுக்கும் அரசாங்கங்களுக்கும்  டீவிட்டருக்கு கட்டணம் தனியாருக்கு இலவசம் என்ற அறிவிப்பு வரப்போகிறது என்கிறது அமெரிக்கப் பத்திரிகைகள் இப்படி துணிச்சலாகப் பேசுவதோ பேசியதை செய்து காட்டுவதோ எலானுக்கு புதிது கிடையாது.

இப்போது சமுக ஊடகங்களில் எழுந்திருக்கும் கேள்வி அடுத்து இந்த மனிதர் வாங்கப்போவது எதை? நெட் பிளிக்ஸையா? , கோக்கோ கோலாவையா?என்பதுதான்.

ஓவியர்:  ஶ்ரீதர்

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...