கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
Published on

வாசகர் ஜோக்ஸ்                                                         ஓவியம்: ரஜினி

"இந்த டாக்டர்கிட்ட கடன் சொல்ல எல்லாருமே பயப்படுவாங்க."

"ஏன் அப்படி?"

"கடன் உயிரைக் குடிக்கும்னு போர்டு எழுதி வெச்சிருக்காரே."

– வி. ரேவதி, தஞ்சை

"ஆபிஸ்ல சிரிச்சதுக்கா உனக்கு மேனேஜர் மெமோ கொடுத்துட்டாரு?"

"ஆமாம். நான் சிரிச்சது தூக்கத்துல."

– தீபிகா சாரதி, சென்னை-5

"கடனைக் கொடுத்துட்டு வீட்டுல உள்ள பொம்பளைங்ககிட்ட பாட்டு வாங்கறது தேவை இல்லாத வேலைப்பா."

"ஏன் கொடுத்தீங்கன்னு உங்க மனைவி திட்றாங்களா?"

"மனைவி திட்டினாத்தான் பரவாயில்லையே. கடன் வாங்கிட்டுப் போனவனோடு பொண்டாட்டில்ல திட்டிட்டுப் போகுது."

– வி.ரேவதி, தஞ்சை

"தலைவரே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் பண்றப்ப எதுக்கு கிளாமர் நடிகை கிண்கிணி ஸ்ரீயை வரச்சொல்லி இருக்கீங்க?"

"கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்குன்னு பூடகமா சொல்லத்தான்."

– சென்னிமலை சி.பி.செந்தில்குமார்

"அவர் என்ன மாஸ்க்கும் கோவணமும் மட்டும் கட்டிக்கிட்டுப் போறாரு?"

"பிரைவேட் ஆஸ்பத்திரிலே கொரோனா ட்ரீட்மென்ட் முடிந்து டிஸ்சார்ஜ் ஆகிப் போறாரு."

– வி. ரேவதி, தஞ்சை

"ஆனியன் ஊத்தப்பம் ஒண்ணு கொண்டு வாப்பா…"

"சின்னதா? பெரிசா சார்?"

"ஆனியன் சின்னது, ஊத்தப்பம் பெரிசு…"

– வி. ரேவதி, தஞ்சை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com