0,00 INR

No products in the cart.

அச்சம் தவிர்

தலையங்கம்

 

நாட்டில்  கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வீரியமிக்க வைரசாக உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18  வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி இரண்டு கட்டமாக  முழுவீச்சில் நடந்துவருகிறது.  இந்த நிலையில் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் நாடு முழுவதுமுள்ள  15-18  வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும்,  அடுத்த வாரம் முதல்  (ஜனவரி 10ம் தேதி முதல்) முதியோர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி  போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 15 வயது முதல்  18 வயதுக்கு உட்பட்டவர்களில் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். இத்திட்டத்தின்கீழ் தடுப்பூசி செலுத்த விரும்பும் சிறுவர்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் கோவின் செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும்  மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு அடையாள அட்டையைக்  காட்டி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

நம் நாட்டில் கொரோனாத்தொற்றைப் போலவே தடுப்பூசிகள் குறித்த வதந்திகளும் மாறுபட்ட கருத்துக்களும் வேகமாகப் பரவியிருந்தது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மிகத் திறம்பட மேற்கொண்டதின் விளைவாக தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 87 சதவீதம் பேரும், 2வது தவணை தடுப்பூசியை 57 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். மீதமுள்ளோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, வாரம்தோறும் ஒரு நாள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது.

இப்போது சிறுவர், சிறுமியர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டம் குறித்து சில வல்லுநர்களின் மாற்றுக் கருத்துகள் வெளியாகியிருப்பதால் வதந்திகள் உலாவ ஆரம்பித்திருக்கின்றன, குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி என்றால் பெற்றோருக்கு அச்சம் வருவது இயல்பு. ஆனால், அது  பாதுகாப்பானது என உலகின் பலநாடுகளிலிருந்து  அடுத்தடுத்து தரவுகள் வந்துள்ளன. அமெரிக்காவில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசி  செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது’.  இதே முறையை தமிழக அரசு பின்பற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.

மிகப்பெரிய சவாலான கொரோனா தொற்றைத் தவிர்க்க, அதன் வீரியத்தைக் குறைக்க அரசுகள் போராடிக்கொண்டிருக்கும்போது  தக்க ஒத்துழைப்புத்தர வேண்டியது நாட்டு மக்களின் தேசியக் கடமையாகும்.

நமது குழந்தைகள்  நலனுக்காக அரசு தெரிவித்துள்ள  நெறிமுறைகளைப்   பின்பற்றி அச்சம் தவிர்த்துப் பெற்றோர்கள் அனைவரும் விழிப்புணர்வோடு, கொரோனாவிலிருந்து நமது குழந்தைகளைக் காப்பாற்ற அரசுக்கு உதவுவோம்.

1 COMMENT

  1. சரியான தருணத்தில் சரியான முறையில் மக்களிடம் விழிப்புணர்வு உண்டாகும் வகையில் படைக்கப்பட்ட
    தலையங்கம் அச்சம் தவிர்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

வேண்டாமே! இந்த அக்னிப் பரீட்சை

2
தலையங்கம்   ராணுவச் சேவையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘அக்னி பாதை’  என்றொரு திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவச் சேவையில் சேர்வதற்கு தயாராகிவரும் இளைஞர்களிடையே இந்தப் புதியத் திட்டம் பெரும் வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஒன்றிய அரசு...

காலத்தின் கட்டாயம் -சாட்டையைச்  சுழற்றுங்கள்

1
தலையங்கம்   இன்றைய நாகரிக உலகில் தொழில்நுட்பமானது பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம். வளர்ச்சி ஒருபுறம் பிரமிக்க வைத்தாலும், மறுபுறம் பல...

ஆபத்தான பீஹார் மாடல்

1
தலையங்கம்   இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியாவில் இட ஒதுக்கீடு...

பட்டமளிப்பு விழாக்கள் அரசியல் மேடைகள் அல்ல!

தலையங்கம்   பல்கலைகழங்கங்களின் பட்டமளிப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களால் நிகழ்த்தப்படும் உரைகள் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க தகுந்தவையாக இருந்த காலம் ஒன்று உண்டு. நேரு, இராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள், தங்கள் பணிகளுக்கிடையே இந்த உரைகளை...

வருமுன் காக்க

தலையங்கம்   வருமுன்னர்க் காதாவான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும். அரசன் மக்களை நாட்டிற்கு வரும் கேடுகளிலிருந்து  அவை வரும்முன் காக்க வேண்டும். அதுவே சிறந்த ஆட்சி என்கிறான் தெய்வப்புலவன். அப்படிக் காத்துக்கொள்ள வேண்டிய ஒரு...