டீ கேரளாவின் தேசிய பானம் என்று கொண்டாடப்பட்டாலும் அது தமிழர்களின் உணர்வோடும் உடலோடும் கலந்துவிட்ட ஒரு பானம். கிராமம், சிறுநகரம் பெருநகரம் என எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கும் ஒரே பானம் டீ. இப்போது இதில் கார்ப்பரேட்களின் கண் விழுந்திருக்கிறது. காபி டே, ஸ்டார் பக் போன்ற அழகாக அமைக்கப்பட்ட சிறு விடுதிகளைச் சங்கிலித்தொடர் போல் பல நகரங்களிலும், ஒரே நகரில் பல இடங்களிலும் தமிழகம் முழுவதும் தொடங்க ஆரம்பித்திருக்கிறார்கள் 'சாய் வாலா' என்ற நிறுவனம்.