உலகை உற்றுப் பார்க்கப் போகும் ஒரு கண்

உலகை உற்றுப் பார்க்கப் போகும் ஒரு கண்
Published on

– ஆதித்யா

மது பிரபஞ்சம் மற்றும் பறந்து விரிந்த விண்வெளி இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத பல அழகிய விஷயங்களையும் சில மர்மமான புதிர்களையும் தன்னுள் மறைத்து வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அழகிய புதிர்களைக் கட்டவிழ்க்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் பல முயற்சிகளை விடாமுயற்சியுடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விடா முயற்சியின் வெற்றியாய், இதுவரை பல புதிய விண்வெளி கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டிருக்கிறான்.

கடந்த  30 ஆண்டுகளுக்கும் மேலான தன் பணியில்  நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, மில்லியன் கணக்கான கண்கவர் படங்களுடன்  படம்பிடித்துள்ளது. அதன் பார்வை, மனிதனின் கண்களைவிடத் தனித்துவமானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது அனுப்பும் படங்களில் தெளிவு இல்லை. அதன் வயது பேச ஆரம்பித்துவிட்டது.

அதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மற்றோர் பெரிய டெலஸ்கோப்பை நிறுவ முடிவு செய்தார்கள்  $500 மில்லியன் செலவில்,
2007-ம் ஆண்டு மீண்டும் இந்த டெலஸ்கோப்பை உருவாக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டது. அப்போதும் இதற்கு தொழில்நுட்ப ரீதியாகவும் பிற காரணங்களாலும் பல தடைகள் ஏற்பட்டன. இறுதியாக இப்போது 2021-ல் இந்த டெலஸ்கோப்பை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இதற்கான செலவு $10 பில்லியனைத் தொட்டுவிட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இந்த தொலைநோக்கி திட்டத்தில் உலகின் பல்வேறு விஞ்ஞானிகள் பணியாற்றியுள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியும் ஒருவர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர்.ஹஷிமா ஹசன் இந்தத் திட்டத்தில் பணியாற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பிற்கான வேறுபாடு என்ன தெரியுமா?  ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (JWST), ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்தது. காரணம், , ஆரம்பக்கால நட்சத்திரங்களும் கிரகங்களும் உருவாகத் தொடங்கியபோது நேர்ந்த ஒளியைக் காணக்கூடிய ஆற்றலை இது கொண்டுள்ளது. கிட்டத்தட்ட, 13.7 பில்லியன் ஆண்டுகள் பழைமையான ஒளியைக்கூட இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் பார்க்க முடியும் என்கிறது  நாசா.

இதுவரை அல்லாத அளவிற்கு பால்வளி அண்டத்தில் சூரிய குடும்பம் அல்லாத பிற கோள்களை துல்லியமாக கண்டறியப் போகும் . இந்த தொலைநோக்கியின் எடை கிட்டத்தட்ட 6000 கிலோ. ஒரு டென்னிஸ் மைதான பரப்பளவிற்கு பெரியது.  சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை தெளிவாக ஆய்வுசெய்ய திட்டமிட்டு நாசா 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியிருக்கும் இந்த தொலைநோக்கியின் ஆயுட்காலம் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com