0,00 INR

No products in the cart.

அகந்தையை அணுகவிடாதே!

 

ஆதிசங்கரர்

 

ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம்ஸோபான பஞ்சகம்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ‘ஸோபானம்’ என்றால்படிகளின் வரிசைஎன்று பொருள். ‘பஞ்சகம்’ என்றால்ஐந்துஎன்று அர்த்தம். ‘ஸோபான பஞ்சகம்என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். இதனைஉபதேச பஞ்சகம்அல்லதுஸாதனா பஞ்சகம்எனவும் கூறுவர்.

“தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது. அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய். பகவானைத் திருப்தி செய்ய பூஜைகள் செய். இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் ‘இது பகவானுக்கு’ என அர்ப்பணம் செய்துவிடு.

நீ சத்சங்கத்திலேயே நிலைத்திரு. பகவத் பக்தியை திடமாக்கிக்கொள். சமாதி சட்க சம்பத்திகளுடன் நீ மோட்ச வேட்கையோடு ஆத்ம விசாரம் செய். உபநிஷத்துக்களில் கூறும் தத் த்வம் அஸி போன்ற மகா வாக்கியங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்வாயாக.

மகா வாக்யார்த்தங்களை விசாரணை செய். ச்ருதியை பிரமாணமாகக் கொள். வேதங்கட்கு மாறாக வாதாடுவோரிடமிருந்து விலகி இரு. நான் உடலல்ல பிரம்மமே என்பதை உணர்ந்துகொள். இவ்வறிவு பெற்றபின் அகந்தையை அணுகவிடாதே. அறிவாளிகளிடம் வாதம் செய்யாதே.

பசி என்ற நோயைத் தீர்க்க மருந்தெனக் கருதி கிடைத்த உணவை மிதமாக உட்கொள். நாவிற்கு ருசியான உணவில் ஆசையைத் துறந்திடு. சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதிச் செயல்படு.

பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே. பதவியில்
உள்ளவர்களையும் தனவான்களையும் புகழ்ந்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள விரும்பாதே.

ஏகாந்தமான இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து பரபிரம்மத்தைப் பற்றியே சிந்தித்திரு. பிரஹமும் பூர்ணம், இந்த ஜகத்தும் பூர்ணம், பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான ஜகத் வந்தபின் எஞ்சியிருப்பதும் பூர்ணம் என அறிந்து பூர்ணாத்மாவினை தரிசனம் செய்.

2 COMMENTS

  1. பொன் போன்ற நேரத்தை வெட்டி பேச்சில்
    ஈடுபடுத்தாமல் எப்போதும் இறைசிந்தனையை அசைபோட்டு கொண்டே
    வாழ்ந்தால் அகந்தை நம்மை அணுகாது

  2. ஆதிசங்கரரின் அருளுரை சிலிர்க்கவும், சிந்திக்கவும்
    வைத்து, உள்ளத்தை செறிவுட்டியது என்றால் மிகையில்லை.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...