0,00 INR

No products in the cart.

“என் உயிரைக் குடுத்தாவது நமக்கு பொறக்கப் போற கொழந்தைய நான் நல்லா படிக்க வெப்பேன்!”

முகநூல் பக்கம்

ண்மைக்காலமாக, பொதிகை தொலைகாட்சியில்  ஒளிபரப்பாகும்  “மங்கையர் சோலை” நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  எளிய மற்றும் மீடியா வெளிச்சம் விழாத சாதனைப் பெண்களைத் தேடிப்பிடித்து நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்துப் பாராட்டுகிறார்கள்.  எதிர்வரும் 14.04.2022 நிகழ்ச்சியில் சந்திக்கப் போகும் சரசுவை அறிமுகம் செய்து உதவியிருக்கும் திரு.கிள்ளிவளவன் அனுப்பிய குறிப்பை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் விஜய் கிருஷ்ணன்.

சரசுவின் சபதம்!

உடும்பு முதுகைப் போன்ற மார்பளவு உயர வரப்பு. ஒரு தோளில் கிட்டிக் கொம்பும் மறு தோளில் சாக்குப் பையில் சுருட்டிய கத்தியும் எடுத்துக் கொண்டு கணவன் சங்கர் முன்னே நடக்க, தலையில் தண்ணீரும் இடுப்பில் கேழ்வரகு கஞ்சியும் சுமந்து கொண்டு மனைவி ஜெயந்தி பின்னே செல்கின்றார். அப்போது சங்கர், “ஏம்மே… நமக்கு புள்ள பொறந்தா அதை எப்படியாவது நல்லா படிக்க வெச்சிடனும்”. “புள்ள பொறந்தா அதை படிக்க வெக்கலாம். ஆனா பொண்ணா பொறந்தா அதை எப்படி படிக்க வெக்கமுடியும்?” என்று ஜெயந்தி கேள்வி கேட்க சங்கர், “புள்ளையோ, பொண்ணோ எதுவானாலும் எப்படியாவது கஷ்டப்பட்டு படிக்க வெக்கனும். என் உயிரைக் குடுத்தாவது நமக்கு பொறக்கப் போற கொழந்தைய நான் நல்லா படிக்க வெப்பேன்!” சங்கர் அன்று சொன்ன வார்த்தையை இன்று அசைபோடும் போது ஒரு கணம் கண்கலங்கிப் போகிறார். ஐந்து வருடங்கள் கழித்து சங்கர்-ஜெயந்தி தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதற்கு சரசு என்ற பெயர் வைத்து வளர்க்கப்படுகிறது.

அன்று…

காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.சங்கர். சீமைக்கருவேல மரம் வெட்டுதல், தென்னை மரம் ஏறுதல், செங்கல் சூளையில் வேலை, பாம்பு பிடித்தல் என தனது இருளர் சமூகத்தின் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தவருக்கு ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெறுகிறது. இருவரும் படிப்பின் வாசனை கூட அறியாதவர்கள்.

திருமணமானவுடன் இருவரும் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையைச் சேமித்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடர்கின்றனர். ஒன்றரை ஆண்டுகள் கழித்து தாங்கள் சேமித்து வைத்த பணத்தில் சங்கர் தனது மனைவிக்கு தங்கக் கம்மல் வாங்க முடிவு செய்து அதை வாங்கி அளவில்லா ஆனந்தம் அடைகின்றார்கள்.

அடுத்த ஆறு மாதத்தில் சங்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பட்டணத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூற, என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கிறார் ஜெயந்தி. உடல் நலம் பாதிக்கப்பட்ட சங்கர் மருத்துவமனையில் இருக்கிறார். மனைவி ஜெயந்தி அவரைப் பார்த்துகொள்ள உடன் இருக்கிறார். அப்போது கூலி வேலைக்கு செல்வது மட்டுமல்ல, இவர்களின் வருமானமும் நின்றுவிட்டது. அன்றாட உணவுக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் முடியாமல் தவித்த ஜெயந்தியின் முன் இருந்த ஒரே வழி தாங்கள் வாங்கிய தங்கக் கம்மல் மட்டுமே.
உடனே காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு அடகுக் கடையில் 6500 ரூபாய்க்கு அடகு வைத்துவிட்டு வீடு திரும்பினார் ஜெயந்தி. அன்றே கணவனை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தவர், ஏறக்குறைய ஒரு மாத காலம் அங்கேயே கணவனுடன் இருந்து கவனித்துக் கொள்கிறார். சங்கரின் உடல்நலம் சரியானதும் இருவரும் வீடு திரும்புகின்றனர்.

மீண்டும் அதே வேலை. அதே வாழ்க்கை. சுமார் ஓராண்டு கடந்த நிலையில் வீட்டுக்கு தபால்காரர் வருகிறார். அந்த குடிசை வீட்டின் வாசல் கோணிப் பையால் அடைத்திருக்கவே, தான் கொண்டு வந்த கடிதத்தை வாசலில் வைத்துவிட்டுச் செல்கிறார் தபால்காரர். மாலை வீட்டுக்கு வந்ததும் அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்க்கிறார் சங்கர். அது என்னவென்றும் எங்கிருந்து வந்ததென்றும் புரியாமல் தவிக்கிறார்.

‘இது என்ன கடிதம், இதில் என்ன உள்ளது’ என்பதை தெரிந்துகொள்ள மிகுந்த ஆவலுடன் இருந்த சங்கருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தான் வாடகையாக இளநீர் பறித்துக் கொடுக்கும் அந்த வீட்டின் பெண் அரசுப் பணியில் உள்ளது நினைவுக்கு வர, ‘அவரிடம் இந்த கடிதத்தை கொடுத்தால் படித்துக் காட்டுவார்’ என்று புறப்பட்டு இரவு 8 மணிக்கு அவர்கள் வீட்டு வாசலில் நின்றார். சங்கரைப் பார்த்த அந்த வீட்டுக்காரர் என்னவென்று கேட்கிறார். சங்கர் விஷயத்தை கூறுகிறார். அதற்கு அந்த வீட்டுக்காரர் இப்போதுதான் அலுவலகத்தில் இருந்து தனது மகள் வந்துள்ளதாகவும் காலையில் வரும்படி சொல்லி அனுப்புகிறார்.

மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சங்கருக்கு அன்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. உறங்கவும் முடியவில்லை. அந்த குடிசை வீட்டின் மண்தரையில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் அந்தக் கடிதத்தை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்து பச்சை மண்ணாய்ப் பரிதவிக்கிறது சங்கரின் மனம்.

“இதில் என்ன தகவல் வந்திருக்கும்? ஒரு வேளை உறவினர்கள் யாராவது இறந்து விட்டார்கள் என்ற தந்தி வந்திருக்குமோ?” என்றெல்லாம் மனதில் தோன்றுகிறது. இரவு முழுவதும் இப்படியே கழிய பொழுது விடிந்ததும் மீண்டும் அந்த வீட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு சென்றவுடன், அந்தப் பெண் பரபரப்பாக அலுவலகம் புறப்பட்டு கொண்டிருக்க அவர் கூறிய பதில் சங்கருக்கு மேலும் வருத்தத்தைத் தந்தது. ‘தான் சீக்கிரம் அலுவலகம் புறப்பட வேண்டுமென்றும் இப்போது நேரமில்லை’ என்றும் சொல்லிவிட வருத்தத்தை சுமந்து கொண்டு வீடு திரும்பினார் சங்கர்.

வேறுவழியின்றி மற்றொரு நபரிடம் கொண்டுபோய் கடிதத்தை கொடுக்க அந்த நபர் படித்து கூறியது சங்கருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அது 15 மாதங்களுக்கு முன்பு அடகு வைத்த  தங்கக் கம்மல் நோட்டீஸ். வட்டியும் முதலுமாக சேர்த்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கேள்விப்பட்டவுடன் சங்கருக்கு தலை சுற்றியது. மேலும் “அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து மீட்காவிட்டால் நகை மூழ்கிவிடும்” என்ற தகவல். வீட்டுக்கு வந்தவுடன் மனைவி ஜெயந்தியிடம் இதைக் கூற இருவரும் வருத்தத்தில் இரும்புப் பெட்டி முதல் இடுப்பிலிருந்த சுருக்குப்பை வரை அனைத்து காசுகளையும் தரையில் கொட்டி எண்ணிப் பார்க்கின்றனர்; மொத்தம் 253 ரூபாய்! அவ்வளவு பெரிய தொகை யாரிடம் போய் கேட்பது எப்படி அந்த தங்கக் கம்மலை மீட்பது? நம்மிடம் அவ்வளவு பணம் இல்லையே என்று யோசித்த இருவரும் ஒரு கட்டத்தில் அதை விட்டுவிடுவது என்று முடிவு செய்து அமைதியாகி விட்டனர்.

அரசுப் பள்ளியில் தனது மகளை படிக்க வைத்த சங்கர், தான் படிக்கவில்லை என்றாலும் சரசு படிப்பதை ஆர்வமுடன் கவனித்து ஊக்கப் படுத்தி வந்தார். ஒரு சாதாரண மாணவியாக 12ஆம் வகுப்பை முடித்த சரசுவிற்கு கல்லூரிப் படிப்பைத் தொடர விரும்பினாலும் போதிய வருமானம் இல்லாததால் படிப்பை நிறுத்தும் நிலை உருவானது. ஆனாலும் தனது மகளை கல்லூரியில் சேர்த்தே தீரவேண்டும் என்று தீர்க்கமாக இருந்தார் சங்கர்.

ஒரு வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புவனம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படிக்கத் தொடர்ந்தார். அப்பாவின் கனவும் தனது இலட்சியமுமான ‘ஆசிரியர்’ பணியை அடைய சரசு தேர்ந்தெடுத்தது தமிழை. ஆனால் சங்கர் தனது மகள் ‘ஆங்கிலம் படிக்க வேண்டும்’ என்று விரும்பியதால் தனது அப்பாவின் விருப்பத்திற்காக தனது நோக்கத்தையே மாற்றிக்கொண்டார் சரசு. ஆங்கிலம் சரியாக வராத போதிலும் தனது குடும்ப சூழல், அப்பாவின் வைராக்கியம், தனது சமூகத்தின் இன்றைய நிலையை உணர்ந்த சரசு படிப்பில் கவனம் செலுத்தி ஒரு அரியர் கூட வைக்காமல் கடந்த 2021 ஆண்டு தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்!

இன்று…

“தனது அப்பாவிற்கு ஏற்பட்ட நிலை அடுத்தவர்களுக்கு ஏற்படாமல் இருக்கவும் தனது இருளர் சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உணராமல் இருக்கும் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்” என்று உறுதியாக முடிவெடுத்தார் சரசு! கல்வியறிவில் இருண்டுள்ள இருளர் சமூகத்தில் புதிய வெளிச்சம் தர மாணவி சரசுவின் சபதம் மகத்தானது! “தனது மகளை எப்பாடுபட்டாவது ஆசிரியையாக்க வேண்டும்” என்ற சங்கரின் பாதை சீமைக் கருவேல முட்கள் நிறைந்தது. தான் மரத்தை வெட்டும்போது ஒவ்வொரு வெட்டும் தனது மகளை டீச்சருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடனேயே விழுந்து கொண்டிருக்கிறது! போதிய வருமானம் இல்லாமல் இருந்தும் தனது கிராமத்தின் முதல் பட்டதாரியான மாணவி சரசுவின் முயற்சி பாராட்டுக்குரியது. பி.எட்., படிக்க முடிவெடுத்துள்ள சரசு ‘படித்தே தீர வேண்டும்’ என்ற உறுதியில் தன்னை தயார்படுத்தி வருகிறார்.
இவரது உயர்ந்த எண்ணம் நிறைவேறவும் இந்நாட்டிற்கு சிறந்த ஒரு ஆசிரியை கிடைக்கவும் வாழ்த்துவோம்…!

விஜய் கிருஷ்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...