0,00 INR

No products in the cart.

மக்களுக்கு என்னிடம் என்ன பிடித்து உள்ளது என்பதுதான் முக்கியம்.

– ராகவ்குமார்

 

புரோக்கர் மாணவர் ‘கனல்’ கதாபாத்திரம் உங்களை தேடி வந்ததா? அல்லது நீங்கள் தேடி சென்றீர்களா?

“செல்ஃபி படத்தின் டைரக்டர்
மதி மாறன், வெற்றி மாறனிடம் உதவியாளராக இருந்தவர். சில ஹீரோக் களை டைரக்டர் அப்ரோச் செய்தது போல என்னையும் அணுகினார். கதை களம் புதிது என்பதால் உடனே ஒப்புக் கொண்டேன்.”

மாணவ புரோக்கர் கனலாக நடிப்பதற்கு என்ன ஹோம் ஒர்க் செய்தீர்கள்?

“ ‘கனல்’  கதாபாத்திரம் கடலூர் பாஷை பேசும் பாத்திரம் என்பதால் கடலூர் தமிழை பயிற்சி செய்தேன். உதாரணமாக என்னத்த சொல்த, ஆய் பையா என்பார்கள். இதெல்லாம் புதிய முயற்சியாக இருந்தது. நானும் கற்றுக் கொண்டேன்.”

இது போன்று மாணவ புரோக்கர்களை சந்தித்தது உண்டா?

“படப்பிடிப்பு சமயத்தில் பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து என்ஜினீயரிங், மெடிக்கல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் – பெற்றோர்களை சந்தித்து பிரைன் வாஷ் செய்து தங்கள்  கல்லூரியில் சேர்க்கும் மாணவர்கள் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அம்மாணவர் சொன்ன பல்வேறு விஷயங்கள் எனக்கு உதவியாக இருந்தது.”

 செல்ஃபி பொண்ணு வர்ஷாவை பத்தி நம்ம தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொல்லுங்களேன்…

“வர்ஷா அழகான பொண்ணு. அது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நம்ம கூட ஒர்க் பண்ணும்போது, நம்ம கூட படிக்கிற பொண்ணு மாதிரி நம்ம பக்கத்து வீட்டு பெண் போல பிகேவ் பண்ணுவாங்க. ஹீரோயின்ற பந்தா இருக்காது.  அதே சமயத்தில் நல்ல பொண்ணு.”

நீங்கள் நடிக்கும் ‘ஐங்கரன்’ எது போன்ற படம்?

“தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கிடைக்காத விஞ்ஞானி சமுதாயத்தை எப்படிப் பார்க்கிறான் என்பது பற்றிய படம்.”

‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தற்போது  சமூக அக்கறைக் கொண்ட படத்தில்…… எப்படி இந்த பயணம்.?

“ஒரு நடிகன் என்றால் எல்லாவித கேரக்டரிலும் நடிக்க வேண்டும். ‘சிவப்பு ரோஜாக்கள்’ தந்த கமல் சார்தான் ‘தேவர் மகன்’ படம் தந்தார்.
‘16 வயதினிலே’ படத்தில் வில்லனாக நடித்த ரஜினி சார் தனது நடிப்பால் சூப்பர் ஸ்டார் ஆனார். ஒரே போன்று நடித்தால் ரசிகர்கள் நம்மை மறந்து விடுவார்கள். வித்தியாசம் காட்டுவது இங்கே முக்கியம்.”

வில்லனாக நடிப்பீங்களா?

“சாதாரண வில்லனாக இல்லாமல் எனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் வில்லனாக வாய்ப்பு தந்தால் ஓகேதான்.”

உங்க மனைவி சைந்தவிக்கு உங்கள் நடிப்பில் பிடித்த படம் எது?

“பல படங்கள் பிடிக்கும். இப்போது பிடித்தப் படம் செல்ஃபி.”

இசைமைப்பாளர் ஜி.வி., நடிகர் ஜி.வி., எது உங்களுக்குப் பிடித்தது?

“எனக்கு இரண்டுமே பிடித்ததுதான். மக்களுக்கு என்னிடம் என்ன பிடித்து உள்ளது என்பதுதான் முக்கியம்.”

இன்று சினிமாவை பலர் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள். எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

“ ‘ஜி.வி.பிரகாஷுக்கு நடிக்கத் தெரியுமா?’ என்று கேட்டவர்களுக்கு ‘நாச்சியார்’ படம் மூலம் பதில் சொன்னேன். என் வேலையை எப்படி விமர்சனம் செய்தாலும் என் படைப்பில் பதில் சொல்லி விடுவேன். தனி மனித காழ்ப்புணர்ச்சியுடன் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லமாட்டேன்.”

நீங்கள் இசையமைப்பாளர் மற்றும் நடிகர். இசையை மையமாக கொண்ட படத்தில் நடிக்கலாமே?

“நடிக்கலாம். அதற்கு டைரக்டரும் இசை அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். நான் நடித்த ‘சர்வம் தாள மயம்’ இசையை கருவாக கொண்ட படம். இப்படத்தின் டைரக்டர் ராஜீவ் மேனன் இசை தெரிந்தவர். இசை ஞானம் கொண்ட இயக்குனர் ஸ்கிரிப்ட்டோடு  ஆர்வமாக வரும்போது நடிக்க தயாராக இருக்கிறேன்.”

“இசை, நடிப்பு” என்ற இரட்டை குதிரை சவாரி எப்படி சாத்தியப்படுகிறது?

“இதற்கான திட்டமிடுதல் இருப்பதால் சாத்தியப்படுகிறது. ‘பேச்சுலர்’, ‘செல்ஃபி’ படங்களில் நடித்தபோதுதான் ‘சூரரைப் போற்று’, ‘அசுரன்’ படங்களுக்கு இசையமைத்தேன். தற்சமயம் நான் நடிக்காத ‘வாடி வாசல்’ ஹரி சாரின் ‘யானை’ உட்பட பல படங்களுக்கு இசையமைக்கிறேன். சினிமாவில் நாம் வேலை செய்வதற்கு திட்டமிடல்தான் அடித்தளம்.”

இசையமைப்பாளர்கள் பல ஆண்டுகள் இங்கே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகன்  எப்போதுமே இங்கே நீடித்துக் கொண்டிருக்க முடியுமா?

“சினிமாவில் யாராக இருந்தாலும் தொடர்ந்து தனது படைப்புகளை புதுப்பிப்பது மூலமும், வித்தியாசமாக தருவது மூலமும்தான் நீடிக்க முடியும். வேறு எந்த வழியும் கிடையாது.”

பெரிய திரை டு OTT வருத்தமா?  வரவேற்பா?

“வரவேற்புதான். ஒரு காலத்தில் பேப்பரில் மட்டுமே வந்துக் கொண்டிருந்த செய்திகள் இப்போது செல் போனில் வருகின்றன. சினிமா மட்டும் கையில் வரக் கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம்? செல்ஃபி திரைப்படம்
OTT யில் நல்ல விலைக்கு வியாபாரம் ஆகி உள்ளது. தயாரிப்பாளர்க்கு இது
லாபமான விஷயம் தானே.”

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...