0,00 INR

No products in the cart.

பூனை, தாய், சித்தப்பா !

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

ல வருடங்களுக்கு முன் ஜெர்மனி சென்றிருந்தேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்துகொள்ளுங்கள். பயப்படாதீர்கள். ஜெர்மனியில் நான் சுற்றித் திரிந்த சுயப் பிரஸ்தாபம் /பரிதாபம் போன்றவற்றைச் சொல்லப் போவதில்லை, அதனால் கவலையில்லாமல் படிக்கலாம்.

ஜெர்மனியில் நான் தங்கியிருந்த இடம் ஆள் நடமாட்டமே இல்லாத  பச்சை பசேல் என்று ரம்மியமாக இருந்தது. தினமும் காலை ஹெட்போனில் இளையராஜாவுடன் சைக்கிளில் அலுவலகம் செல்லும் போது வழிநெடுகிலும் ஸ்ட்ராபெர்ரி தோட்டங்கள். நாமே தோட்டத்துப் பழங்களைப் பறித்து எடை போட்டு வாங்கிக்கொள்ளலாம்.

அப்படி செல்லும் போது தினமும் ஆங்காங்கே வீடுகளில் தாத்தா, பாட்டிகள் எட்டிப் பார்ப்பார்கள்.  எட்டிப் பார்க்கும் எல்லார் கைகளிலும் புசுபுசு என்று சோளாப் பூரி போல ஒரு பெரிய பூனையும் தவறாமல் என்னைப் பார்த்ததைக் கவனிக்க முடிந்தது.

ஒரு நாள், அலுவலகத்தில் என் சக ஜெர்மனி ஊழியரிடம் “இங்கே பூனை ரொம்ப செல்லம் போல…” என்று பேச்சுக்கொடுத்தேன்.

“பூனையை சங்கிலி போட்டுக் கட்ட வேண்டாம். நாய் போல கக்கா செல்ல வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம்” என்று அதன் பெருமைகளைச் சொன்னார். இன்னொரு விஷயத்தையும் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது.

“ஜெர்மனியில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது அரிதாகிவிட்டது. வயதான பிறகு அன்பு செலுத்த  குழந்தைகளுக்குப் பதில் பூனையை வளர்க்கிறார்கள்!” என்றார்.  இன்னும் சில ஆண்டுகள் கழித்து குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறோம் என்றார்.

பிறகு கூர்ந்து கவனிக்க தொடங்கிய போது, கடைகள், பூங்கா என்று எங்கும் குழந்தைகளை மிக அரிதாகவே பார்த்தேன்.

“இன்று இந்தியாவில் குறிப்பாக நகர்ப்புறத்தில் இன்னும் சில ஆண்டுகளில் ’சித்தப்பா’ என்ற உறவு முறையே இல்லாமல் போய்விடும்” என்று தோன்றுகிறது. காரணம் ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்வதில்லை. காலப் போக்கில் “குழந்தையே வேண்டாம்” என்று முடிவு செய்து பிரசவிக்கும் பெண்கள் குறைந்தால் ஆச்சரியப்படக் கூடாது.

ஆழ்வார் பாசுரங்களுக்கு அகராதி ஒன்றைத் தொகுக்கும் பணியில் “ஈன்றோள் இருக்க மணை நீராட்டி” என்று ஒரு சொற்றொடர்  கண்ணில் பட்டது. தேடிய போது, திருமங்கை ஆழ்வாரும் “தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ?” என்று அவரும் இதை உபயோகித்துள்ளார்! இது ஒரு பழமொழி.

பெண்கள் பிரசவித்தவுடன், தாய் மற்றும் சேயை நீராட்டுதல் என்பது மலை நாட்டில் (கேரளா) இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.  ஆனால் பிரசவித்தவுடன் தாயை நீராட்டுவதால் பலவகையான சுகாதாரச் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் அதற்கு மாற்றாக மணைக்கட்டை ஒன்ற நீராட்டுதல் என்ற வழக்கமும் இருக்கிறது. (கொசுறு தகவல் : நம்மாழ்வாரின் தாய் கேரளத்தைச் சேர்ந்தவர் )

உயர்ந்த தாய் போன்ற பெருமாள் இருக்க மணை போன்ற மற்றவர்களை ஏன் தொழுகிறீர்கள் என்று ஆழ்வார் இந்தப் பழமொழியை உவமையாக கொண்டு பாசுரத்தில் கேட்கிறார்.

அப்பார்ட்மென்ட் நடையின் போது ஒரு பலகை கண்ணில் பட்டது. “நாய் ‘ஆய்’ போனால் அதை நீங்களே அள்ளிப் போட்டுவிடுங்கள்” என்றது. அதே அடுக்குமாடியில் தன் அம்மாவிற்கு உடம்பு முடியாமல் போனால் அவளைப் பார்த்துக்கொள்ள ‘ஆயா’வை வைத்துக்கொள்கிறான்.

ஆழ்வார் சொன்ன பழமொழி இன்றும் பொருந்துகிறது!

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...