0,00 INR

No products in the cart.

உயரும் சொத்து வரியும் குறையும் நன்மதிப்பும்

தலையங்கம்

 

மிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்திப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1200 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 50 சதவீதமும் 1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 75 சதவீதமும் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்தும் மக்களிடமிருந்தும்    கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள 15ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது” எனச் சொல்லுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், “பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவினம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் அடிப்படைக் கட்டமைப்புகளை  மேம்படுத்திப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லுகிறார்  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு.”

“15 ஆவது நிதி ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்தாவிட்டால் மத்திய நிதி விடுவிக்க முடியாது எனவும், திருத்தம் செய்யாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும்” என்றும் தனது  அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

எதிர்க்கட்சியான பா.ஜ.க., “அம்மாதிரியான நிபந்தனைகள் ஒன்றிய அரசிடமிருந்து  எதுவும் வரவில்லை” என்கிறது. ஆனால், நிதிக்குழு பரிந்துரை தொடர்பான அறிக்கையில்  சொத்து வரிகளைச் சீரமைப்பு செய்ய வேண்டியதையும் அதற்கான காலக் கெடுவும் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதையும் நம்மால் காணமுடிகிறது.

வளர்ச்சிப் பணிகளினால் உயரும் செலவினங்களைச் சந்திக்க வரிவிதிப்பு அதிகரிப்பு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றாலும், அதைச் செயல் படுத்த சரியான  நேரம் இதுதானா? எனத் தமிழக  அரசு யோசித்திருக்க வேண்டும். பல விஷயங்களுக்கு ஒன்றிய அரசுடன் மாநிலங்களின் அதிகாரம் குறித்துப் போராடக் குரல் எழுப்பும் தமிழக அரசு, இந்த சொத்து வரி உயர்வு விஷயத்தில்  அவசரம் காட்டியிருப்பது மட்டுமின்றி, வரிவிதிப்பின் அளவையும் மிக அதீதமாக உயர்த்திருப்பதின் மூலம்  மக்களிடம் பெற்றிருக்கும் நன்மதிப்பை இழந்துக்கொண்டிருக்கிறது.

இதைத் தவிர்க்க தமிழக அரசு சொத்துவரி உயர்வை உடனடியாக  மறு ஆய்வு செய்து குறைவான அளவில் வரிகளை  விதிக்க வேண்டும்.

1 COMMENT

  1. தலையங்கம் படிக்கும் போது, ‘ இடித்துரைக்கும் நல் அமைச்சாய் தரிசனம் தந்தது கல்கி!

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...