0,00 INR

No products in the cart.

எங்கள் தவறுகளை சுட்டிக் காட்டி மெருகேற்றுவர்.

உலகக் குடிமகன் – 15

 

– நா.கண்ணன்

திருப்பூவணத்தில் வாழ்ந்தது வரை சங்ககாலத் தமிழன் எப்படி முதன் மொழி தமிழ் என்று வாழ்ந்தானோ அதுபோல் தமிழ் மட்டுமே பேசி, தமிழ் வழியாக உலக அறிவை, சமூக வாழ்வியலை அறிந்து கொண்டு வாழ்ந்து வந்தேன். ஆயின், திருப்பூவணம் விட்டு மதுரை வந்தபோது ஆங்கிலம் அறிமுகமாகிறது. தமிழ் தவிர அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் அறிமுகமாகின்றன. ஆயினும், வகுப்பு நேரம் போக பிற நேரங்களில் தமிழில்தான் பேசிப் பழகி வந்தேன். மேலும் புதுக்கவிதை ஆக்கம் என்னுள் புகுந்த பின் மொழிப் பற்று இன்னும் கூடியது. எனவே முதுகலை முடியும்வரை தமிழ் பேசும் மாணவனாகவே இருந்தேன். ஆனால் 1975-76 ல் நான் ஆய்வக விரிவுரையாளனாக, விளக்குவோனாக (டெமான்ஸ்ட்ரேடர்) வேலை பார்த்த போது ஆங்கிலத்தில்தான் பாடம் எடுக்க வேண்டி இருந்தது. எனக்கு எப்படி என் ஆசிரியர்கள் பாடம் எடுத்தனரோ அதே பாணியில் நான் ஆங்கிலம் பேசி பாடம் எடுத்தேன். என் மீது பிரியமுள்ள ஜே.சி.பி, எனக்கு முதுகலைப் பாடங்களை வழங்கினார். இது சாதாரணமாக நடப்பதல்ல. அங்குள்ள ஆசிரியர்களிலேயே மிகவும் ஜூனியரான எனக்கு முதுகலைப் பாடம் தந்தது அவருக்கு என் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டியது. நானும் உற்சாகமாக எடுத்தேன். உற்சாகத்தில் குரல் மெல்ல, மெல்ல உயர்ந்து வகுப்பு முடிந்த போது என்னை மிகவும் தளர்வுறச் செய்தது. எனவே, பாடக் குறிப்புகளுக்கு நடுவே “குரலைத் தணி!” என எழுதி வைத்து பாடம் நடத்தினேன். உண்மையில் இந்த யோசனையை எனக்கு வழங்கியவர், ஜே.சி.பி.யின் இன்னொரு பிரிய மாணவரும் எனக்கு சீனியருமான ரெஜினால்டு விக்டர். இவர் அங்கு ஓரிரு வருடங்கள் வேலை பார்த்துவிட்டு கனடா சென்று முனைவர் பட்டம் பெற்று ஓமன் பல்கலைக் கழகத்தில் வேலைக்குப் போய் விட்டார். இத்தகவல் அவர் ஓய்வு பெறுவதற்கு முன் தான் எனக்குத் தெரிந்தது. எனது ஆய்வுப் பின்புலம் அறிந்த பின் முகநூல் வழியாக நட்பாகி அவரது மாணவர் ஒருவருக்கு அயலகத் தேர்வாளராக என்னை நியமித்து ஓமன் நாட்டிற்கு அழைத்தது, ஏதோ எல்லாமே முன் தீர்மானத்தோடு நடப்பது போன்ற பிரம்மையைத் தருகிறது!

இப்படி தடவித்தடவி ஆங்கிலம் பேசி விட்டு முழு நேரப் பேச்சும் ஆங்கிலத்தில் மாறியது பல்கலைக் கழகத்தில்தான். காரணம், எங்கள் ஆசான்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே என்னுடன் உரையாடினர்! அடுத்து மும்பையிலிருந்து, கர்னாடகாவிலிருந்து, உத்திரப் பிரதேசத்திலிருந்து, பஞ்சாபிலிருந்து, குஜராத்திலிருந்து என மாணவர்கள் கூடப் படித்தனர். அவர்களோடு ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டியிருந்தது. அடுத்து நிறைய அயலக ஆய்வாளர்கள் வந்த வண்ணமிருந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு போய் மதுரையைக் காட்ட வேண்டியது என் கடமையாக இருந்தது! கிராமத்திலிருந்து வரும் எங்களுக்கு அவர்கள் தரும் அறிவுரை ஆங்கிலத்தில் கனவு காண்! என்பதுதான். அதாவது ஆங்கிலம் நம் சிந்தனை மொழியாக மாற வேண்டும் என்பது கருத்து.

எம்.கே.சந்திரசேகர் ஜெர்மனியில் படித்து ஆய்வு செய்தவர். எனவே அவருக்கு வரும் சாதனங்களின் விளக்க நூல்கள் எல்லாம் டாய்ச்சு (ஜெர்மன்) மொழியில் இருக்கும். மேலும் அவருக்கு வரும் அயலக ஆய்வாளர் எல்லாம் ஜெர்மனியிலிருந்துதான் வருவார்கள். அவர்களோடு தம் மாணவர்கள் கலந்துரையாட அவர்களுக்கு டாய்ச்சு கற்பிக்க முயன்றார் எம்.கே.சி. எனவே, மதுரை கிறிஸ்தவ மிஷனரி மூலம் ஒரு ஜெர்மன் மாதுவை எங்கள் ஆய்வகத்திற்கு அழைத்து பாடம் நடத்த வைத்தார். நான் அவர்கள் குழு இல்லையென்றால் இன்னொரு மொழி கற்கலாமே என நானும் பாடம் கேட்டேன். நான் பின்னொரு காலத்தில் ஜெர்மனி சென்று, வேலை பார்த்து அந்நாட்டு பிரஜாயுரிமை பெறுவேன் என்பதற்கு முன் மாதிரியாக இது நடந்திருக்கிறது என இப்போது தோன்றுகிறது. எத்தனை தற்செயல்கள்?

எங்கள் உயிரியல் பள்ளியில் அடிக்கடி பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் நடக்கும். நாங்களெல்லாம் ரொம்ப பிசியாகி விடுவோம். ஆளுக்கொரு வேலை கொடுப்பார்கள். மாலை வேலைகளில் பாண்டியன் ஹோட்டலில் விருந்து நடக்கும். அதுதான் மதுரையில் அப்போது இருந்த மூன்று நட்சத்திர விடுதி. நாங்கள் என்று போய் பாண்டியன் ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கிறோம்? எனவே, இது எங்களுக்கோர் நல்ல வாய்ப்பு. சில நேரங்களில் எங்கள் வளாகத்திலேயே நடப்பதுமுண்டு. அப்போது திண்டுக்கல் வீதியிலிருக்கும் மாடர்ன் லாட்ஜ் சாப்பாடு சப்ளை. விநோதமான, சுவையான உணவுகள் வரும். முதல் முறையாக பிசிபேளாபாத் எனும் சாம்பார் சாதம் அவர்கள் தந்ததால் சுவைத்தேன்.

ஒரு கருத்தரங்கில் எப்படிப் பேசுவது என்பதை எனக்கு உயிரியல் பள்ளி கற்றுத் தந்தது. இப்போதுள்ள காட்சிப் படிமங்களெல்லாம் அப்போது கிடையாது. சிலைடு என்பது கூடக் கிடையாது. கண்ணாடிப் பேப்பரில் எழுதி சுவரில் அல்லது திரையில் அதைக் காட்டி பாடங்கள் நடக்கும். அதே முறையில் கருத்தரங்கில் பேசுவர். இப்போதுள்ள புளூடூத் தொழில் நுட்பம் இல்லாததால் பேசும் போது தடிமனான மைக்கைப் பிடித்துக் கொண்டுதான் பேச வேண்டும். கையில் எழுத வேண்டும், மைக்கைப் பிடிக்க வேண்டும், தொடர்ந்து பேச வேண்டும். இப்படியொரு சிக்கல் இருக்கிறது இதற்கொரு வழி சொல் கண்ணா! என்றார் கேஜே. அடுத்த நாள் அவரது கருத்தரங்கொன்று. உடனே நான் டவுன் ஹால் ரோடு போய், கழுத்தில் மாட்டும் படி ஒரு நீள செயின் வாங்கினேன். அதன் நடுவில் மைக் தங்குமாறு ஒரு வட்ட வில்லை உருவாக்கினேன். இப்போது கழுத்தில் மைக் தொங்குவதால் கை ஃப்ரீயாகிவிடும். இது கே.ஜே.க்கு ரொம்பப் பிடித்தது. இவ்வளவு வித்தியாசமாக சிந்திக்கும் நீ நிச்சயம் வெளி நாட்டில் போய் சாதிப்பாய்! என்று ஆசீர்வதித்தார். அது நடந்தது. ஆனால் எத்தனை வருடங்களுக்குப் பிறகு? அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன்.

இப்படி உண்மையான கருத்தரங்கங்கள் நடக்கும் போது, மாணவர்களுக்கு பயிற்சியளிக்க மினி சிம்போசியம் (குட்டிக் கருத்தரங்கு) நாங்கள் நடத்தினோம். அப்போது உயிரியல் பள்ளியில் ‘அக்குவாடெர்’ என்றொரு கழகம் இருந்தது. அதன் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். அதன் மூலம் நாங்கள் மினி சிம்போசியம் நடத்தினோம். இது மாடல் ஐக்கிய நாட்டு சபை நடத்துவது போல்தான். கருத்தரங்கில் பேப்பர் வாசிப்பதிலிருந்து, அமர்வை ஒருங்கமைப்பது, தலைமை தாங்குவது என அனைத்தும் நாங்களே செய்தோம். எங்கள் கருத்தரங்க பங்கேற்பாளர்கள் எங்கள் அத்தனை ஆசான்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு, எங்கள் தவறுகளை சுட்டிக் காட்டி மெருகேற்றுவர். அதுவொரு நிலாக்காலம்.

இத்தகைய பயிற்சிகள் எனக்குக் கிடைத்ததால் நான் முதன் முறை அயலகம் சென்ற போது அங்கு நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒரு பொருட்டாகவே இல்லை. இந்த என் திறமை ஜப்பானில் எனக்கு உதவியது. ஜப்பானியர்களுக்கு ஆங்கிலம் வராது. எனவே அவர்களுக்கு பயிற்சி தேவைப்பட்டது. நான் பயிற்சியாளனாக இருந்து என் ஜப்பானிய ஆசான்களைத் தயார் படுத்தினேன்.

கருத்தரங்கில் பேசுவது ஓர் கலை. பெரும்பாலும் 20 நிமிடங்களே அளிக்கப்படும். அதில் 15 நிமிடங்கள் நம் ஆய்வைச் சொல்லிவிட்டு, ஐந்து நிமிடங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். நம் ஆய்வில் முழுத்திறமையும் இருந்தால்தான் நல்ல பதில் அளிக்க முடியும். இது மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பயிற்சியல்ல. உண்மையான ஆய்வை நேர்த்தியோடு சமர்பிக்கும் கலை. பெரும்பாலும் மாபெரும் சபைகளில் நாம் பேசும் போது வாயே வராது. அவ்வளவு நடுக்கம் இருக்கும். அத்தோடு கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டுமென்பது நம் திறமைக்கு சோதனை. இதையெல்லாம் எனக்கு முன்னமே உயிரியல் பள்ளி கொடுத்திருந்தது!

(தொடரும்)

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...