0,00 INR

No products in the cart.

நான் எல்லா உயிர்களிலும் உறைந்துள்ளேன்

உத்தவ கீதை – 15

டி.வி. ராதாகிருஷ்ணன்

 – நல்லது எது… தீமை எது என்று அறியும் வகை

 கிருஷ்ணன் தொடர்ந்தார்..

முக்தி அடைய அறிவு மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் என்று ஏற்படுத்தியுள்ளதாக முன்னரே கூறினேன் அல்லவா?

 ஆனால் பலர் அதைவிட்டு இந்திரிய சுகங்களில் நாட்டம் செலுத்துகின்றனர். அதனால் அவர்கள் பிறப்பு, இறப்பு என்ற சம்சார சூழலிலிருந்து விடுபடுவதில்லை.

மேலும்  பலர், ‘அவரவர்கள் கர்மாக்களைச் சரிவரச் செய்தால் போதுமானது’ என்று கூறுகிறார்கள்.

உலகில் பிரம்மா முதல் உண்டான எல்லா பொருள்களும் பஞ்சபூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவைகளின் சேர்க்கையால் உண்டானதே! எல்லா உயிர்களும் வாழ்வில் மேன்மை பெற வேண்டும் என்றுதான், தர்மங்கள் (தெய்வீகப் பண்புகள்), அர்த்தங்கள் (பொருள் சேர்க்கை),காமா (இந்திரிய சுகங்கள்),மோட்சம்(முக்தி பெறுதல்) என்றும் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்றும் வர்ணங்கள் வேதங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 உண்டாக்கப்பட்ட உயிர்களின் சமுதாய வாழ்க்கையைச் சீர்படுத்தவே அவைகள் மனு போன்றவர்களால் பிரித்துச் சொல்லப்பட்டன. வேதங்களில் கூறப்பட்ட யாகங்கள், பலி கொடுத்தல் ஆகியவை மக்களை நல்வழியில் செலுத்தவே உண்டாக்கப்பட்டன. எப்படி கசப்பான மருந்து சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இனிய உணவு வகைகளை ஆசைகாட்டி மருந்து உண்ணச் செய்கிறோமோ அதேபோலத்தான் இந்த யாகங்கள் போன்றவை.

உண்மையில் மனிதர்கள், ஆசையால் பணம், வீடு போன்றவற்றிலும், தன் இந்திரிய சுகங்களிலும், மேலும் மனைவி, மக்கள் போன்ற சுற்றத்தார் மீதும் பற்று கொண்டவர்கள்.

 ஆனால், இவைகளால் துன்பமே முடிவில் ஏற்படும்.

அப்படியானால் எப்படி வேதங்களால் செல்வம் உண்டாகும், தீர்க்காயுசு கிடைக்கும், நினைத்த காரியம் வெற்றி அடையும் என கூற முடியும்?

 வேதங்களின் முடிவுப் பொருளை உணராமல் பலர் இவ்வாறு கூறுகிறார்கள்? இப்படிச் செய்பவர்கள் மீண்டும் துன்பத்தில் வீழ்வார்கள்.

 நன்றாக வேதம் படித்து அதன் பொருளை உணர்ந்தவர்கள் இப்படி மக்களை வழிகாட்ட மாட்டார்கள். அந்த வழியில் செல்பவர்கள் என்னை (இறைவனை) உணர மாட்டார்கள்.

ஆசைக்கு அடிமைப்பட்டவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள், பேராசை கொண்டவர்கள், மிருகங்களைப் பலி கொடுத்து தீயில் ஆகுதி செய்து, அந்த யாகத்தில் உண்டான புகையின் வழியில் சென்று துன்பப்படுவார்கள். ஆன்மாவை உணர மாட்டார்கள்.

நான் எல்லா உயிர்களிலும் உறைந்துள்ளேன். அவர்கள் என்னை உணரவில்லை. அவர்கள் தன் இந்திரியங்களின் உணர்வுகளைச் சமன் செய்யவும், திருப்திப்படுத்துவதும் கர்மாக்களைச் செய்யவுமே கூறுகிறார்கள்.

இறப்புக்குப் பின் கிடைக்கும் சுவர்க்கத்தை நினைத்து, நிச்சயம் இல்லாததும், கனவு போன்றதும், பொய்யானதுமானதும், காதால் கேட்பதற்கு இன்பமாய் இருக்கும். பொய்யான கனவு உலகத்திற்காக பொருள் கொடுத்து வாங்கும் வியாபாரி போன்று செயல்படுகிறார்கள்.

ரஜோ, தமோ, சத்துவ குணங்களின் பலனால் இந்திரன் போன்ற தெய்வங்களை வணங்குகிறார்கள்.

இந்தத் தெய்வங்களால், தாங்கள் செய்த யாகத்தின் பலனாய், சொர்க்கம் கிட்டும் என்று நம்பி செயல்படுகிறார்கள்.

ஆனால் அவர்கள் மீண்டும் இந்த உலகில் நல்ல குடியில் மட்டுமே பிறப்பார்கள்.

 அழகான வார்த்தைகளைக் கூறும் ஆணவமிக்க இவர்களின் பேச்சில் எனது (இறைவனின்) நாமங்கள் கூட இடம் பெறாது.

 வேதங்கள் கர்மகாண்டம், கடவுளை வணங்குவது, பிரம்மத்தை உணர்வது என்று மூன்று பகுதிகளை உடையது. பிரம்மமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறது என்று உணர்த்துகிறது.

 கூர்மையான பக்தி உள்ளவர்களே என்னை புரிந்து கொள்கிறார்கள். பிரம்மமே, “மனம்” என்றும், “பிராணன்” என்றும், “பஸ்யந்தி” (முற்றும் விளங்காது. ஒரு வகையில் விளங்கி நிற்பது) காணப்படும் உலகம் என்றும், அதை உணரும் புத்தி என்றும், அதைக் கூறும் “வைகரி” வாக்கு என்றும், “காலத்துக்கு கட்டுப்படாதது” என்றும் பரிணமித்துள்ளது.

 பிரம்மமானது, தாமரைத்தண்டு போல படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகள், அசையும் பொருள், அசையாப் பொருள் யாவற்றிலும் கலந்து நிற்கிறது.

எப்படி சிலந்தி தன் வாயால் வலையைப் பின்னி அதில் தனித்து நின்று வசிக்கிறதோ, அதுபோல பிரபஞ்சத்தின் நாயகனாகிய “ஹிரண்யகர்பன்”, “பிரம்மம்” “ஓம்” என்ற பிரணவ நாமத்தில் கலந்து நிற்கிறது.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...