0,00 INR

No products in the cart.

ஆண்டவன் அருள் மட்டும் இருந்தால் போதும்

 

அருளுரை

 

மது வலது கரம் உணவு உண்ணுதல், எழுதுதல் போன்ற நல்ல காரியங்களுக்குப் பயன்படுகிறது. ஆனால், ஆண்டவன் முன்னிலையில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லோரும்  சமம். அதை  உணர்த்தவே இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து ஆண்டவனைப் பார்த்துக் கும்பிடுகிறோம்.

கடவுள் எல்லாவற்றையும் தன்னிடம் விட்டுச் சரண் அடைந்து நிற்பவர்களிடம் கருணை காட்டுகிறார். அவர்களுக்கு உதவ மனம் இளகி முன்வருகிறார். ‘என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை. எல்லாம் உன்னுடையவை. உன்னுடைய ஆளுகைக்கு என்னை விட்டுவிட்டேன்என்று உடம்பைத் தரையோடு தரையாகக் கிடத்தி வணங்கி, எல்லாச் செயல்களும் ஒடுங்கி, பணிவின் அடையாளமாக இருக்கும் நிலையில் ஆண்டவன் நம்மை ஏற்றுக்கொண்டு அருள்புரிய முன்வருகிறான்.

காலை வெயிலில் உடம்பில் சூடு முழுவதுமாக உறைக்கும். நடுப்பகலிலோ தலையில் மட்டுமே வெயில்படும். அப்போது தலைக்கு மட்டும் மறைப்பு இருந்தால் போதும். பண்படாத மனதுக்குப் பலவிதத்திலும் பாதுகாப்பு தேவை. பண்பட்டு உயர்ந்த உள்ளத்துக்கு ஆண்டவன் அருள் மட்டும் இருந்தால் போதும். இப்படி மனத்தை உயர்த்திக்கொள்வதைக் காட்டும் அடையாளமாகவே இரண்டு
கைகளையும் தலைக்குமேலே உயர்த்திக் குவித்து ஆண்டவனை வணங்குகிறோம்.

– திருமுருக கிருபானந்த வாரியார்

1 COMMENT

  1. வாரியார் சுவாமிகளின் அருளுரை பேரமுதம்…
    ‘பண்பட்டு உயர்ந்த உள்ளத்துக்கு ஆண்டவன் அருள் மட்டும் இருந்தால் போதும்…’ ஆஹா…சம்பந்தப்பட்ட
    வரிகள்…!

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...