தியானத்தின்போது நமது மனமும் விரிவடைகிறது

தியானத்தின்போது நமது மனமும் விரிவடைகிறது
Published on

அருளுரை

தஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில் தியானத்துக்குரிய சிறந்த ஆசனம் எது என்பதை விளக்கி இருக்கிறார். 'பத்மாசனம்தான் மிகச் சிறந்தது' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தரையில் ஒரு பாயை விரித்துத் துணியைப் பரப்பி அமருங்கள். வலது பாதத்தை எடுத்து இடது தொடையிலும், இடது பாதத்தை எடுத்து வலது தொடையிலும் வைத்துக் கொள்ளுங்கள். இது வயிற்றின் அடிப்பகுதியை மெதுவாக அழுத்தவேண்டும். தலை, கழுத்து ஆகியவற்றை நிமிர்த்தி, முதுகைச் செங்குத்தாக வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் பத்மாசனம். ஆசனம் மன உறுதியை வெளிப்படுத்துவதைப்போல, உடம்பையும் உறுதியாக்கி நேராக, சீராக வைக்கிறது. மனஉறுதி, அமைதி, கவனம் ஆகியவற்றையும் இது கட்டுப்படுத்துகிறது.

தாமரை என்பதும், பத்மம் என்பதும் ஒன்றே. தாமரைக்குத் தூய்மையின் தனிச்சிறப்பு உண்டு. தாமரை மலர்ந்து விரிவதைப்போல தியானத்தின்போது நமது மனமும் விரிவடைகிறது. நமது ஆன்மிக மையங்கள் சக்கரங்கள். அதனால் தாமரைக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றன. சகஸ்ர சக்கரத்தில் அமர்ந்துள்ள கடவுள் நமது மனத்தில் ஒளியைப் பரப்புகிறார். சூரியவெளிச்சத்தில் தாமரை மலர்வதைப்போல. இந்த ஒளியில் நமது உள்ளம் மலர்ச்சி அடைகிறது. சேற்றிலிருந்து எழுந்தாலும் தாமரை நல்ல நீர்ப்பரப்பில் மிதப்பதைப்போல, உலகத்தின் ஆசாபாசங்களில் அழுந்தி வாழ நேர்ந்தாலும் மனம் தியானத்தின் போது தூய்மையில் மிதந்து மலருகிறது. சூரியனை நோக்கி நிமிர்ந்து மலரும் தாமரையைப்போல, மனமும் கடவுளை நோக்கி வழிபட்டு மலர்ச்சி அடைகிறது.

– சத்குரு சந்த்கேசவதாஸ்  

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com