0,00 INR

No products in the cart.

கூகுளாண்டவரே நன்றி

– ஹரிணி

 

கூகுள் தேடுபொறியை வழக்கமாகப் பயன்படுத்துகிறவர்கள் தளத்தில் நுழைந்தவுடன்  அதில் நாம் தேடவேண்டியவற்றை டைப் செய்யுமிடத்திற்கு மேலே  கூகுள் என்ற  வார்த்தையே அதன் டிரேட் மார்க்காக வருவதை கவனித்திருப்பிர்களே !

அதில் , சில நாள்களில் அந்த கூகுள் பெயருக்குப் பதில் யாரோ ஒருவரது உருவத்தைக் காட்டும் வரைகலை தோன்றும். ஒரு நபரையோ, நிகழ்வையோ கொண்டாடும் வகையில் அவ்வப்போது கூகுள் வெளியிடும் இந்த வரைகலைக்கு டூடுள் என்று பெயர்.

இன்று ஜூன் 4, 2022 அன்று கூகுள் வெளியிட்ட டூடுள் எதைப் பற்றித் தெரியுமா?

20-ம் நூற்றாண்டில் இயற்பியலைப் புரட்சிகரமாக மாற்றியமைத்தது குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற அணுவினும் நுண் பொருள்கள் பற்றிய அறிவியல்தான். இந்த அறிவியல் பிரிவின் உருவாக்கத்தில் ‘சத்யேந்திர நாத்’ என்ற விஞ்ஞானியின்  கோட்பாட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு.

அணுவுக்குள் இருக்கும் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான், போட்டான், நியூட்ரினோ, குவார்க் போன்ற எண்ணற்ற துகள்களும் உள்ளன. மேலும் பகுக்க முடியாத அணுவடித் துகள்களும் உண்டு. அனைத்தையும் இரண்டு வகையாக பிரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அவற்றில் ஒருவகை துகளுக்கு போசான் என்று பெயர். ஏன் இந்த பெயர் தெரியுமா?  நம் நாட்டு விஞ்னானி  சத்யேந்திரநாத் போஸ் பெயரேதான். இதற்கு சூட்டப்பட்டிருக்கிறது.  இந்த துகள்களுக்கு போஸ் பெயரை வழங்கியவர் ‘பால் டைராக்’ என்ற விஞ்ஞானி.பின்னாளில் கடவுள் துகள் என்று கொண்டாடப்பட்ட ஹிக்ஸ் போசான்கூட இந்த போசான் வகைதான். சத்யேந்திரநாத் போசும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் சேர்ந்து உருவாக்கிய ‘போஸ் – ஐன்ஸ்டீன் புள்ளியியல்’ என்ற கோட்பாட்டில் சொல்லியுள்ளபடி இயங்கும் துகள்கள் இவை என்பதால்தான் போசுக்கு இந்தப் பெருமையைத் தந்தார் டைராக்.

நவீன விஞ்ஞானம் பொருள்களில் ஏழு நிலைகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. அதி வெப்பநிலையில் உருவாகும் பிளாஸ்மா ஸ்டேட் எனப்படும் பிழம்பு நிலை, அதி உறை நிலையில் உருவாகும் போஸ்-ஐன்ஸ்டீன் கன்டன்சேட் என்பவை போல மொத்தம் பொருள்களில் 7 நிலைகள் உள்ளன.

அந்த 7 நிலைகளில் ஒன்றுக்குப் பெயர் ‘போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்சேட்’. அதிலுள்ள போஸ் என்பதும் நம் சத்யேந்திரநாத்தான்.

பொருள்களின் 7 நிலைகளில் ஒன்றுக்கு ஒருவர்  பெயர் சூட்டப்படவேண்டுமானால்,  விஞ்ஞானத்துக்கு அவரது பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

ஆனால், இந்த கண்டுபிடிப்புகளுக்காக  அவர் உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசோ, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவோ பெறவில்லை. ஆனால், அறிவியல் உலகம். இரண்டு முக்கிய இடங்களில் அவரது பெயரை சூட்டி சத்யேந்திரநாத் போசுக்கு அழியாப் புகழை அளித்தது.

அவரைத்தான் கூகுள் தன் டூடுளில் காட்டிக் கொண்டாடுகிறது.  சரி ஏன் ஜுன் 4 அன்று அவர் படத்தைக்காட்டுகிறது? அன்று அவர் பிறந்த நாளோ நினைவு நாளோ  இல்லை.

1917ல்  சத்யேந்திரநாத் போஸ் கல்லூரியில் இயற்பியல் கற்பிக்கத் தொடங்கினார். அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஏற்கெனவே இருந்த முறைக்கு மாற்றாக தம் ஆய்வில் தாம் கண்டவற்றை ஒரு கட்டுரையாக எழுதி ‘தி பிலாசபிகல் மேகசின்’ என்ற புகழ் பெற்ற சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தார் போஸ். ஆனால், அந்த சஞ்சிகை போஸ் எழுதிய கோட்பாட்டை நிராகரித்துவிட்டது.

மனம் தளராத போஸ் அந்தக் கோட்பாட்டை அப்போது புகழ் பெற்றுவிட்ட மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தார்.

போஸ் அனுப்பிய  கட்டுரைதான்  பின்னாளில் ஐன்ஸ்டீனோடு சேர்ந்து ஆராய்ச்சி செய்து, போஸ் ஐன்ஸ்டீன் புள்ளியியல் கோட்பாட்டை உருவாக்க வழி செய்தது.

அறிவியலில் ஒரு திருப்பு  முனையாக   நிகழ்ந்த நாள், அதாவது தனது கோட்பாட்டை போஸ் – ஐன்ஸ்டீனுக்கு அனுப்பிவைத்த நாள்தான் ஜூன் 4. பின்னாளில் வரலாறாக மாறிய இந்த நாள்தான், போசை பெருமைப்படுத்த கூகுள் தேர்ந்தெடுத்த நாள்.

2022 ஜூன் 4ம் தேதி சத்யேந்திரநாத் போசுக்கு புகழ் சேர்க்கும் வகையில் டூடுள் வெளியிட்ட கூகுள் நிறுவனம், அது தொடர்பான குறிப்பை இப்படி முடித்தது: “இயற்பியல் உலகை புரட்சிகரமாக மாற்றி அமைத்ததற்கு நன்றி சத்யேந்திரநாத் போஸ். உங்கள் கண்டுபிடிப்பு குவாண்டம் இயந்திரவியலை உண்மையிலேயே உலுக்கிவிட்டது!”

ஒவ்வொரு இந்தியனும் பெருமையுடன் நினைவு கூற வேண்டிய நாளை மறந்துவிட்ட  நினைவூட்டியதற்கு நன்றி கூகுள்…

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...