0,00 INR

No products in the cart.

வாடகை வீட்டில் நான் வாழ்ந்த நாட்கள் அழகானவை, இனிமையானவை.

முகநூல் பக்கம்.

 

சுந்தர் பிச்சை:

சுந்தர் பிச்சை. இந்தப் பெயரை தெரியாத தமிழர்களே இருக்க மாட்டார்கள். தமிழனாய் பிறந்து மென்பொருள் துறையில் தனக்கிருந்த ஆர்வத்தாலும், கடின உழைப்பாலும் நவீன உலகின் தவிர்க்க முடியாத கூகுள் நிறுவனத்தின் உயரிய பொறுப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுந்தர் பிச்சையின் வயது 46.

படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் சுந்தர் பிச்சைக்கு ஆர்வம் அதிகம். பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியதும் அவர்தான். இப்படி இவர் குறித்த ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில், செய்தித்தாள்களில், நூல்களில் வெளிவந்தன.

ஆனால், உண்மையில் அவரின் பள்ளிக்காலம், இளமைக்காலம் எப்படி இருந்தன? என்பது அவரைத்தவிர வேற யாருக்கு நன்கு தெரிந்திருக்கும். சென்னையில் சுந்தர் பிச்சை வாழ்ந்த நாட்கள் எப்படியானவை? இதற்கு சுந்தர் பிச்சையே தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்திருக்கும் பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

இதோ அவரின் மலரும் நினைவுகள்:

”சென்னையில் நான் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் எளிமையானது. இரண்டு அறைகள் கொண்ட சாதாரண வீட்டில்தான் பெற்றோருடன் இருந்தேன். அப்போது எல்லோர் வீட்டிலும் இருப்பது போன்ற டி.வி., ஃப்ரிட்ஜ் ஆகியவை எங்கள் வீட்டில் இல்லை. ஆனால் இப்போது நான் வாழும் வாழ்க்கையோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தால் வாடகை வீட்டில் நான் வாழ்ந்த நாட்கள் அழகானவை, இனிமையானவை.

இப்போது என்னை எல்லோரும் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓ வாகதான் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் நான் எளிமையை விரும்பும் மனிதன். எளிமையாகத்தான் வாழ்ந்தேன்… வளர்ந்தேன். ஆடம்பரமான பெட், கட்டில் எல்லால் கிடையாது.

தரையில்தான் படுத்து உறங்குவேன். கடும் அச்சத்தை தரும் வறட்சியையெல்லாம் நாங்கள் சந்தித்துள்ளோம். அதனால் எப்போதும் தலைமாட்டில் தண்ணீர் வைத்துக் கொண்டுதான் தூங்குவோம். இப்போதும் அந்த பழக்கம் எனக்கு இருக்கிறது. என் அறையில் என் தலைமாட்டில் ஒரு பாட்டிலில் தண்ணீர் எப்போதும் இருக்கும்.

சிறு வயதில் எங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்று கவலைப்பட்டு இருக்கிறேன். ஒருநாள் அதை நான் வாங்கியபோது எனக்கு அதுவே மிகப்பெரிய சாதனையாக தெரிந்தது. படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. கையில் எது கிடைத்தாலும் அதைப் படிப்பேன், சார்லஸ் டிக்கன்ஸ் புத்தங்களைக்கூடப் படித்திருக்கிறேன்.

இளம்பருவத்தில் சுந்தர் பிச்சை

என்னுடைய மிகப்பெரிய பொழுதுப்போக்கே நண்பர்கள், தெருவில் கிரிக்கெட் விளையாடுவது மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தான். இப்படித்தான் என் இளமைக்காலம் கழிந்தது. ஆனால் அதில் நீங்கள் எந்தக் குறையையும் உணர முடியாது.

கம்ப்யூட்டர்… இந்த பெயரை கேட்கும் போதே எனக்கு அந்த நாள் ஞாபகங்கள் வந்து விடுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் எவன் ஒருவன் கம்ப்யூட்டரை ஈஸியாக ஆப்ரேட் செய்கிறானோ அவன்தான் பெரிய ஆள். நான் படிக்கும் காலத்தில் ஏறக்குறைய நான் 4 முறை கம்ப்யூட்டரை இயக்கி இருப்பேன் அதுவே எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சையின் இளமைக்காலம் இவ்வளவு எளிமையாக இருந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. சுந்தர் பிச்சையின் இந்த பேட்டிக்கு பிறகு இந்த வசனம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.

”வாழ்நாளில் ஒருவன் எப்படி பிறந்தான் என்பது முக்கியமில்லை; எப்படி வாழ்கிறான் என்பதே முக்கியம்.”

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

கந்தசாமி R. முகநூல் பக்கத்திலிருந்து…

 

1 COMMENT

  1. உண்மைதான்! பொருள்களுடன் வாழ்வதில் அர்த்தமில்லை உறவுகளுடன் வாழ்வதே இனிய அனுபவம்
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...

நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது.

1
முகநூல் பக்கம் சபேசன் இராமஸ்வாமி முகநூல் பக்கத்திலிருந்து...   அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம். அவர் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்த உத்தரவிட்டார். அப்போது திருச்சியில்  கலியமூர்த்தி ஐ.பி.எஸ். உயர் அதிகாரியாக இருந்தார். அவருக்கு அப்துல் கலாமிடமிருந்து...

கோர்ட்டில் நிறுத்தினாலே நீங்கள் குற்றவாளிதான்.

0
நீயாண்டர் செல்வன் முகநூல் பக்கத்திலிருந்து.... குற்றம் சுமத்தபட்டால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் எனும் லாஜிக் எடுபடாத நாடு ஒன்று உள்ளது. அங்கே அரசு வழக்கறிஞர் உங்களை கைது பண்ணி கோர்ட்டில் நிறுத்தினாலே...

அப்போதே அக்னிபாத் இருந்திருந்தால்…..?!

0
முகநூல் பக்கம்   Nagarajarao Ramakrishnan  முகநூல் பக்கத்திலிருந்து...   நான் இளைஞனாக இருக்கும் போது ஏர்போர்ஸில் சேர்ந்து நாட்டுக்காக சேவை புரியவேண்டும் என்று ஒரு ஆசை என் அடி மனதில் வேரூன்றி இலை தழையெல்லாம் கூட விட்டு...