0,00 INR

No products in the cart.

நம்ம  ஆளுங்க கலக்கறாங்க!

பிரசன்னா

 

றுபதுகளில் மற்றும் எழுபதுகளில் பிரிட்டனை சேர்ந்த இசைக் குழுக்கள் அமெரிக்க மக்களை வசீகரித்து கட்டிப் போட்டன. Rolling Stones, Beatles, Pink Floyd, Black Sabbath என்று வரிசை வரிசையாக அமெரிக்காவில் பிரபலமாகி சக்கைப் போடு போட்டதை வைத்து ‘பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு’, அதாவது British Invasion, என்று ஊடகங்கள் அழைத்தன. அதுபோல, இப்போது அமெரிக்க ஐடி துறையில் Indian Invasion நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து மெட்டா நிறுவனத்துக்கு ஒரு இந்தியர் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டால் இந்திய ஆக்கிரமிப்பு முழுமையடைந்து விடும். (விரைவில் நடக்கும் என அமெரிக்க ஊடகங்கள் கணிக்கின்றன)

உலகின் மாபெரும் டெக் நிறுவனங்களாகத் திகழும் பல நிறுவனத்தில் தற்போது இந்தியர்கள் உயர் பதவி வகிக்கிறார்கள். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சையில் துவங்கி பல நிறுவனங்களில் அடுத்தடுத்து திட்டமிட்ட வகையில் இந்தியர்களைச் சிஇஓ-வாக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் அண்மையில் சேருபவர்  பராக் அகர்வால்.  டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டிருக்கிறார். மும்பை ஐஐடியில் பட்டம் பெற்ற இவர் மதிப்பு மிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி முடித்திருக்கிறார். டிவிட்டர் நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இதுவரை பணிபுரிந்து கொண்டிருந்தவர் இப்போது சிஈஓவாகி இருக்கிறார்.

பொதுவாக அமெரிக்க முன்னணி நிறுவனங்களில் அதன் தலைவராக அல்லது முதன்மைப் பதவியிலிருப்பவர்கள் அமெரிக்கர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் இன்று முன்னணி நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பிலிருக்கும்  இந்தியர்கள்களின் பட்டியல் இது.

சாந்தனு நாராயண் – அடோப்

சுந்தர் பிச்சை – ஆல்பபெட்

சத்யா நாதெல்லா – மைக்ரோசாஃப்ட்

புனிட் ரென்ஜென் – டெலாய்ட்

அரவிந்த் கிருஷ்ணா – ஐபிஎம்

விவேக் சங்கரன் – ஆல்பர்ட்சன்

வாஸ் நரசிம்மன் – நோவார்டிஸ்

அஜய் பங்கா – மாஸ்டர்கார்டு

இவான் மானுவல் மெனெஸ் – டியாஜியோ

நிராஜ் எஸ். ஷா – வேஃபேர்

சஞ்சய் மெஹ்ரோத்ரா – மைக்ரான்

ஜார்ஜ் குரியன் – NetApp

நிகேஷ் அரோரா – பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ்

தினேஷ் சி. பாலிவால் – ஹர்மன் இன்டர்நேஷனல் இண்டஸ்ட்ரீஸ்

சந்தீப் மாத்ரானி – WeWork

அரவிந்த் கிருஷ்ணா – ஐபிஎம்

இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது

1965 குடிவரவு மற்றும் தேசிய சட்டம் (அமெரிக்கா) சட்டத்திற்குப் பின்பு இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குப் பலர் வேலைவாய்ப்புக்காகவும், வர்த்தக வாய்ப்புக்காகவும் சென்றனர். இக்காலக்கட்டத்தில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் மிகவும் போராடி தனக்கான இடத்தை அசைக்க முடியாத அளவில் பிடித்தனர். 1990க்குப் பின் குடிவரவு சட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் டெக்னாலஜி பிரிவில் இந்தியர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொட்டிக்கொடுத்தது.

படிப்பிற்காக 1960களில் இருந்தே இந்திய பெற்றோர்கள் அதிகளவிலான முக்கியதுவம் கொடுத்த காரணத்தால் 1990க்குப் பின் உருவாக டெக் வளர்ச்சி இந்தியர்களுக்குப் பெரிய அளவில் உதவியது.

மற்றொரு முக்கியக் காரணம்,  அமெரிக்க நிறுவனங்களின் மாறிய மனப்போக்கு. அமெரிக்காவில் ”நிறுவனத்தைத் துவங்கியவரே நிர்வாகம் செய்யக் கூடாது” என்ற மனநிலை பெரு நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெக் துறையில் இந்தக் கண்ணோட்டம் இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் பொறுப்பு இந்தியர்களுக்கு அளிக்கும் பட்சத்தில் பெரும் வெற்றி கிடைப்பதாக உணரப்படுகிறது.

 இந்தியர்களின் தொலைநோக்கு

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைத்து துறையிலும் அனைத்து விஷயத்திலும் போட்டியும், கணக்கீடும் இருக்கும். இதனால் இந்தியர்களுக்குப் பொதுவாகவே பகுப்பாய்வு மனம் & தொலைநோக்குப் பார்வையும் அதிகம். உதாரணமாக இன்று நீங்கள் மார்டன் அப்பா அம்மாவாக இருந்தாலும், அடுத்த 30 வருடத்திற்குப்பின் என் குழந்தை என்ன செய்யப்போகிறது… நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான கணக்கீடு இருக்கும். இது இந்தியாவில் இருக்கும் போட்டி நிறைந்த மனநிலையில் உருவான தாக்கம்.

கடுமை உழைப்பு

இந்தியர்களுக்குக் கடுமையாக உழைக்க வேண்டியது கட்டாயம், சுதந்திரத்திற்குப் பின்பு மக்கள் தங்களுடைய தினசரி தேவையைப் பூர்த்தி செய்யவே 200 சதவீதம் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த காரணத்தால்  கடுமையாக உழைக்கும் பழக்கம் இந்தியர்களின் DNAவிலேயே உள்ளது.

ஏன் இந்தியர்கள் மட்டும் ?

தற்போது அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓ-வாக இருக்கும் அனைத்து இந்தியர்களும் இந்தியாவின் தலை சிறந்த கல்லூரியில் படித்து அதன் பின்பு அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் இருக்கும் முக்கியக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர்.

இந்தியர்களுக்கே உண்டான நேர்மை, கடுமையாக உழைக்கும் குணம், வீடு வாசல் மறந்து நிறுவனத்திற்காகப் பணியாற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து உயர் படிப்பு மற்றும் பல வருட அனுபவங்கள் இருக்கும் போது ஒரு நிறுவனத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்கள்.  முதலில் அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ-வாக உயரும் ஒருவர் செய்யும் சாதனைகளும், அவரின் நிர்வாகத்தின் மூலம் நிறுவனத்திற்குக் கிடைக்கும் வளர்ச்சி பெரும் தாக்கத்தைப் பிற நிறுவனங்கள் போட்டி நிறுவனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

இந்திய தலைமையில் அதிக வளர்ச்சி

மேலும் இந்த அனைத்து காரணங்களையும் ஏற்கும் வண்ணம் இந்தியர்கள் கையில் கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் மதிப்பீடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உதாரணமாக அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயண் சிஇஓ-வாகப் பதவியேற்கும் போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு 24-30 பில்லியன் டாலர்தான். இன்று 327 பில்லியன் டாலர். இதேபோலத்தான் ஆல்பபெட், மைக்ரோசாப்ட், மாஸ்டர்கார்டு போன்று பல நிறுவனங்கள்.

காலம் மாறிப் போச்சு

80களில் ஐஐடி மாணவர்கள் அமெரிக்காவிற்கு படிக்கப் போனால் இந்தியா திரும்புவதில்லை. நமது மாணவர்களின்  திறன்கள் நாட்டுக்கு பயன் படாமல்  விணாகிக்கொண்டிருக்கிறது (Brain Drainலென்று விமர்சிக்கப்பட்டார்கள். ஆனால் இன்று நமது ஐஐடிக்கள் ”உலகத்தர கார்ப்பரேட் நிர்வாகிகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்” என முழங்குகிறார்கள். காலம்  மாறித்தான் போச்சு.

 

1 COMMENT

  1. நம்மவர்கள் உயர்த்த பதவிகளில் வெளிநாட்டில் இருப்பது பெருமைக்குரிய கே! திரைக் கடலோடியம் திரவியம் தேடு என்றுதான் சொன்னார்கள். அங்கேயே தங்கியுள்ளது முறையாக தெரியவில்லை. நம் திறமைகளை நாடி அயலக நிறுவனங்கள் இங்கு வந்து கடைவிரிக்கும் நாளும் வரத்தான் போகிறது!

    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

கொடியேற்றும் உரிமை… வாங்கிக்கொடுத்தவர் கலைஞர்

0
- ஆர்.முத்துக்குமார்   சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தின் மீது அமைந்துள்ள உயர்ந்த கொடிக்கம்பத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அதற்கான உரிமை...

அமிர்த சுதந்திரத்துக்காகச் சிந்திய கண்ணீர்த்துளிகளில் சில…

0
எஸ். சந்திரமௌலி   இந்தியா தனது விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவினை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஆகஸ்ட் 15 : இவர்களும் கொண்டாடுகிறார்கள்! ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

சினிமாவாகவும் வரப்போவதால் பொன்னியின் செல்வனுக்கு கிராக்கி

1
  கா.சு.வேலாயுதன்   கோவை கொடீசியா புத்தகத்திருவிழா காட்சிகள்   ஆண்டுதோறும் நடக்கும் புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சிகள் தற்போது தமிழகம் முழுக்க  வியாபித்து வருகிறது. சிற்றூர்களிலும் பெரிதாக நடக்கிறது. அரசே புத்தகத் திருவிழாக்களை ஊக்குவித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு வழிகாட்டுகிறது....

வந்துக்கொண்டிருக்கிறான் வந்தியத்தேவன்

2
  - ஆதித்யா   கல்கி ஆன்லைனில்  விரைவில் தொடங்க இருக்கும் “கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப்பயணம்” என்ற  விடியோத் தொடரின் டீசர்களை வெளியீடும் நிகழ்ச்சிதான் அது. இன்று திரைப்படங்களுக்கு  டீசர்கள் வெளியிடுவது வாடிக்கையாகிப்போன  விஷயம். ஆனால், ஓர் ...