பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா

பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா
Published on

ஹர்ஷா

தி நேச்சர் சன்சர்வென்சி ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு இது. 72 நாடுகளில் இயங்குகிறது. ஆண்டுதோறும் சுற்றுச்சூழல், இயற்கைவளம் போன்ற  வகைகளில் புகைப்பட போட்டி நடத்துகிறது.

இந்தப் போட்டியில் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து  4 ஆயிரம் ஆமெரிக்க டாலர் பரிசுக்காக வெற்றிப் பெற்ற புகைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படம் இது.   மத்திய ஆப்ரிக்க குடியரசில் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து வரும் மேற்கு தாழ்நில கொரிலாவின் புகைப்படத்தை எடுத்தவர் பிரிட்டனை சேர்ந்த அனுப் ஷா.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற வேறு சில படங்கள்:

1. மழைகாலத்திற்கு முன், இந்தியாவின் ஒருசில பகுதிகளில்  குறிப்பிட்ட  சில மரங்களில் இவ்வாறு ஒன்று கூடும். இந்த மின்மினிப்பூச்சிகளை படம்  எடுத்தவர் ப்ரதாமேஷ் கடேகர், இந்தியா.

2.  ஹெலிகாப்டரில் சென்றுக்கொண்டிருந்தபோது டைனோசர் தலை போன்று காட்சியளிக்கும் வெள்ளை போர்த்திய இந்த அழகிய மலைத்தொடரை கண்டேன் என்கிறார் புகைப்படக் கலைஞர் டெனிஸ் ஃப்ரெய்ரா நெட்டோ.

3. ஆபத்தான மணல் புயலில் நான் கண்ட அழகான காட்சி இது என்கிறார் ஆஸ்திரேலியாவின் புகைப்படக்காரர்  டாம் ஓவரால், ஆஸ்திரேலியா.

4. கென்யாவில் உள்ள மசாய் மரா தேசிய சரணாலயத்தில் பெய்த அதீத மழையால் தலெக் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த ஐந்து ஆண் சிறுத்தைகள் அச்சுறுத்தும் வகையிலான அந்த நீரோட்டத்தைக் கடக்க முயற்சிக்கின்றன. அந்த சிறுத்தைகள் தோல்வியை தழுவிடுமோ என்று அஞ்சிய சமயத்தில் அது அக்கரை சேர்ந்தது பெரும் மகிழ்ச்சி என்கிறார் படத்தை எடுத்த ஆஸ்திரேலியர் புத்திலினி டெ சோய்சா, ஆஸ்திரேலியா.

5.  மயில் தன் தோகையை விரித்துக் காட்டுவது போல் தன் ரோமக் கைகளை விரித்துப் போஸ் கொடுத்தது இந்த போர்னியோ காட்டு மனிதக் குரங்கு  என்கிறார் இதை தேடி எடுத்த  தாமஸ் விஜயன், கனடா.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com