பீட்சா பிறந்தது இத்தாலியில்  இல்லை!

பீட்சா பிறந்தது இத்தாலியில்  இல்லை!
Published on

– செல்வா

ன்று இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பும் பீட்சா, பிஸா, பிட்சா, பிஜ்ஜா [பொதுவாக வட இந்தியர்களால்]  அழைக்கப் படுகிற இந்த பீட்சா பிறந்தது இத்தாலி என்று பரவலாக அறியப்பட்டாலும் பீட்சா பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் காலத்திலேயே உருவானது. ஆனால் பீட்சா இத்தாலியிலிருந்துதான் வந்தது என சொல்லப்படுவதற்கு காரணம் இத்தாலி ராணியான Margherita of Savoy (Margherita Maria Teresa Giovanna என்கிற மெர்கரிட்டாதான்.

ஒரு நாள் தன் கணவரோட நகர்வலம் வரும்போது ஏழைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டையான சப்பாத்தி போன்ற ஒன்றைப் பார்த்த ராணிக்கு அந்த ஏழையின் ரொட்டி மேல் ஒரு அல்ப ஆசையாம்! வாங்கிச் சாப்பிட்டு மிகவும் பிடித்துவிட, அரண்மணை சமையல்காரருக்கு அதை அரண்மனையில் தயாரிக்க  ஆணை பிறப்பித்து விட்டார் மன்னர்.

உலகளவில் பிரபலமான பிட்சாவைப்போலவே  அது தொடர்பான ஜோக்குகளும் நிறைய உண்டு.

ஒரு கம்பெனி முதலாளி கம்பெனிக்குள்ள வரும்போது வாசல்ல ஒரு பையன் சும்மா நிற்பதைக் கண்டார். அவனைப் பார்த்து "உனக்கு எவ்வளவு சம்பளம்"னு கேட்டார் முதலாளி.

அவன் – "வாரத்துக்கு பத்து டாலர்"னு சொன்னான்."

"இந்தா முப்பது டாலர். வெளியே போ. சும்மா நிக்கறதுக்கா உன்னை வேலைக்கு வெச்சேன்" அப்படின்னு சொல்லி அனுப்பிவிட்டார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற தொழிலாளிகளிடம்,   "வேலை செய்யாமல் சும்மா இருந்தா உங்களுக்கும் இதே நிலைதான்!" என்று எச்சரித்தாராம் அந்த முதலாளி.

பிறகு ஒரு தொழிலாளியிடம், 'நான் இப்போ வெளியே அனுப்பின அந்த தொழிலாளி பேர் என்ன"என்று கேட்டாராம்.

அதற்கு அந்த தொழிலாளி சொன்ன பதில்:  "அவன் பேர் எல்லாம் தெரியாது. ஆனா அவன் பீட்சா டெலிவரி பண்ண வந்தவன்" என்றானாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com