0,00 INR

No products in the cart.

கொஞ்ச நாள் பொறு தலைவா!

பொலிடிகல் பிஸா

– எஸ். சந்திர மௌலி

 

மஹார்யாமன் சிந்தியா. ம.பி.யின் குவாலியர் அரச பரம்பரியின் வாரிசு. காங்கிரசுக்குத் தலைவலி கொடுத்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு வந்துவிட்ட ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன்.  வயது 26. அண்மையில் குவாலியர் ஜெய விலாஸ் அரண்மனையில் கோலாகலமாக அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. ஊரெங்கும் போஸ்டர்கள்; தெருவெங்கும் பேனர்கள். ராஜ பரம்பரையல்லவா? இளவரசர் வாள் கொண்டு கேக் வெட்ட, தொண்டர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டது. அவர் அரசியல் களத்தில் இறங்கும் அறிவிப்பினை எல்லோரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் கத்திருந்த வேளையில், மஹார்யாமன் சிந்தியா, “முதலில் மக்களோடு கலந்து பழகி அவர்களையும், அவர்கள் பிரச்னைகளையும், தேவைகளையும் புரிந்துகொண்டு, அப்புறம் அரசியலுக்கு வருகிறேன்” என்று சொல்லிவிட்டார். ராஜ புலி பின்வாங்குவது பாய்வதற்காகவா?

இன்னும் இருவர் போதுமா?

பா.ஜ.க. மேலிடம் அண்மையில் பூனாவாலா, பாரதி கோஷ் என இருவரை தங்கள் கட்சியின் அதிகாரபூர்வ மீடியா தொடர்பாளர்களாக  அறிவித்துள்ளது. இவர்களையும் சேர்த்து, பா.ஜ.க.வுக்கு 25 மீடியா  தொடர்பாளர்கள். எப்போதுமே, பா.ஜ.க.வில் மீடியா தொடர்பாளர்  ஆவதற்கு பலரும் ஆர்வமாக இருப்பார்கள். காரணம், அந்தப் பணியை மிகவும் செவ்வனே செய்பவர்களை, ராஜ்ய சபை எம்.பி., அப்புறம் மந்திரி என்று பிரமோஷன் கொடுப்பது காவி பாலிசி. நிர்மலா சீதாராமன், மீனாட்சி லெகி, ராஜிவ் சந்திரசேகர் எல்லாம் இதற்கு சில உதாரணங்கள். சரி! காங்கிரசில் எத்தனை மீடியா தொடர்பாளர்கள் தெரியுமா? 40 பேர். ஆனாலும், கட்சியைத் தூக்கி நிறுத்த முடியவில்லையே?

டி.ஆர்.எஸ். மிரட்டல்; சட்டம் வாபஸ்!

டி.ஆர்.எஸ். கட்சிக்கு பயந்துதான் விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக  மோடி அறிவித்தார் என்று காலரை சிலுப்பிக் கொள்கிறார்கள் ஹைதராபாதில். அந்தக் கட்சிக்காரரான தெலங்கானா விவசாய அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி, அண்மையில், “எங்கள் தலைவர் சந்திர சேகர ராவ் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்தவுடன், விவசாயிகள் போராட்டம் வடக்கு போல தெற்கிலும் பயங்கரமாக வெடிக்கும் என்று பயந்துதான் சட்டங்களை வாபஸ் பெற்றுவிட்டார் மோடி” என்று ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். என்னமோ உட்கார, ஏதோ பழம் விழுந்ததாக சொல்வார்களே து ஞாபகம் வரலை?

பாட்டுப்பாடவா? டான்ஸ் ஆடவா?

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் எப்போதுமே ரொம்ப எளிமையானவர் என பெயர் எடுத்தவர். அண்மையில் போபாலில் ஒரு பிரம்மாண்ட  பழங்குடியினர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து, அதில் பிரதமரையும் பங்கேற்கச் செய்தார். நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவெனில்  சவுகானும், அவரது மனைவியும் பழங்குடி இன பாரம்பரிய உடையில் அதில் பங்கேற்றதுடன், பழங்குடியின ஆடல், பாடலில் பங்கேற்றதுதான்! அட! இன்னொரு ராப்ரி தேவி ரெடி!

காங்கிரஸ் வேண்டுமா? வேணாமா?

வரவிருக்கும் உ.பி., கோவா, பஞ்சாப், மணிப்பூர்,  உத்தராகண்ட் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா? வேண்டாமா? இதுதான் அண்மையில் கம்யூனிஸ்ட்களின் முன் எழுந்து நின்ற கேள்வி. இந்த மாநிலங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் ரொம்ப வீக் என்பதால், மற்றவர்கள் எல்லாம் ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் இருக்க, மே. வங்கம், கேரளா இரு மாநில கம்யூனிஸ்டுகள் மட்டும் காரசாரமாக மோதிக்கொண்டார்கள். கூட்டணி வைக்கலாம் என மே. வங்காளத் தோழர்கள் சொல்ல, கூடவே கூடாது என கேரள காம்ரேட்டுகள் எதிர்க் குரல் எழுப்ப, கடைசியில் கட்சியின் இறுதி முடிவில் மலையாள ஆதிக்கமே வென்றது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மம்தா பானர்ஜி இப்போது கேள்வி கேட்கமாட்டார்

0
அரசியல்   - எஸ். சந்திரமௌலி   இந்திய ஜனநாயகம் “ஜனாதிபதி தேர்தல்” என்ற திருவிழா முடிந்து, அடுத்து “துணை ஜனாதிபத தேர்தல்” என்ற அடுத்த திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது. பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் ஜகதீப் தங்கர் வேட்பாளர். காங்கிரஸ் உள்ளிட்ட...

விற்பதற்கல்ல! விதைக்காக

0
பொலிடிகல் பிஸா - எஸ். சந்திரமௌலி   கேட்பீர்களா? கேட்பீர்களா? பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே. பாராளுமன்றத்தில் பேசும்போது அவர் இந்தி, ஆங்கிலம் என்று பொளந்து கட்டுகிறார். ஆனால், தன் தாய்மண்ணுக்கு...

மீண்டும் ராகுலுக்கு அமேதி மேல் ஒரு கண்!

0
பொலிடிகல் பிஸா   - எஸ். சந்திரமௌலி பிரஷாந்த் கிஷோரை வளைக்க போட்டி மம்தா பானர்ஜி, மு,க.ஸ்டாலின் இருவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வியூகம் அமைத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோரை 23ஆம் வருட சட்ட மன்றத் தேர்தலுக்கு வளைத்துப்...

வழக்கம் போல மௌனம்தான்!

0
பொலிடிகல் பிஸா - எஸ். சந்திர மௌலி   பெயரில் பிரச்னை ஓட்டு வங்கி அரசியலில், ஆட்சியாளர்கள் இன்ன செய்தால், இன்ன ஜாதி, இன, பிரிவு மக்களின் ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள். ஆனால்,...

மீசை வளர்க்கும் ஆசை வந்த காலத்தில்…

0
சுஜாதா தேசிகன்                                             ...