0,00 INR

No products in the cart.

ஜீவ சமாதி அடைவது எப்படி

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

? அண்மையில் ரசித்தது?
– ஜோதி அண்ணாமலை, விழுப்புரம்
! முகநூலில்  அண்மையில் வெளியாகியிருந்த இந்தப் படம்தான். தாயின் அழுகை,  குழந்தையின் பயம், உடைகளில் ஈரம், சுருக்கங்கள்,  கடல் நீரின் வண்ணம்  அதன் மீது விழும் ஒளி. சட்டென்று புகைப்படம் போல் தோன்றும் இந்த ஓவியம்.
பெயர், முகம்அறியாத அந்த ஓவியனுக்கு பாராட்டுகள்.

? ள்ளிகளில் பாலியல் வன்முறையை தடுக்கவே முடியாதா?
– சண்முகசுந்தரம், திருமங்கலம்
! நல்ல திட்டமிடல், சிறந்த செயலாக்கம் இருந்தால் நிச்சயம் முடியும். பள்ளிகளில் தங்களுக்கு நேர்ந்ததை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளும் துணிவை குழந்தைகளுக்கும், அதைப் புரிந்து கொள்ளப் பெற்றோர்களுக்கும் விழிப்புர்ணவை ஏற்படுத்தவேண்டும். இந்த சமூகக் கடமையை அரசின் ஆணைகளால் மட்டும் செய்துவிடமுடியாது. பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இதில் பங்கிருக்கிறது.  இதன் முதல் படியாக, “பாலியல் சீண்டல் புகார்களைத் தெரிவிக்க  நோட்டு புத்தகங்களில் தொலைபேசி எண்கள் அச்சிடப்படும்” என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுபோல அந்த எண்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் எழுதப்படவேண்டும்.  இது மாணவர்களுக்கு தைரியத்தையும் குற்றம் செய்யத் துணிபவர்களுக்கு அச்சத்தையும் கொடுக்கும்.

? எதிரி நாட்டுச்  சொத்துக்களை விற்கப் போவதாக அறிவிக்கிறார்களே? எதிரி நாட்டுக்கு எப்படி இந்தியாவில் சொத்து இருக்க முடியும்?
– சாவித்திரி, திருநின்றவூர்
! அவைகள் எதிரி நாட்டு அரசின் சொத்துக்கள் இல்லை. பிரிவினையின் போதும், சீன, பாகிஸ்தான் போரின் போதும் அச்சத்தினால் இந்தியாவில் வாழ்ந்த அந்த நாட்டு மக்கள்  தங்கள் சொத்துக்களை விட்டுவிட்டு  வெளியேறினார்கள். அத்தகைய சொத்துக்கள் எதிரி நாட்டு சொத்தாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கபட்டு வருகிறது. இதற்கெனத் தனிச் சட்டம் இருக்கிறது.  இப்படி அடையாளம் காணப்பட்ட 12,600 சொத்துக்களின் இன்றைய மதிப்பு  ஒரு லட்சம் கோடி. பொதுத்துறை நிறுவன சொத்துக்களை விற்று பணம் திரட்டுவது போல இதையும் செய்ய ஒரு குழு அமைத்திருக்கிறார்கள்.

? நமது நடிகைகள் ஏன் அடிக்கடி மாலத்தீவுக்குப் போகிறார்கள்?
– ஜாகிர் உசேன், வாணியம்பாடி
மாலத்தீவை உலகின் மிகச்சிறப்பான விடுமுறைத் தலமாக ஆக்க அந்த அரசு பெரும் முதலீட்டில் ஆடம்பர ஹோட்டல்கள், சொகுசு பங்களாக்கள், படகுகள்  போன்ற பல வசதிகளை செய்துகொண்டிருக்கிறது, இவற்றைப் பிரபலமாக்க  ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களை தங்கள் விளம்பரத் தூதுவர்களாக நியமித்திருக்கிறது. அவர்களின் வருகையும் விடுமுறையும்  பரவலாகப் பேசப்படும் வகையில் செய்திகளையும்  வெளியிடுகிறது. சுருக்கமாகச் சொன்னால் நடிகைகள் மூலம் சொல்லாமல் செய்யப்படும் விளம்பரம்!   நீங்கள் கேள்வி கேட்டிருப்பதிலிருந்து “அவர்களின் உத்தி பலன் அளித்திருக்கிறது” என்று தெரிகிறது.

? ஜீவ சமாதி அடைவது எப்படி?
– ஆர், கார்த்திகேயன், சென்னை
! அதைத்தெரிந்து கொள்வதற்கு முன்னால், கார்த்திகேயன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் தற்கொலை முயற்சி இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம்.  உங்களுக்கு யாரவது வழிகாட்டினால் தற்கொலையை தூண்டிய குற்றம் அவர்களுடையது.

?அ.தி.மு.க. முன்னால் அமைச்சர்கன் வீடுகளில் நடக்கும் ரெய்டுகள் பழி வாங்கும் நடவடிக்கை என்கிறாரே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை?
– ஜீவா, திருச்சி
! ’கூட்டணி தர்மம்’ என்ற சொல் நினைவுக்கு வருகிறது.

? அரசியல் புகாத இடம்?
– நெல்லை குரலோன்,  பொட்டல்புதூர்
! பிறக்கப் போகும் குழந்தையின் கருவறை!

?ஒரு வழியாக அண்ணா தி.மு.க. தலைவர்கள் தேர்தல் நடந்துவிட்டதே?
– அலெக்ஸாண்டர், திருச்சி.
அச்சத்துடன் தொடங்கிய முதல் காட்சி:
தன்னை ஒதுக்கி இ.பி.எஸ். பொதுச் செயலாளராகி விடுவாரோ? என்ற பன்னீர் செல்வத்தின் அச்சம்,  எங்கே சசிகலாவைச்சேர்த்து தன்னை ஒதுக்கிவிடுவாரோ என்ற இ.பி.எஸ். அச்சம்.
பரஸ்பரம் நம்பிக்கையில்லாத அமைதி ஒப்பந்தத்தில் தொடர்ந்த இரண்டாம் காட்சி:
இருவரும் தங்கள் பதவிகளைத் தற்காலிகமாக தக்க வைத்துக் கொண்டாலும் ’எப்போது வேண்டுமானலும் அடுத்தவரால் கால்வாரப் படலாம்’ என்ற  அவநம்பிக்கையுடன்  நடந்த காட்சியைத் தொடர்ந்தது இறுதிக் காட்சி…
ஒற்றை வாக்குத் தேர்தல் என்ற காமெடி காட்சி
வாக்காளர்கள் ஒற்றை வாக்கில் இரண்டு பதவிகளுக்கு  வாக்களிக்கும் நகைச்சுவையான காட்சியுடன் நாடகம் முடிந்துவிட்டது.

? என்னை இனி ‘தல’ என்றோ அல்லது வேறெந்த அடைமொழியுடனோ  குறிப்பிடாமல் அஜித், அஜித் குமார் அல்லது ஏ.கே. என்று மட்டும்  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” –என்கிறாரே  நடிகர் அஜித் குமார்?
– ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
! தமிழ்த் திரை நட்சத்திரங்களில் அஜித் பல வகையில் மாறுபட்டவர். ஆனால்  அவரது ரசிகர்கள் மாறாதவர்கள்.

? ஒமைக்ரான் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டதே?
– நெல்லை குரலோன்,  பொட்டல்புதூர்
! எதுவுமே நுழைய முடியாத இரும்புத் திறை நாடல்ல இந்தியா. நுழைந்தால் என்ன? சமாளிப்போம்.  எதையெல்லாமோ சமாளித்துவிட்டோம் இதைச் செய்ய மாட்டோமா என்ன?

1 COMMENT

  1. கல்கியை திறந்ததும் தராசாரின் பதில்களைத் தான்
    ஆவலுடன் தேட வைக்கிறது ஆத்மா! அந்த அளவுக்கு கனகச்சிதமும் கறார் நெறியும் கலக்கமோ, களங்கமோ இல்லாத நேர்மைத் திறனும் நிறைந்து
    செம கலக்கலாக இருப்பது, உண்மையிலேயே பெருமிதம் நெஞ்சில் பொங்குகிறது. இது சாமீ சத்தியம்!
    நெல்லை குரலோன்
    பொட்டல்புதூர்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“ஆளுநருடன் அரசியல் பேசினேன்” – ரஜினிகாந்த்

1
? “உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யில் வரிச்சலுகை இருப்பதை மக்கள் புரிந்துகொள்ளாமல்  எதிர்க்கிறார்கள்” என்கின்றனரே பா.ஜ.க.வினர்? - ஜோஷ், அயன்புரம் ! அப்படியா. நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்... அரிசி 25 கிலோ பாக்கிங் மூட்டைக்கு ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 1312-5.. அதே அரிசி...

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் எப்படி?  

2
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா எப்படி? - எம்.சண்முகம், எடப்பாடி ! ஒரு விளையாட்டுப் போட்டியின் உள்ளடக்கத்தை உள்வாங்கிப் பெரும் நிகழ்வாக்கிக் காட்டுவது எப்படி என்பதை  தொடக்க நிகழ்வுகள்...

ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும் ?

1
? ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும்? - மதி மாறன், சேலம் ! ஓர் எழுத்தாளன் தம் வாசகர்களுக்கு நெருக்கமான, தம்மைப் போன்ற ஒரு மனிதனாக, தாம் எளிதில் அணுகி உரையாடக்கூடிய ஒருவனாக,  தமக்குப் பிடிக்கக்கூடிய...

கண்ணியத்தை காக்காததற்கு கட்சி அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? சென்னை செஸ் ஒலிம்பியாட்  பற்றி... -நெல்லை குரலோன், பொட்டல்புதூர் முன்னேற்பாடுகள் கச்சிதமாக செய்யப்பட்டுக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், வெளியான விளம்பர படத்தில்  உலகம் அறிந்த விஸ்வநாத் ஆனந்தோ, அல்லது பிரஞ்யாவோ...

இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம் என்கிறாரே கமல்?

0
  “இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம்” என்கிறாரே கமல்? - மாடக்கண்ணு, நெல்லை ! அவர் ஏற்றுகொள்ள மாட்டார். இந்திய ஜனாதிபதி பணம் ஈட்டும் எந்தப் பணியையும் செய்ய முடியாது.  ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் செய்யலாம். அவர் இசைஞானிதானே...