ஜோக்ஸ்
"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன்தான், பயப்பட வேண்டாம்னு. அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க?"
"அடி அசடு… நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி. டாக்டர்கிட்ட!
– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை
"மாமா கோவத்துல உங்க பொண்ணை கன்னத்துல அறைஞ்சுட்டேன்."
"அதெல்லாம் இருக்கட்டும் மாப்ளே… இப்ப நீங்க எந்த ஆஸ்பத்திரில இருக்கீங்க?"
– எம்.ராஜதிலகா, அரவக்குறிச்சிப்பட்டி
மேனேஜர்: "மறு பிறவியில் உனக்கு நம்பிக்கை உண்டா?"
க்ளார்க்: "நிச்சயமா இல்லைங்க சார். ஏன் கேக்குறீங்க?"
மேனேஜர்: "நேத்திக்கி நீ உங்க பாட்டி சாவுக்குப் போன பிறகு உன்னைத் தேடி உங்க பாட்டி இங்க வந்தாங்க."
– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை
"அப்படியா?"
"ஆமா… நாலஞ்சு வருஷமா போலீஸ் தேடியே கிடைக்கலன்னா பாத்துக்குங்க."
– எம்.ராஜதிலகா, அரவக்குறிச்சிப்பட்டி
"அந்தப் பொம்பளை நெருப்பாச்சே… அவ வீட்டுக்காரன் எப்படி அவகூட காலம் தள்ளுறான்?"
"அவன் 24 மணி நேரமும் தண்ணிலதான் இருப்பான்!"
– வி. ரேவதி, தஞ்சை
"எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்."
– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை