0,00 INR

No products in the cart.

இரண்டு துருவங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டேன்.

நா.கண்ணன்

மெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது தத்துவ ரீதியாக மானுடவியலுக்கும், அறிவியலுக்கும் ஒரு பனிப்போர் இருந்து கொண்டே இருக்கும். மானுடவியல் உணர்வு சேர்ந்தது, எனவே கலை, இலக்கியம், கோலாகலமென இருக்கும். ஆனால். அறிவை மட்டும் சார்ந்த அறிவியல் உணர்ச்சியற்று வெறுமனே இருக்கும் என்பதோர் புரிதல். இதில் உண்மை இல்லாமல் இல்லை. அறிவியல் கல்வி என்பது பரீட்சித்துப் பார்த்து உண்மையானால் அதை நம்புவது, சந்தேகமாக இருந்தால் கொஞ்சம் காலம் பொறுத்து மீண்டும் ஆய்வு செய்வது, போதிய தரவு கிடைக்கவில்லை யெனில் நம்பாமல் விடுவது. நம்பிய கருத்தாக்கங்கள் கூட வேறொரு பரிசோதனை மூலம் தவறு என நிரூபிக்கப்படலாம். அப்போது இதுவரை கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கத் தயாராக வேண்டும். அறிவியலில் முற்றும் முழுவதுமான உண்மை என்று ஏதும் கிடையாது. தெரியாத புலத்தை மீண்டும், மீண்டும் ஆராய்ந்து நகர்ந்து கொண்டு இருப்பதுதான் அறிவியல். ஆனால் கலைசார்ந்த, சமயம்சார்ந்த பரப்பில் நம்பிக்கைகள் மிக முக்கியம். இதுதான் உண்மையென்று ஒன்றை நிறுவி விட்டால் அதை ஆண்டாண்டு காலம் நம்பிக்கொண்டு இருப்பது மானுடவியல். எனவே, அங்கு மாற்றங்கள் காண்பது அரிது. அங்கு சோதனைகளுக்கு இடமில்லை. சோதிக்க வேண்டும் என்பவருக்கு இடமில்லை. இதனால்தான் செமத்திய மதங்கள் கோலோட்சும் மேலைக் கலாசாரத்தில் சமயத்திற்கும், அறிவியலுக்கும் எப்போதும் ஒரு உரசல் இருந்து கொண்டே இருக்கும். இதனால்தான் சார்லஸ் டார்வின் தனது ’தக்கவை தழைக்கும்’ எனும் கூர்தலறக் கோட்பாட்டை அறிவியல்பூர்வமாக அறிந்த பின்னும் வெளியிட 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். தேவாலயத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கில்லை. வெளியிட்ட பின்பு பிற்போக்காளர்கள் குரங்கிலிருந்து எப்படி மனிதன் வந்திருக்க முடியும்? இப்படியெல்லாம் கொள்கைகளை முன்வைக்கும் டார்வினுக்குக் குரங்கு தந்தை வழியிலா? இல்லை தாய் வழியிலா உறவு? எனக் கிண்டல் செய்தவண்ணம் இருந்தனர். இக்கொள்கை அமெரிக்கா போனபோது, ”குரங்கு விசாரணை” என்றொரு கூத்து பல ஆண்டுகள் நடந்தன. பல்வேறு ஆய்வுகள், பல்வேறு துறைகளில் தொடர்ந்து செய்தபின் கூர்தலறம் நிலை பெற்றது.

பேராசிரியர் ஆபிரஹாம் இந்திய கிறிஸ்தவர்கள் இன்னும் பின் தங்கிய கண்ணோட்டத்தில் உள்ளார்கள், எனவே தமிழர்கள் ஈ.வே.ரா. பெரியார் வழியில் சிந்திக்க வேண்டுமென்றார். பெரிய போராட்டங்கள் தமிழக மண்ணில் நடந்து தமிழகம் இரண்டாக உடைந்தது. முற்போக்குவாதிகள் எனும் கூட்டமொன்று. சமயவாதிகள் எனும் ஆத்திகக் கூட்டமொன்று. ஆனால் இவர்கள் இருவருமே யாரோ சொன்னதை நம்பித்தான் இருந்தார்களே தவிர சுயதரிசனம் பெற்றவர்களாகத் தெரியவில்லை. எனவே, இந்த விவாதம் தமிழகத்தைப் போலிகள் நிரம்பிய மாநிலமாக மாற்றிவிட்டதாக முற்போக்கு சிந்தனையுள்ள சில மாணவர்கள் கருதினர். முற்போக்குவாதிகளுக்கு முழு அறிவியல் புரிதல் இல்லை என்பது இவர்கள்வாதம். அறிவியல் சார்ந்து, திறந்த மனதோடு முற்போக்காக வாழ்பவர்கள் தமிழகத்தில் குறைவு என நினைத்தனர் இவர்கள். குறிப்பாக மேலைநாடு மிக விரைவாக அறிவியல்சார்ந்து வாழத் தொடங்கிவிட்டது. இங்கு பேச்சின் வேகம் இருந்த அளவிற்கு வாழ்வியல் செயற்பாடு இல்லை என்பதோர் குறை. இக்கருத்துக்களை நளினமாக வெளியிட வானம்பாடிகள் இயக்கம் இடம்கொடுத்தது.

தெய்வம் நின்று கொல்லும்

ஹாலிவுட் சூப்பர்மேன்
கிறிஸ்டோபர் ரீவ்ஸ்
முதுகெலும்பு மரத்துப் போய்
முடமாகிவிட்டார்.

பழைய ஞாபகத்தில் பத்துக்காசு போட
முகத்தில் விட்டெறிந்தாள்
பெருமாள் கோயில் பிச்சைக்காரி.

தெய்வம் மனித உருவில் என்று நம்பிய
எம் பெரியவரும் படுத்துவிட்டார் முடக்குவாதத்தில்.

சங்கர மடத்துக்கு
எதிரேதான்
பெரியார் சிலையும்…
இரண்டுக்கும் கூட்டம்
போகத்தான் செய்கிறது.

தினம் ஒரு கிளாஸ் சாக்கே குடி
நூறு வயசு வாழலாம் என்கிறது
ஜப்பானிய பெரிசு.

சாப்பாடே வேண்டாம்
இயேசு கருணை போதும் என்கிறாள்
இத்தாலியக் கிருத்துவ மாது.

இப்படிச்…
சிந்தனையில் லயிக்க…

வந்த பஸ் தப்பிப் போச்சு
ஏழு மைல் நடக்க வேண்டும்..

தனியாக ராவில்……

இப்படியெல்லாம் கவிதை வரும். ஒருமுறை முழு ஆத்திகரான என் வேதிமவியல் பேராசிரியர் டி.கே. நாராயணனையும், முழு நாத்திகரான ஜே.சி.பி. ஆபிரகாமையும் மோதிப் பார்த்துவிடுவது என மாணவர் சார்பில் ஒரு விவாத மேடையை ஏற்பாடு செய்தேன். இருவரும் மோதிக் கொள்வது சுவாரசியமாக இருந்தது. ஆயினும், முழுத்தெளிவை இருவராலும் தர முடியவில்லை. அறிவியலை நம்பும் நான் தனியாக நடைபோட முடிவு செய்தேன்.

இவ்வளவு நடக்கும்போது தாமரை இலைத் தண்ணீர் போல் எதிலும் ஒட்டாமல் செயல்படுவார் டாக்டர் துவாரகநாத். தானுண்டு தன் ஆய்வு உண்டு என ஏதாவது செய்துகொண்டே இருப்பார் துவாரகநாத். இது எங்கள் இருவருக்கு ஆர்வத்தை உண்டு பண்ணியது. இருவரும் டாக்டர் துவாரகநாத்திடம் போய் நாங்களும் ஆய்வு செய்ய விரும்புகிறோம் என்றோம். நான் சூழலியல் சார்ந்து எவ்வாறு பூச்சிக்கொல்லியான டி.டி.டி பூச்சிகளைக் கொல்கிறது எனும் ஆய்வை எடுத்துக் கொண்டேன். என் சகா மீன் வளர்ப்பில் ஆய்வு செய்வதாகச் சொன்னார். அறிவியல் இளம்கலை மாணவர்கள் ஆய்வு செய்துதான் பாஸாக வேண்டும் என்றெல்லாம் சட்டமில்லை. ஆயினும் நாங்கள் டாக்டர் துவாரகநாத் பின் நின்றோம். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்றுதானே சொல்கிறார்கள். அன்று ஆய்வைத் தொடங்கிய குமரகுருவும் நானும் மேலே, மேலே முன்னேறி இருவரும் இரண்டு முனைவர் பட்டங்கள் பெற்றோம். பேராசிரியர் குமரகுரு பின்னால் மதுரைப் பல்கலைக்கழகம் வந்து, மீனாட்சி சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆனார். நான் இந்தியா வரவே இல்லை. அவர் தமது இரண்டாவது முனைவர் பட்டத்தைக் கனடாவில் பெற்றார். நான் ஜப்பானில் பெற்றேன்.

பின் குமரகுரு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார். நான் அமெரிக்கன் கல்லூரியிலேயே படிப்பைத் தொடர்ந்தேன். முதுகலைக்கு வந்த போதும் டாக்டர் துவாரகநாத்திடம் ஆய்வு செய்தேன். வெளிநாடுகளில் முதுகலைப் பட்டத்தை முழுமையாக செய்தும் முடிக்கலாம், இல்லை பாடங்கள் படித்துப் பரிட்சை எழுதியும் முடிக்கலாம். அப்படியெல்லாம் ஏதுமில்லை நாங்கள் படித்தபோது. ஆனால், ஆய்வு முறை என்பது புதிதாக வந்திருந்தது.

டாக்டர் துவாரகநாத் இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்று வேலையில் இருந்தார், டாக்டர் பெர்லின் அமெரிக்க பெர்க்கிலி பல்கலைக்கழகத்தில் பெற்று வேலையிலிருந்தார். ஏற்கனவே “டாக்டர்” எனும் பட்டத்தை மருத்துவ சீட் கிடைக்காததால் தவறவிட்ட எனக்கு இவர்கள் இருவரும் வானில் மிளிரும் நட்சத்திரமாகப் பட்டனர். இருவரோடும் நெருங்கிப் பழக ஆசைப்பட்டேன். ஆனால், ஜே.சி.பி ஆபிரகாம் அவர்களுக்கு இந்த இருவரையும் பிடிக்கவில்லை. ஏனெனில் அவரிடம் டாக்டர் பட்டம் இல்லை. டாக்டர் துவாரகநாத் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்! டாக்டர் பெர்லின் முதுகலைத்துறை பேராசிரியராக இருந்தார். இந்த இருவருமே ஜே.சி.பி.க்கு ஜூனியர்கள். வழக்கம் போல் நான் இருதலைக்கொள்ளி எறும்பு போல் இந்த இரண்டு துருவங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டேன். சாதாரண மூன்றாம் நிலை மாணவர் எனில் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால் இந்த உலகைப் புரட்டும் நெம்புகோல் கவிதை எழுதும் நான் முதல் நிலையில் இருந்தேன். எல்லாம் அறிய வேண்டும் என ஆசைப்பட்டேன். பெர்லின் அவர்களின் அமெரிக்கப் பின்புலம் ஒருபுறம் இழுத்தது, துவாரகநாத்தின் முனைவர் ஆய்வு இன்னொரு புறம் இழுத்தது. இரண்டையும் அறுத்து எறிந்துவிட்டு தன்னோடு இருக்கும்படி வேண்டினார் ஜே.சி.பி.

(தொடரும்)

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

குருடர்களின் யானை

0
ஒரு நிருபரின் டைரி - 21 - எஸ். சந்திரமெளலி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற லயோலா கல்லூரியின் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப்...

தேவ மனோகரி – 21

1
தொடர்கதை                                               ...

இது கடவுளின் ருசியுள்ள நாடு

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 21 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா   கொச்சியிலிருந்து அதிரப்பள்ளிக்குப் போகும் வழியில்தான் அந்த டீக்கடை இருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரன் தம்பியின் ‘விளிச்சு விளி கேட்டு’ (அழைத்தாய் கேட்டேன்) என்ற...