உங்கள் குரல்

உங்கள் குரல்
Published on

ஆற்றைப் போல அமைதியாக…

வ்வொரு நாளும் முழுமையாக வாழ, ஆழமாக நேசிக்க, புதிதாய் ஏதேனும் கற்று கொள்வது சாலச் சிறந்தது.  என்ன ஒரு அருமையான கருத்து. அமுதமொழியில் சொல்லி இருப்பதுபோல் பொறுமையுடன் காத்திருந்தால் வெற்றி நிச்சயம்.
– கலைமதி. நாகர்கோவில்

டைரி என்றாலே சுகம் தான். அதுவும் பிறர் டைரியை படிப்பது என்றால் சொல்லவே வேண்டாம். மௌலியின் "ஒரு நிருபரின் டைரி"  வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. பரத் பாலாவை பற்றி மௌலியின் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
–  தயாளன்,  சென்னை

சுஜாதா தேசிகன் "கடைசி பக்கத்தில்"  கண் கலங்க வைத்து விட்டார். அவர் அம்மாவை பற்றி எழுதி. காக்கி பேக் பார்த்தவுடன் எனக்கு என் பள்ளி நினைவுகள் வந்து விட்டது.

தி. ஜானகிராமனின் மோகமுள்ளோடு அவரின் "ஜான்ஸ்போர்டை" ஆசையை compare செய்தது செம்ம finishing touch.

தேவ மனோகரி தொடர் சிறப்பாகயிருக்கிறது. அதிக ஆர்பாட்டம் இல்லாத ஆற்றைப் போல அமைதியாகச் செல்லுகிறது.
– நல்ல பெருமாள், திருவண்ணாமலை

ம்முட்டியின் வழக்கறிஞர் வாழ்க்கையை அவர் எழுதும் விதம் அவர் ஒரு நல்ல நடிகர் மட்டுமில்லை, நல்ல  கதை சொல்லியாகவும் இருக்கிறார். நீதிமன்றத்தில் அந்த  வயதான தம்பதியினரின் நிலையை  விவரித்திருக்கும் விதம்  அருமை.  Very touching.
– ராஜி ரகுநாதன், சென்னை

வாண்டுகள் நடித்த பொன்னியின் செல்வனைப்  பார்க்க ஆவலாக உள்ளது. வீடியோ கிடைக்குமா?
– சங்கர பாண்டியன், திருநெல்வேலி

ல்வியின் அருமையை அழகாகச் சொல்லும் உலக குடிமகனை ஒவ்வொரு மாணவனும் படிக்க வேண்டும். நானும் 'மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவன்' என்ற  முறையில் பெருமை கொள்கிறேன்.
– ஜான் கிரிஸ்டோபர், சிங்கப்பூர்

ருப்பு வெள்ளையில் "வண்ண வண்ண கனவுகள்" என்ற தனுஜா ஜெயராமனின்  கட்டுரை நூற்றுக்கு நூறு உண்மை. ரசிக்க வைக்க ஒரு கட்டுரையை கொடுத்து எங்களை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்ற கல்கி இதழுக்கு பாராட்டுக்கள். எங்களை மலரும் நினைவு காலத்திற்கு கொண்டு சென்றது அருமை.
– ராதிகா, மதுரை

வ்வொரு வாரமும் 'கொஞ்சம் சிரிங்க பாஸ்' என்று "கல்கி" பக்கத்தில் வரும் வாசகர்களின் ஜோக்ஸ் ஒவ்வொன்றும் அருமை. எங்களை மறந்து சிரிக்க வைக்கிறது. மிகவும் தரமான ஜோக்குகளை தேர்ந்தெடுத்து பிரசுரிக்கும் ஆசிரியரின் நகைச்சுவை உணர்விற்கு ஒரு ராயல் சல்யூட். இந்த வாரம் வந்த ஜோக்குகளும் நான் உங்களை சிரிக்க வைப்பேன் என்று போட்டி போட்டுக் கொண்டு சிரிக்க வைத்தது.

ஆர். கிரிஜா அவர்கள் எழுதிய சிறுகதை மிகவும் அருமை. அதைப் படித்ததும் கடைசியில் வந்த "தெய்வீக காதல்" என்பது தான் தலைப்பாக இருக்கும் என்று எண்ணினேன். நளினி பாவம் புரிந்து கொள்ளாமல் இப்படி நடந்து கொண்டது வருத்தமாக இருந்தாலும் மிகவும் ரசிக்க வைத்த காதல் கதை. காதலர் தினத்திற்காக மிக அருமையான காதல் கதையை பிரசுரித்த கல்கி இதழுக்கு பாராட்டுகள்.
– உஷா, மதுரை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com