0,00 INR

No products in the cart.

கூர்மன்  என்பவர் யார்

நேர்காணல்

– பரணி

 

ருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் அறிந்துகொள்ள முடியுமா?  இது குறிந்து நீண்ட நாட்களாகவே மனோதத்துவ நிபுணர்கள், உளவியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கிறார்கள்.  இந்தத் திறன் உள்ளவர்களை ஆங்கிலத்தில்  மெண்டலிஸ்ட் என அழைக்கிறார்கள். இதன் தமிழாக்கம் தான் கூர்மன்  (தமிழில் மென்டல் என்ற  வார்த்தைக்கு நாம் அறிந்திருக்கும் தவறான  அர்த்தம் கற்பித்திருக்கிறோம்)அப்படிபட்ட கதாபாத்திரங்களை வைத்து சில ஆங்கிலப்  புத்தகங்களும் வந்திருக்கின்றன.  ஆனால், அப்படி ஒரு பாத்திரத்தை முன்வைத்து  தமிழில் ஒரு திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்காலஜிகல்,  த்ரில்லர் திரைப்படம் தான் கூர்மன்.

இந்த சக்தியைப் பெற்றிருக்கும் நாயகனைச்  சுற்றி நிகழ்கிறது கதை . இதன் கதாநாயகி  நடிகை ஜனனி ஐயரை சந்தித்தபோது…

பிரையன் B. ஜார்ஜை  ’தெகிடி’ படத்திலிருந்தே எனக்குத் தெரியும்.  இந்தக் கதையை கேட்ட நான்  அவரிடம், ’நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன்’ என்றேன். அந்த அளவு  என்னை கவர்ந்த கதை. மனதில் உள்ளதை  கண்டுபிடிக்கும்  ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உள்ளது. நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு  புதிய பாணிக் கதையாகப் பேசப்படும்.

இந்தப் படத்தின் தொடக்க விழாவை நடத்தியதில் கூட  ஒரு புதுமையைச்  செய்தனர்  படக்குழுவினர்.  மனதில் உள்ளதை அறியும் மென்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்பிடிக்கும் நிகழ்வினை  செய்துகாட்டினர். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கின

படம் ரிலீஸாகி தியேட்டர்களில் பார்க்கும் போதே அந்த  ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ?

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை

சிபிராஜ் நேர்காணல் ராகவ்குமார்    சிபிராஜ் நடிக்க வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அவ்வப்பொழுது படங்கள் தந்தாலும் திரும்பி பார்க்கும் வகையில் படங்கள் தருகிறார். விரைவில் வெளிவர இருக்கும் ‘ரங்கா’ பட வேலைகளில் பிசியாக இருந்தவர், நேரம்...

காவல்துறை கதையில் காதல் எதற்கு?காம்ரமைஸா?

‘டாணாக்காரன் இயக்குனர் தமிழ்’ நேர்காணல் : ராகவ்குமார்   “காவல் துறையின் வழிமுறைகளும், அதன் சட்டங்களும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இது மாற்றப்படவேண்டும்” என்ற கோரிக்கை பல்வேறு அமைப்புகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் எழுப்பப்பட்டுவருகின்றன. முதல் முறையாக இந்த குரல் முன்னாள்...

பொண்ணுங்க மனசு கஷ்டப்பட்டா நான் தாங்க மாட்டேன்.

நேர்காணல் - ராகவ்குமார்   "சார் இது அடல்ட் காமெடி படம் தான் "கண்டிப்பா தப்பான படம் கிடையாது. சொன்ன புரிஞ்சுகோங்க "என்று பத்தாவது முறை அடித்து சொல்கிறார்" வெங்கட் பிரபு. ‘மாநாடு’ தந்த வெற்றியே இன்னமும்...

இதை இன்னமும்கூட உரக்கச் சொல்லி இருக்க வேண்டும்.

‘கிளாப்’ படத்தின் இயக்குநர் ப்ரித்வி ஆதித்யா நேர்காணல்   - ராகவ்குமார்   தமிழ் மொழியில் பெண்களின் தன்னம்பிக்கை சார்ந்த படங்கள் வெளிவருவது மிகக் குறைவு. அதிலும் விளையாட்டுத்துறை சார்ந்த படங்கள் வருவது மிக அரிது. தமிழில் அதிகம் சொல்லப்படாத ஓட்டப்பந்தய...

தொடை நடுங்கி

கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன் ‘சரியான தொடை நடுங்கி’ என்ற சொல்லை நிச்சயம் நாம் எல்லோரும் கேட்டிருப்போம்.  ’தொடை நிஜமாக நடுங்குமா’ என்ற சந்தேகமே வேண்டாம். தொடை நடுங்கும். எனக்கு நடுங்கியிருக்கிறது.  எப்படி என்று...