0,00 INR

No products in the cart.

சின்னத்திரை தொடரை, பெரிய திரையில் பார்க்கும் உணர்வு

முகநூல் பக்கம்

 

 


பட விமர்சனம் 

 

டத்தின் கதை ஏற்கெனவே தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த கதைதான். ஆனால் திரைக்கதையும் மிகவும் பழசாக இருக்கிறது. ஓல்டு ஒயின் நியூ பாட்டில் என்பார்கள். ஆனால் கதைதான் பழையது என்றால், திரைக்கதை அரதப் பழசாக இருக்கிறது.

எல்லா காட்சிகளும் மிக மேலோட்டமாக நாடகத் தன்மையுடன் நகர்கின்றன. நாடகத் தன்மை என்றால் தொலைக்காட்சி தொடர்கள் அளவுக்கு நாடகத்தன்மையாக இருக்கின்றது. படத்தில் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் தத்துவம் பேசுகிறார். அவர் பேசுவதற்காகத் தத்துவங்களை யோசித்துவிட்டு பின்னர் அதற்கேற்ப காட்சி அமைத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்த்தும் கீர்த்தி சுரேஷும் அண்ணன் – தங்கையாக வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் வடமாநிலத்தில் இருந்து படித்துவிட்டு வருவதாக சொல்கிறார்கள். அவர் யார், என்ன படித்தார் என எந்த தகவலும் இல்லை. கீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல, ரஜினிகாந்த், சூரி, நயன்தாரா என இந்தப் படத்தில் வரும் நடிகர்களின் வேடங்கள் மேலோட்டமாகவே எழுதப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக படத்தில் ரஜினிகாந்த்துடன் சூரி, வேல ராமமூர்த்தி வருகிறார்கள். அவர்களுக்கும் ரஜினிகாந்த்துக்கும் என்ன உறவு என்பதுகூட படத்தில் குறிப்பிடப்படவில்லை.

அண்ணன் – தங்கையாக வரும் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷின் பாசம்தான் படத்தின் அடிப்படை. இருவரது பாசத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்தும் அளவுக்கு காட்சிகள் இல்லை. அடிக்கடி ரஜினி“என் தங்கைதான் எனக்கு எல்லாமே” என்கிறார். மற்றொருபுறம் “என் அண்ணாதான் எனக்கு உயிர்” என்கிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் அது வசனமாக இருக்கிறதே தவிர அவர்கள் பாசத்தை சொல்லக் கூடிய ஒரு காட்சிகூட படத்தில் இல்லை.

மேலும், கீர்த்தி சுரேஷுக்கு வில்லன்களால் வரும் பிரச்னைகூட ஒரே காட்சியில் கடந்துபோகிறது. வில்லன்களும் முறைப்பு விறைப்புடன் வந்து ரஜினிகாந்த்திடம் அடி வாங்குகிறார்கள். பின்னர் மீண்டும் அடிவாங்குகிறார்கள். மீண்டும் அடிவாங்குகிறார்கள். கிளைமேக்ஸில் இறந்துபோகிறார்கள்.

கொல்கத்தா நகரையே ஆட்டிப் படைக்கும் டான்களாக வருகிறார்கள் அபிமன்யூ சிங் மற்றும் ஜெகபதி பாபு. அவர்களை சூரக்கோட்டை கிராமத்தில் இருந்து வரும் ரஜினி, இடது கையால் டீல் செய்கிறார். அப்படி சக்தி வாய்ந்த வில்லன்களை எதிர்ப்பதற்கு புத்திசாலித்தனமாக முயற்சிகளை எதுவுமே மேற்கொள்ளாமல், அரிவாளாலேயே அவர்களை அலற விடுகிறார். சூரி அண்ட் கோ அவருக்கு உதவுகிறார்கள்.

வில்லன் வேடத்தை தான் சிவா இவ்வளவு மேலோட்டோமாக எழுதியிருக்கிறார் என்றால் வில்லன்களைக்கூட புதிதாக யோசித்திருக்கிறார். பல்லாயிரக்கான முறை நம் தமிழ் சினிமா ஹீரோக்களிடம் அடிவாங்கிய அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு உள்ளிட்டோர்தான் இந்தப் படத்திலும் வில்லன்கள்.

பிரகாஷ் ராஜை தத்துவம் பேசியே திருத்தி விடுகிறார் காளை ரஜினிகாந்த்.

மற்றவர்களுக்கு மொழி தெரியாததால் அரிவாளை கையிலெடுக்கிறார். மற்ற நேரங்களில் எல்லாம் அழகாக தமிழ் பேசும் வட மாநில வில்லன்கள் ரஜினிகாந்திடம் மட்டும் ஹிந்தியில் பேசுகிறார்கள். நயன்தாரா அவற்றை மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் ’ஜெய் பீம்’ பிரகாஷ் ராஜ் முறையை கையாண்டிருந்தால் உடனடியாக தமிழ் பேசியிருப்பார்கள்.

ஒரே காட்சியில் சந்தித்துக்கொள்ளும் ரஜினிகாந்த்தும் நயன்தாராவும் சாரக் காற்றே என டூயட் பாட கிளம்புகிறார்கள். குஷ்புவும், மீனாவும் நகைச்சுவைக்கென பயன்பட்டிருக்கிறார்கள். இருவரும் 90களில் ரஜினிக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்தவர்கள். அவர்களை மீண்டும் ரஜினியுடன் நடிக்க வைப்பது என்ற சிவாவின் யோசனை மட்டுமே நன்றாக இருக்கிறது. ஆனால் காட்சிகள் சுவாரசியமாக இல்லை. படத்தில் சூரி, சதிஷ், சத்யன், பாண்டியராஜ், லிவிங்ஸ்டன் என ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள். நகைச்சுவைதான் இல்லை.

படம் முழுக்க ’விஸ்வாசமும்’, ’திருப்பாச்சி’யும் தெறிக்க தெறிக்க காட்சியமைப்பு அமைந்திருக்கிறது.

தன்னுடைய காதலி நயன்தாராவைக்கூட தங்கைக்கு காட்டிடாத அண்ணன் காளையன், தங்கை தன்னிடம் அவளது காதலை தெரிவிக்க முடியாததற்கு அழுவதெல்லாம் வேற லெவல். சூரக்கோட்டை அண்ணாத்த கொல்கத்தாவில் வைரலாகிறார். ஆனால் அது கீர்த்தி சுரேஷுக்கு மட்டும் தெரியவில்லை. வணிகப் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது தான். அதற்காக அதை கொஞ்சம் கூட சேர்க்காமல் இருப்பது நியாயமா?.

காட்சிகளின் வடிவமைப்பு மிக மோசமாக நிறைய தொலைக்காட்சித் தொடர்களை நினைவுப்படுத்தியது. கதையும், திரைக்கதையும் பழையதாக இருக்கலாம். ஆனால் காட்சி அமைப்பும் மிக பழைய முறையில் இருந்தது உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கேற்ப ஒளிப்பதிவாளர் வெற்றியும் சோகக் காட்சியில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக குளோஸ் அப்பில் காட்டி சின்னத்திரை தொடரை, பெரிய திரையில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சிவாவின் இயக்கம்தான் பழையதாக இருக்கிறது என்றால் டி.இமானும் தனது இசையில் தேவாவை நினைவுபடுத்துகிறார். அனைவருக்கும் பிடித்த ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தில் ஒரு காட்சிகூட ரசிக்க முடியாததுதான் சோகம். இந்தத் தீபாவளிக்கும் ரஜினி ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே..

#நன்றி. தினமணி.

Firthouse Rajakumaaren Nazeer     முகநூல் பக்கத்திலிருந்து… 

 

 

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அந்த குழந்தைகளில் ஒன்று வளர்ந்தவுடன் பிற்காலத்தில் போலந்து நாட்டின் பிரதமராகியது.

0
முகநூல் பக்கம்   (ப்யாரீப்ரியன்.பெரிய ஸ்வாமி) இணையப் பக்கத்திலிருந்து...      இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் போலந்து நாட்டினை கைப்பற்றச் சென்றபோது, போலந்து நாட்டைச் சேர்ந்த 500 பெண்களையும்,200 குழந்தைகளையும் ஒரு ராணுவக் கப்பலில் ஏற்றி அவர்களை...

என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி.

0
முகநூல் பக்கம்     நெல்லை கணேஷ் முகநூல் பக்கத்திலிருந்து...   உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப்...

தமிழ்த் தாத்தா சேர்த்து வைத்த சொத்தில் வாழும் பேரன்கள் நாம்.

0
  உ.வே.சவின் "என் சரித்திரம்"   150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர். 3000க்கும்...

எப்படி மரியா இதெல்லாம் சாத்தியமாயிற்று?

0
முகநூல்  பக்கம்   உள்ளத்தில் உறுதியாக ஒன்றை நினைத்து விட்டால் அந்த உள்ளம் எப்பாடுபட்டாவது அதனை முடித்துக் கொடுத்து விடும். டாக்டர் மரியா விஜி. கேரளத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண். சக்கர நாற்காலி இல்லாமல் எங்கேயும்  போக...

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா ??

0
முகநூல் பக்கம்   கண்முன்னால் நேர்ந்த நிகழ்வில் நெகிழ்ந்து எழுதுகிறேன். நிறைகளைச் சத்தமாய்ச் சொல்ல வேண்டும் தானே ? எங்கள் ஸ்டாஃப் ப்ரீத்தி (Woman Health volunteer )சமீபத்தில்தான் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்'கீழ்  பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்....