0,00 INR

No products in the cart.

இடைத்தேர்தல் முடிவுகளில் ஒலிக்கும் எச்சரிக்கை மணி

தலையங்கம்

 

ண்மையில் 13 மாநிலங்களில் 3 மக்களவை தொகுதி, 29 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் மரணங்கள், கட்சி தாவல்களினால் இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. 29 சட்டசபை தொகுதிகளில் 15-ல் பாஜக வென்ற இடங்கள்; 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. எஞ்சிய இடங்களில் மாநிலக் கட்சிகள் வென்றிருந்தன.

இந்திய அரசியல் களத்தில் இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) அசைக்கவே முடியாது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துகளை 14 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கித் தெறிக்கவிட்டிருக்கிறது.

நாட்டின் வடகிழக்கு மாநிலமான அஸாமில்தான் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெருமிதப்படும்படியான வெற்றியைப் பெற்றுள்ளன. அஸாமில் 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 5 தொகுதிகளில் 3-ல் பா.ஜ.க.வும், 2-ல் அதன் கூட்டணிக் கட்சியும் அமோகமான வெற்றியைப் பெற்றுள்ளன.

மே.வங்கத்தில் பா.ஜ.க. படுதோல்வியைச் சந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் “திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றலாம்” என்கிற பா.ஜ.க.வின் கனவு அனேகமாகக் “கண்ணுக்கெட்டிய தொலைவில் சாத்தியமே இல்லை” என்கிற வகையில்தான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

மே. வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸின் வாக்கு வங்கியைக் கபளீகரம் செய்துதான் பா.ஜ.க. அங்கே காலூன்ற முயன்றது. ஆனாலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீதான மக்களின் மகத்தான நம்பிக்கை முன்னால் பா.ஜ.க.வின் கனவுகள் அத்தனையும் தூள் தூளாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு மரண அடி. ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.க., 3 தொகுதி இடைத்தேர்தல்களில் படுமோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது.
3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருக்கிறது.

மம்தா பானர்ஜி ஏற்கெனவே சொன்னதைப் போல ”பா.ஜ.க. ஒன்றும் வீழ்த்தவே முடியாத ஒரு வல்லமை கொண்ட சக்தி அல்ல” என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாகவே நிரூபித்திருக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே பெட்ரோல் டீசல் விலையில் கலால் வரியை குறைத்திருப்பது, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற அதிரடிகள். ஆளும் கட்சி அதிர்ச்சியில் ஆடிப்போயிருப்பதைத்தான் காட்டுகிறது.

பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைவது வழக்கம். இந்தத் தேர்தல்களில் அது நிகழாததால் மக்களிடையே ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையும் அதிருப்தியும் நிலவுகிறது என்று பொருள்.

பா.ஜ.க. தலைவர்கள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.

2 COMMENTS

 1. சிந்திக்க வேண்டியது மக்களும் தான். சிற்சில சலுகைகள் தந்து ஏமாற்ற முனைவார்கள்.மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்
  திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

 2. எந்த இடைத்தேர் தல் நடந்தா லும் மக்களின் நம்பிக்கை பெ றுபவர்களால் தான் வெ ற்றி
  யைப் பெற முடியும்.அது மட்டுமன்றி ே பா
  ட்டியிடும் வேட்பாளருக்கு அதிர்ஷடமும் துணை யாக இருத்தல் வேண்டும்.
  து.சேரன்
  ஆலங்குளம்

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

 “வருமுன் காப்பானாக இருங்கள்”

1
தலையங்கம்   வேளாண் சட்டங்கள் அரசால் திரும்பப்பெறப்போவதற்கான அறிவிப்பை தங்கள் வெற்றியாக எதிர்கட்சிகள் கொண்டாடுகின்றன. இந்தக் கொண்டாட்டங்களில் அவர்கள் கவனிக்கத் தவறிய ஒரு மிக முக்கியமான விஷயம். அந்த அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் தெரிவித்த ‘ஒரே...

பாலியல் ராட்சசர்களிடமிருந்து நம் குழந்தைகளைக் காப்போம்

2
தலையங்கம்   அண்மையில் பள்ளிகளில் மாணவியர் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் செய்திகள் தொடர்ந்து  வெளியாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பொதுக் கவனத்துக்கு வரும்போது எல்லாம் நமது சிந்தனைகளும் கோபங்களும் அந்தக் குறிப்பிட்ட சம்பவத்தை...

வீடு தேடி வரும் கல்வி

0
தலையங்கம்   இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலமான  கொரோனா  பெருந்தொற்று. கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், மிக முக்கியமானது கல்வி. ஓர் ஆண்டுக்கு முன் 'சில நாட்களுக்கு' என்ற அறிவிப்புடன் மூடப்பட்ட பள்ளி,...

சோஃபா திருடன் 

சுஜாதா தேசிகன்                                             ...

உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?

0
வாசகர் கேள்வியும் - வல்லுநர் பதிலும்   உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?       - சந்திர மோகன், வேலூர். வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார் பொதுநல மருத்துவர்  கு. கணேசன்   உடற்பயிற்சிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்குச் சரியான காரணங்கள் இதுவரை வரையறுக்கப்படவில்லை....